இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home slider ‘The Hindu’ சஞ்சிகைக்கு 04.09.1986ல் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வழங்கிய பேட்டி.!

‘The Hindu’ சஞ்சிகைக்கு 04.09.1986ல் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வழங்கிய பேட்டி.!

‘The Hindu’ சஞ்சிகைக்கு 04.09.1986ல் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வழங்கிய பேட்டி

சிங்கள அரசியல் கட்சிகளை எடுத்துக்கொண்டால் இலங்கைத்தீவு சுதந்திரம் பெற்றதாகச் சொல்லப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை ஐக்கிய தேசியக் கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியுமே மாறி மாறி ஆட்சி நடத்தியுள்ளன. இந்த இரு கட்சிகளும் எவ்விதத்திலும் எங்கள் பிரச்சினையை தீர்ப்பதில் அக்கறை காட்டவில்லை.

எமது போராட்டம் சிறிமாவோ அம்மையார் பிரதமாராக இருந்த காலத்தில் துவக்கப்பட்டது என்பதைக்கூட இங்கே சுட்டிக்காட்டலாம். தீவிரவாதப் போராட்டம் 1972ம் ஆண்டில்தான் கூர்மையடையத் தொடங்கியது. இந்த ஆண்டு எங்கள் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டது. பழைய அரசியல் அமைப்பில் தமிழர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கொஞ்ச உரிமைகள் கூட இப் புதிய குடியரசு அரசியல் அமைப்பினால் பறிக்கப்பட்டன. இதற்க்குக் காரணமானவர்களில் இடதுசாரி முற்போக்குக் கட்சிகளில் ஒன்றான லங்கா சமசமாஜக் கட்சியைச் சேர்ந்த கொல்வின் ஆர்.டி.சில்வா என்ற சிங்களத் தலைவரும் ஒருவராவர்.

புதிய அரசியல் அமைப்பை உருவாக்கிய சிறிமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரின் தலைமையிலான கூட்டுக்கட்சி ஆட்சியில் அப்போது கொல்வின் ஆர்.டி.சில்வா மட்டுமல்ல இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பீட்டர் கெனமனும் முக்கியமானவராய் இருந்தார். ‘முற்போக்காளர்களான’ இடது சாரிகள் கூட அரசியல் அமைப்பு மூலம் எமது அடிப்படை உரிமைகளைப் பறித்தெடுக்க முயன்ற இவ்வேளையில்த்தான் எங்க விடுதலைப்போர் கூர்மையடையத் தொடங்கியது.

1972ல் எமது விடுதலைப் போரானது குடியரசு அரசியலமைப்புக்கு எதிராக தீவிரமடைந்தது. இக்குடியரசு அரசியல் அமைப்பை எழுதியவர் நாடறிந்த பழம்பெரும் இடதுசாரியான கொல்வின் ஆர்.டி.சில்வா அவர்கள் என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். குடியரசு அரசியல் அமைப்புக்கு ஒப்புதல் தரமாட்டோம் எனக் கூறி பாராளுமன்றத்தில் தமிழர் பிரதிநிதிகள் வெளிநடப்புச் செய்தார்கள். இந்த அரசியலமைப்பில் கையெழுத்திட்ட ஓரிரு தமிழ்ப் பிரதிநிதிகள் எமது மக்களால் துரோகிகளாகக் கணிக்கப்பட்டார்கள்.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

அளவெட்டி மண்ணில் தடம்பதித்த தேசத்தின் புயல்கள்.!

29.10.1995 அன்று யாழ். மாவட்டம் அளவெட்டி பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா இராணுவத்தினரின் நிலைகள் மீது ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலி கப்டன் சிறைவாசன் / திலீப், கரும்புலி...

“காலவிதை” கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன்.!

வீட்டிற்குமுன் வாகனம் வந்து நின்ற போது செங்கதிர்வாணன் தான் வருகிறான் என்று நினைத்துக் கொண்டாள் தண்ணீருற்று அம்மா. அவனின் அம்மா திருமலையில் என்பதால் இப்போது உறவுகள் எல்லாம் அந்த வீடுதான். அம்மா தலையை இழுத்து...

அளவெட்டி ஆசிரமப் படுகொலை – 26.10.1987

அளவெட்டிக் கிராமம் யாழ். மாவட்டத்தில் வலிகாமத்தின் வடக்குப் பகுதியில் தெல்லிப்பளைப் பிரதேசசெயலகப் பிரிவினுள் அமைந்துள்ளது. அளவெட்டி அம்பனைப் பகுதியில் அளவெட்டி-மல்லாகம் ப.நோ.கூ.சங்கம் அமைந்துள்ள கட்டடத்திற்கு முன்பாக அளவெட்டி இந்து ஆச்சிரமம் அமைந்துள்ளது. அளவெட்டிப் பிரதேசத்திலுள்ள...

கடற்கரும்புலி லெப். கேணல் அமுதசுரபி.!

எம் மனங்களோடு கலந்து போன கடற்புலி மகளிர் துணைத்தளபதி, கடற்கரும்புலி லெப். கேணல் அமுதசுரபி. தாயகத்தைக் காப்பதற்காய் கனத்த மடிகளாய் கரையைத் தேட முயலும் படகுகள் இயந்திரப் பிழைகளால் வேகம் குறைய, தொடரணியாய் எம்...

Recent Comments