06.09.1990 அன்று யாழ் கோட்டை இராணுவ முகாம் மீதான தமிழீழ விடுதலை புலிகள் முற்றுகையை முறியடிக்க முயன்ற சிங்கள பேரினவாதத்தின் சியாமா செட்டி ரக குண்டுவீச்சு விமானமொன்று பண்ணைக் கடலுக்குள் சுட்டுவீழ்த்தப்பட்டது.
எமது வராலாறுகள் எமது அடுத்த சந்ததியினருக்கு கையளிக்கும் வகையில் குறித்த வரலாற்று ஆவணங்களை வேர்கள் இணையம் தட்டச்சு செய்து மீள் வெளியீடு செய்கிறது
தொலைத் தொடர்புக் கட்டி டத்திலிருந்து பண்ணை ச்சந்திக் காவலரணுக்கு உதவிகள் செல்வதைத் தடுப்பதற் காக மூன்று போர் விமானங்கள் தொலைத் தொடர்பு நிலையப்பகுதியில் மாறி மாறி குண்டுகளை வீ சத்
தொடங்கின,

நிலைக்கு 5-6 யார் முன்னார்லுள்ள காப்பிடப் பகுதியில் வந்து நிலை எடுத்திருத்தும் அரணைக் கைப்பற்ற முடியாது தடுக்கப்பட்டனர்,
புலிகள், காற்றைக் காப்பரணாக்கி உயிரை ரவைகளாக்கி எதிரியுடன் போரிட்டுக்கொண்டிருந்தனர். இந்நிலையில் எதிரி விமானமொன்று ஆகாயத்தில் தாம் விரித்திருந்த ரவைக்குடை யைப் பிய்த்தபடி கீழேவந்து
சரிநேராக எமது நிலைகளைத் தாக்கத்துவங்கியது.
இச்சண்டையில் ஈடுபட்டிருந்த புலிவீரன் ஒருவன் தெரி வித்தான். சுமார் 11.15 மணி இருக்கும், காது செவிடுபடும் படியான குண்டுச் சத்தங்களின் மத்தியிலும் விமானங்களின் இரைச்சல் – மிக மிகக் தாளப்பறப்பதற்கான அறிகுறியுடன் கேட்டது.
பிடரிப்பக்கம் வந்து மோதுவதைப் போன்று மிகவும் தாளப்பறந்து குண்டுவீசுவதும், பின்னர் காணாமல் போவதுமாக இருந்தது. இந்தச் சத்தத்திற்குச் செவி சாய்த்து அ ர ணை விட்டு வெளியே வந்து பார்க்க அவகாசம் இருக்கவில்லை .
இரண்டு, மூன்று தடவை”கள் அவ்விதமாகப் பதிந்து தாக்குவதும் பின்னர் மேலெம்பும் சத்தமும் கேட்டது. இறுதியாக உறுமியபடி பின் புறத்திலிருந்து எமது நிலைகளை நோக்கி வந்த விமானம் வழமைக்கு மாறாக பண்ணைக்கடல் பக்கமாக வித்தியாசமான ஒலி எழுப்பியபடி சென்றது. பின்னர் எந்த விமானத்தின் ஒலியும் எமக்குக் கேட்கவில்லை ..
”ஓடு மீன் ஓட உறு மீன்
வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு”
என்பதைப்போல, தொலைத்தொடர்பு நிலையத்துக்கு அப்பால் ஒரு முனையில் உருமறைப்புச் செய்தபடி விமான எதிர்ப்புத் துப்பாக்கியுடனிருந்த
ஒரு தோழனுக்கு இரை கிடைத்துவிட்டது ,

பண்ணை வீதிக்குக் கிழக் குப் பகுதியில், கோட்டைக்கு நேரே முன்னால் சுமார் 1000 யார் தொலைவில் வீழ்ந்த அதன் பாகங்கள் சிலவற்றை
மறுநாள் எமது கடற்புலிகள் கரை சேர்த்தனர்.விமானம் வீழ்த்தப்பட்டவுடன் சிங்களப் படைக்கு இருந்த இறுதி நம்பிக்கையும்
அற்றுப்போக பண்ணைச் சந்திப் பக்கமாக நகர்ந்துவந்த இராணுவத்தினரில் எஞ்சியவர்கள் இறந்தவர்களின் உடல்களையும், ஆயுதங்களையும் விட்டுவிட்டு கோட்டை பின் பின்புறத்தை நோக்கி பின் வாங்கினர்.

வெளியீடு: விடுதலை புலிகள் இதழ்