இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் தளபதி லெப். கேணல் மனோஜ் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்

தளபதி லெப். கேணல் மனோஜ் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்

கடற்புலி லெப். கேணல் மறவன் மாஸ்ரர், “திருமலை மாவட்ட தாக்குதல் படையணித் தளபதி” லெப். கேணல் மனோஜ், புலனாய்வுத்துறை மேஜர் வில்வம் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

 

11.12.1998 அன்று மன்னார் மாவட்டம் நகர்ப் பகுதியில் எதிர்பாராத விதமாக சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட “புலனாய்வுத்துறை முன்னணிச் செயற்பாட்டாளர்” மேஜர் வில்வம் / ஜோன் அவர்களின் 22ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

11.12.2000 அன்று வவுனியா மாவட்டம் மரகாரன்பிலவு பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் சிவதர்சன் அவர்களின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்

11.12.2001 அன்று திருகோணமலை மாவட்டம் பாலைத்தோப்பூர் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படை புலனாய்வுப்பிரிவு முகாம் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட “திருமலை மாவட்ட தாக்குதல் படையணித் தளபதி” லெப். கேணல் மனோஜ், மேஜர் குமாரவேல், லெப்டினன்ட் கலைமதி, 2ம் லெப்டினன்ட் தேவன் ஆகிய வேங்கைகளின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

11.12.2001 அன்று மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை செற்றடி சிறிலங்கா காவல்துறை நிலையம் மற்றும் படை முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கப்டன் சற்குணராஜ் உட்பட ஏனைய மாவீரகளின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

கப்டன் சற்குணராஜ் (தம்பிப்பிள்ளை மதியழகன் – மத்தியமுகாம், அம்பாறை)
கப்டன் பிரதாவரன் (இராசையா சற்குணம் – மல்வத்தை 2, அம்பாறை)
கப்டன் மணிராஜ் (சிங்காரவேல் கமலேந்திரராசா – வாகரை, மட்டக்களப்பு)
லெப்டினன்ட் மணியரசன் (குமாரசூரியம் ரவிச்சந்திரன் – சித்தாண்டி, மட்டக்களப்பு)
லெப்டினன்ட் முகுந்தன் (நடராசா யோகேஸ்வரன் – விநாயகபுரம், அம்பாறை)
2ம் லெப்டினன்ட் உமாகரன் (சிவசம்பு சசிக்குமார் – கரடியனாறு, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் வினோகரன் (சதாசிவம் சௌந்தராஜன் – நெடியமடு, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் மணிகண்ணன் (கணேஸ் சண்முகநாதன் – சந்திவெளி, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் முகுந்தனன் (அழகப்பொடி ஜெயகாந்தன் – புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் மணிப்பிறை மகேந்திரன் மகேஸ்வரன் – கரடியனாறு, மட்டக்களப்பு)

11.12.2004 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் சுகவீனம் காரணமாக சாவினைத் தழுவிக்கொண்ட கடற்புலி மூத்த உறுப்பினரும் / கடற்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளருமான லெப். கேணல் மறவன் மாஸ்ரர் அவர்களின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக்
காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

லெப்.கேணல் லக்ஸ்மன் .!

நிலையான நினைவாகிச் சென்றோன் நினைவோடு தமிழீழம் வெல்வோம்.!     ‘தமிழீழம்’   இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல.   ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ஒரே கடல், ஒரு தமிழீழம்; தமிழீழம் தனியென்றே...

லெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

மட்டக்களப்பு மாவட்டம் பூமாஞ்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது 28.12.1994 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப். கேணல் லக்ஸ்மன் உட்பட பதினெட்டு மாவீரர்களின்...

மேஜர் செங்கோல்

பெயருக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்களில் செங்கோலும் இணைந்து கொண்டான். நட்பிலும் இவன் செங்கோல் தவறியதில்லை. கடமையில், கட்டுப்பாட்டில், மனித நேயத்தில், தமிழர் பண்பாட்டில் நடுநிலை தவறாது ‘செங்கோல்’ என்ற...

லெப். கேணல் நியூட்டன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்

22.12.2000 அன்று யாழ். மாவட்டம் கைதடி, அரியாலை, நாவற்குழி பகுதிகளில் பெருமெடுப்பில் முன்னேறிய சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட முறியடிப்பு சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் நியூட்டன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க...

Recent Comments