இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home சமர்க்களங்கள் “மின்னல்” நடவடிக்கை

“மின்னல்” நடவடிக்கை

தமிழீழத்தின் இதயபூமியான மணலாறு மீது  சிங்கள பேரினவாதம் தொடுத்த தாக்குதல் நடவடிக்கைக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் கொடுத்த பதிலடி முறியடிப்புத் தாக்குதல்.

29.08.1991 –அன்று ஆரம்பித்த ஓபரேசன் மின்னல் (operation Lightening) என்ற பாரிய படையெடுப்பு தமிழீழத் தாயகத்தை இரண்டாக பிளக்கும் நோக்கத்தைக் கொண்டிருந்தது.26 செப்டம்பர் வரையான 28 நாட்கள் நீடித்த இச்சமரில் எமது முதுநிலைத் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல் ஐஸரின் உட்பட எம் 236 வீரர்கள் வீரச்சாவடைந்து
தேசத்தை காத்தனர். 300 வரையான தமது சிப்பாய்களை இழந்து சிங்களப்படை தோல்வியை சந்தித்தது.

1991ம் ஆண்டு ஆகாய கடல் வெளிச்சமரின் பின் விடுதலைப்புலிகள் பலவீனமான நிலையிலிருந்த சமயம் இலங்கை இராணுவம் மணலாற்றுக் காட்டில் “மின்னல்” எனும் பெயரில் பாரியதொரு இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது. இதன் நோக்கம் வட தமிழீழத்தையும் – தென் தமிழீழத்தைப் பிரிப்பதும், விடுதலைப்புலிகளை மேலும் பலவீனப்படுத்தி அதன் மூலம் யாழ். மாவட்டத்தை கைப்பற்றுவதுமேயாகும்.

ஆரம்பத்தில் மணலாற்றுத் தாக்குதலணிகள் தளபதி லெப். கேணல் அன்பு அவர்கள் தலைமையில் முறியடிப்புச் சமரை தொடங்கினர். களநிலைமைகளை உடனுக்குடன் தேசியத் தலைவர் அவர்களுக்கு தெரிவிக்கையில்; தேசியத் தலைவர் அவர்கள் களநிலமையின் முக்கியத்துவத்தை உணர்ந்து தனது மெய்ப்பாதுகாப்பு அணிக்குப் பொறுப்பாகவிருந்த தளபதி பிரிகேடியர் சொர்ணம் அவர்களையும் அவர்கள் தலைமையிலான படையணி மற்றும் லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி உட்பட தமிழீழத்தின் பெரும்பாலான அணிகளையும், ஏனைய படையணிகளையும் கட்டம் கட்டமாக களமுனைக்கு அனுப்பி முறியடிப்புச் சமரைத் தொடர்ந்தனர்.

இக்களமுனையைப் பொறுத்தளவில் பெரும்பாலான போராளிகளுக்குப் புதிய அனுபவமாகவே இருந்தது. ஏனெனில் காட்டுச் சமர்களில் அதுவரையில் அவர்கள் பங்குபற்றவில்லை; அக் காட்டைப் பொறுத்தளவில் திக்குத் திசை தெரியாது, எங்கே சூரியன் உதிக்கிறது மறைகிறது என தெரியாது. சிறிலங்கா இராணுவம் எங்கிருந்து வருவார்கள் என்று தெரியாது. காயமடைந்த அல்லது வீரச்சாவடைகின்ற போராளிகளை பின்தளத்திற்கு நகர்த்துவதற்கு பாதைகள் இல்லை. இதைவிட இராணுவம் ஏவிய எறிகணைகள் மரங்களில் விழ்ந்து வெடிப்பதால் அதிக இழப்புக்களை சந்திக்கவேண்டியிருந்தது. இருந்தாலும் இக்களமுனையின் முக்கியத்துவத்தை உணர்ந்து போராளிகள் கடுமையாக போரிட்டனர்.

இவ்வெற்றிகர முறியடிப்புச்சமர் 29.08.1991 அன்று தொடக்கம் 26.09.1991 அன்றுவரை 28 நாட்கள் நடைபெற்றது இச்சமரை தளபதி லெப். கேணல் அன்பு அவர்களும் தளபதி பிரிகேடியர் பால்ராஐ் அவர்களும் வழிநடாத்த, வரும் அணிகளை ஒருங்கினைத்து களமுனைக்கு அனுப்பி களமுனைக்கு தேவையானவற்றை அனுப்பி செவ்வனவே தளபதி பிரிகேடியர் சொர்ணம் அவர்கள் நெறிப்படுத்தினார்.

