இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home வீரத்தளபதிகள் தேசியத் தலைவர் அவர்களின் நிழலாக தொடர்ந்த தளபதி கேணல் சங்கர்

தேசியத் தலைவர் அவர்களின் நிழலாக தொடர்ந்த தளபதி கேணல் சங்கர்

முல்லைத்ததீவு மாவட்டம் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும் மூத்த தளபதியுமான கேணல் சங்கர் அவர்களின் இறுதி வீரவணக்க நிகழ்வில் இடம்பெற்ற வீரவணக்க உரையிலிருந்து …..

’20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எமது தேசியத் தலைவர் அவர்களுடன் உற்ற நண்பனாக இருந்து, இந்திய இலங்கை இராணுவங்களுக்கெதிரான அனைத்து நடவடிக்கைகளிலும் பங்கெடுத்த இந்த வீரத்தளபதியின் இறுதி நிகழ்விலே பங்கெடுத்திருக்கின்ற நாங்கள் அனைவரும், அவர்களுடைய குடும்பத்தினருடன் இந்நிகழ்வைப் பகிர்ந்து கொள்கின்றோம்.

’1981ஆம் ஆண்டின் ஆரம்பத்திலே தனது சகோதரன் சித்தார்த்தன் மூலமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்திலே தலைவர் அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்ட சங்கர் அவர்கள் 1983இல் தலைவரோடு முழுமையாக இணைந்துகொண்டார். அன்றிலிருந்து இன்றுவரை சகல நடவடிக்கைகளிலும் பங்கெடுத்தவர் இவர். இவரின் சகோதரன் சித்தார்த்தன் 1986 இல் நாவற்குழி இராணுவ முகாமைத் தாக்கி அழிக்கின்ற முயற்சியில் பென்னம்மான் அவர்களுடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். இவருடைய அடுத்த சகோதரன், இந்தியாவில் இருந்து தமிழீழம் வந்துகொண்டிருந்தபோது, இந்தியாவினதும் இலங்கையினதும் துரோகத்தனத்தால் குமரப்பா புலேந்திரன் அவர்களோடு கப்டன் கரனாக சயனைட் அருந்தி வீரச்சாவடைந்தார்.

அவரின் இரு சகோதரர்கள் 2000 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஓயாத அலைகள் நடவடிக்கையின்போது சிறீலங்கா இராணுவத்தின் எறிகணை வீச்சில் கொல்லப்பட்டனர். மற்றொரு சகோதரன் கொழும்பில் தமிழீழ துரோகக் கும்பல்களினால் அழிக்கப்பட்டார். இப்படியாக இன்று இந்தக் குடும்பம் இந்த விடுதலைப் போராட்டத்தில் தம்மை முழுமையாக இழந்து நிற்கின்றது.

‘இந்திய இராணுவம் இங்கே வந்தபோதுகூட மணலாறு காட்டுப்பகுதியில் தலைவர் செயற்பட்ட காலங்களிலெல்லாம் அவரோடு நண்பனுமாய் சகோதரனுமாய் மட்டுமல்லாது அவரின் உறுதுணையாகவும் நின்றவர். காட்டில் இருந்த காலங்களில்கூட போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் பல ஆண் பெண் போராளிகளுக்கு போர் நுட்பங்களையும், போர்க்கருவிகளையும் பயிற்றுவித்த சிறந்த ஆசான்.

‘இந்திய இராணுவம் வெளியேற்றப்பட்ட காலப்பகுதியில் தலைவரின் எண்ணத்திற்கு புதுவடிவம் கொடுத்து கடற்புறா என்ற பெயரில் கடற்புலி அமைப்பொன்றை உருவாக்கியவர். முதன்முதலில் பாரிய கப்பல் ஒன்றின் மீதான கடற்கரும்புலித் தாக்குதலுக்காக கொலின்ஸ், காந்தரூபன், வினோத் ஆகிய கடற்கரும்புலிகளை வழிநடத்தி வெற்றிகரமாக அத்தாக்குதலை மேற்கொண்டவர்.

