சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதிகள் லெப். கேணல் ராகவன், லெப். கேணல் நியூட்டன் உட்பட ஏனைய 12 மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
02.11.1999 அன்று “ஓயாத அலைகள் 03″ பாரிய படை நடவடிக்கையில் முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் சிறிலங்கா படைத்தளம் மீதான தாக்குதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட ‘சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி சிறப்புத் தளபதி’ லெப். கேணல் ராகவன், ‘சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தளபதி’ லெப். கேணல் நியூட்டன் உட்பட ஏனைய 12 மாவீரர்களின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
மேஜர் சாரங்கன்(ஆறுமுகம் கதீபன்)
கப்டன் ஜீவராசா(விசுவலிங்கம் சசிக்குமார்)
லெப்.இருதயன்(வில்விறட் சுதேசன்)
லெப். தரன்(தர்மு செல்வம்)
லெப். செல்லத்தேவன்(பழனியாண்டி விமலன்)
2ம் லெப்.வண்ணன் (நல்லையா ரகுசீலன்)
2ம் லெப்.சூசை(சரவணமுத்து சதீஸ்)
2ம் லெப். புரட்சிமதி(கந்தையா அஜந்தன்)
2ம் லெப். நல்கீரன்(லோகநாதன் தவராசா)
வீரவேங்கை இசைவேந்தன்(செல்வராசா நிசாந்தன்)
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”