“துன்கிந்த” கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலில் காவியமான கடற்கரும்புலி மேஜர் கடலரசன், கடற்கரும்புலி மேஜர் கஸ்தூரி, கடற்கரும்புலி கப்டன் அன்புமலர், கடற்கரும்புலி கப்டன் கனியின்பன் வீரவணக்க நாள் இன்றாகும்.
30.10.2001 அன்று யாழ். மாவட்டம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் “துன்கிந்த” எரிபொருள் வழங்கல் கப்பல் வழிமறிக்கப்பட்டு தாக்கி மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் கடலரசன் / சமுத்திரன், கடற்கரும்புலி மேஜர் கஸ்தூரி, கடற்கரும்புலி கப்டன் அன்புமலர் / கேசவி, கடற்கரும்புலி கப்டன் கனியின்பன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
விடுதலைக்கு வித்திட்டு கலடன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள்.!
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”