‘ஓயாத அலைகள் ஒன்று, இரண்டு, மூன்று இப்படியாக தலைவரின் நேரடி வழிகாட்டலில் நடக்கின்ற யுத்தங்களின் போது தலைவருடன் கூட நின்று இராணுவ அசைவுகள் போராளிகளின் செயற்பாடுகள் யாவற்றையும் கவனித்து தெளிவுபடுத்தி வெற்றிப்பாதையில் கொண்டுநடத்திய இந்த வீரத்தளபதி இப்போது எங்களோடு இல்லை. தமிழீழத்தினுடைய பல பிரதேசங்களை எமது ஆளுகைக்குள் கொண்டு வந்திருக்கின்ற இந்தக் காலப்பகுதியில் எதிரியின் ஊடுருவல் நடவடிக்கையால் இவர் அழிக்கப்பட்டிருக்கின்றார்.

’20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ மக்களாகிய உங்களுக்காக, காடுகளில் நீரின்றி உணவின்றி உழைத்து இந்த விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வளர்த்தவர் இன்று எதிரியின் ஊடுருவல் அணியால் அழிக்கப்பட்டுள்ளார். சிறீலங்கா இராணுவம் 3 ஆண்டுகளாக பகுதி பகுதியாக ஆக்கிரமித்த பெரும் நிலப்பகுதியை மூன்றே நாட்களில் மீட்டெடுத்துள்ள இந்தக் காலகட்டத்தில் இப்படியான நிகழ்வுகள் இனிமேலும் தொடரக்கூடாது.

எமது விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தவரையும் தலைவரைப் பொறுத்தவரையும் இது ஒரு பெரும் இழப்பு. இந்த நிகழ்வு தமிழீழத்திற்கே ஒரு சோக நிகழ்வு. விடுதலைப் போராட்டம் இலக்கை நோக்கி வீறுநடைபோடும் நேரத்தில் இவ்வாறான சோக நிகழ்வுகள் இனியும் ஏற்படாமல் விரைந்து இலக்கை அடைய உங்களால் ஆன பங்களிப்பை கேட்டுக்கொள்கின்றேன்”

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கேணல் சூசை
சிறப்புத் தளபதி,
கடற்புலிகள்.
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கடற்கரும்புலிகள் மேஜர் ஜெகநாதன், கப்டன் இளையவள் வீரவணக்க நாள்

கடற்கரும்புலி மேஜர் ஜெகநாதன், கடற்கரும்புலி கப்டன் இளையவள் வீரவணக்க நாள் இன்றாகும். யாழ் மாவட்டம் காங்கேசன்துறைத் துறைமுகத்திலிருந்து திருகோணமலை துறைமுகத்தை நோக்கி 30.03.1996 அன்று ரோந்து சென்ற சிறிலங்கா கடற்படையின் கடற்கலம் கொண்ட அணியினரை...

கடற்கரும்புலி கப்டன் இளையவள்

கடற்கரும்புலி கப்டன் இளையவள் இராசலிங்கம் இராஜமலர் உவர்மலை, திருகோணமலை 31.10.1974  - 30.03.1996 காங்கேசன்துறையிலிருந்து திருமலை நோக்கி சுற்றுக்காவல் சென்ற கடற்படை கலங்களை சுண்டிக்குளம் கடற்பரப்பில் வழிமறித்து கப்டன் செவ்வானமும் அவளும் தோழிகள். தான் கரும்புலியாகப் போனபோது தனது குப்பியை இவளிடம்தான் செவ்வானம்...

கடற்கரும்புலி மேஜர் கனி நிலா…!

22.08.2008 அன்று புதிய வரலாறு எழுதிய கடற்கரும்புலி மேஜர் கனி நிலா...! அவளிற்கு 22 அகவை என்று அடித்துச் சொன்னாலும் யாருமே நம்ப மாட்டார்கள். அவளது தோற்றத்திலும் செயலிலும் எப்போதும் சிறு பிள்ளையாகவேஅவள் இருந்தாள்....

கடற்கரும்புலிகள் லெப். கேணல் அன்புமாறன், மேஜர் நிரஞ்சனி, மேஜர் கனிநிலா வீரவணக்க நாள் இன்றாகும்.

கடற்கரும்புலிகள் லெப். கேணல் அன்புமாறன், மேஜர் நிரஞ்சனி, மேஜர் கனிநிலா வீரவணக்க நாள் இன்றாகும்.    நாயாறு கடற்பரப்பில் 22.03.2008 அன்று சிறிலங்கா கடற்படையினரின் டோறா பீரங்கிக் கலம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட...

Recent Comments