தளபதி சொர்ணம் அவர்கள் ஆகாயக் கடல் வெளிச் சமரில் விழுப்புண்ணடைந்து காயம் மாறாமலே இக்களமுனைக்கு வந்ததுடன் தளபதி கேணல் சங்கர் அவர்களும் இணைந்து வரைபடம் மூலம் இராணுவம் எந்தப் பக்கத்தால் வருகிறது அணிகளை எப்படி நகர்த்தவேண்டும் என்கின்ற கட்டளைகளை உடனுக்குடன் முன்னனித் தளபதிகளுக்கு வழங்கி பெரும்பங்காற்றினார்கள். அத்துடன் இந்திய இராணுவக் காலப்பகுதியில் தேசியத் தலைவர் அவர்களை இக்காட்டில் வைத்து பாதுகாத்த பெருமை தளபதி பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் பங்கும் அளப்பரியது. அத்துடன்அக்காலப்பகுதியில் அக்காட்டில் நின்றபடியால் அக்காட்டின் பெறுமதியும் அக்காட்டைப் பற்றிய அனுபவமும் பெற்றிருந்தார்.

இது தாக்குதலின் விநியோகம் மற்றும் விழுப்புண்ணடைந்தவர்களையும், வீரச்சாவடைந்தவர்களையும் வேகமாக பின்நகர்த்தி இராணுவத்தினரின் நகர்வுகளை – திட்டங்களை தொலைத் தொடர்புக் கருவியூடாக (Monitoring) ஒட்டுக்கேட்டு பலபோரளிகளைக் காப்பாற்றி மிகவும் திறம்பட பணியாற்றினார் தளபதி கேணல் சங்கர் அவர்கள்; இப்பாரிய முறியடிப்புச் சமரின் ஒருபகுதியை வழிநடாத்திய லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதி லெப். கேணல் ஐஸ்ரின் மாஸ்ரர் உட்பட 236 போராளிகள் விரச்சாவடைந்தனர்.

ஆகாயக் கடல் வெளிச் சமரின் பின் வெடிபொருட்கள் மற்றும் மருத்துவப் பொருட்களின் கடும் தட்டுப்பாடு நிலவிய காலப்பகுதியிலும். இப்பாரிய முன்னேற்ற நடவடிக்கையை முறியடித்தமை விடுதலைப்புலிகளுக்கு பெரும் வெற்றியே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கடற்கரும்புலிகள் மேஜர் ஜெகநாதன், கப்டன் இளையவள் வீரவணக்க நாள்

கடற்கரும்புலி மேஜர் ஜெகநாதன், கடற்கரும்புலி கப்டன் இளையவள் வீரவணக்க நாள் இன்றாகும். யாழ் மாவட்டம் காங்கேசன்துறைத் துறைமுகத்திலிருந்து திருகோணமலை துறைமுகத்தை நோக்கி 30.03.1996 அன்று ரோந்து சென்ற சிறிலங்கா கடற்படையின் கடற்கலம் கொண்ட அணியினரை...

கடற்கரும்புலி கப்டன் இளையவள்

கடற்கரும்புலி கப்டன் இளையவள் இராசலிங்கம் இராஜமலர் உவர்மலை, திருகோணமலை 31.10.1974  - 30.03.1996 காங்கேசன்துறையிலிருந்து திருமலை நோக்கி சுற்றுக்காவல் சென்ற கடற்படை கலங்களை சுண்டிக்குளம் கடற்பரப்பில் வழிமறித்து கப்டன் செவ்வானமும் அவளும் தோழிகள். தான் கரும்புலியாகப் போனபோது தனது குப்பியை இவளிடம்தான் செவ்வானம்...

கடற்கரும்புலி மேஜர் கனி நிலா…!

22.08.2008 அன்று புதிய வரலாறு எழுதிய கடற்கரும்புலி மேஜர் கனி நிலா...! அவளிற்கு 22 அகவை என்று அடித்துச் சொன்னாலும் யாருமே நம்ப மாட்டார்கள். அவளது தோற்றத்திலும் செயலிலும் எப்போதும் சிறு பிள்ளையாகவேஅவள் இருந்தாள்....

கடற்கரும்புலிகள் லெப். கேணல் அன்புமாறன், மேஜர் நிரஞ்சனி, மேஜர் கனிநிலா வீரவணக்க நாள் இன்றாகும்.

கடற்கரும்புலிகள் லெப். கேணல் அன்புமாறன், மேஜர் நிரஞ்சனி, மேஜர் கனிநிலா வீரவணக்க நாள் இன்றாகும்.    நாயாறு கடற்பரப்பில் 22.03.2008 அன்று சிறிலங்கா கடற்படையினரின் டோறா பீரங்கிக் கலம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட...

Recent Comments