WordPress database error: [Percona-XtraDB-Cluster prohibits use of DML command on a table (verkal.wp_options) that resides in non-transactional storage engine with pxc_strict_mode = ENFORCING or MASTER]
UPDATE `wp_options` SET `option_value` = 'a:7:{i:0;s:22:\"themepunch-ext-a.tools\";i:1;s:22:\"themepunch-ext-a.tools\";i:2;s:22:\"themepunch-ext-a.tools\";i:3;s:22:\"themepunch-ext-b.tools\";i:4;s:22:\"themepunch-ext-b.tools\";i:5;s:22:\"themepunch-ext-b.tools\";i:6;s:16:\"themepunch.tools\";}' WHERE `option_name` = 'revslider_servers'

WordPress database error: [Percona-XtraDB-Cluster prohibits use of DML command on a table (verkal.wp_options) that resides in non-transactional storage engine with pxc_strict_mode = ENFORCING or MASTER]
UPDATE `wp_options` SET `option_value` = '1607091255' WHERE `option_name` = 'revslider_server_refresh'

லெப். கேணல் தர்சன் | வேர்கள்

இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

லெப். கேணல் தர்சன்

களத்திலெங்கும் ஒலித்த குரல்  லெப். கேணல் தர்சன் .!

இடைவிடாத எதிரியின் எறிகணை வீச்சுக்கும், காதைப் பிளக்கும் போர்விமானங்களின் குண்டு வீச்சுக்கும் வடமுனைப் போர் அரங்கு முகம் கொடுத்தவண்ணமிருந்தது.

அது நீண்ட பல நாட்களாக சிறிலங்கா படையின் பிடியிலிருந்த பளைப் பிரதேசம். ஓயாத அலைகள் 03 என்ற வரலாற்று சிறப்புமிக்க போர் நடவடிக்கை மூலம் ஆனையிறவுத்தளத்தை உடைத்தெறிந்த போது அதனை நாம் வெற்றிகரமாக மீட்டுக்கொண்டோம்.

ஓயாத அலைகள் தனது தேவை கருதி ஓய்வுக்குத் திரும்பிய காலம், சிறிலங்காப் படைகள் பளை நகரை கைப்பற்ற துளியும் அனுமதிக்கக்கூடாது என்ற உத்வேகம் பிறக்க, மிக விரைவாகவே அப்பகுதி எம்மால் பலப்படுத்தப்பட்டு வந்தது. காப்பரண்கள் அமைக்கும் பணிகளில் போராளிகளுடன் சேர்ந்து எல்லைப்படையினரும், கிராமியப்படையினரும், வேகமெடுக்கத் தொடங்கினர்.

ஒவ்வொரு காப்பரனுக்குமாக எங்கள் தர்சன் ஏறி இறங்கினான். தனது குறிப்பேட்டில் ஏதேதோ எழுதி எடுத்துக்கொள்வான். அரண்களில் நின்றும், காய்த்துக் குலுங்கும் மாமரங்கள், நாவல்மரங்கள், ஆலமரங்கள் என கண்ணில் படுகின்ற மரங்களிலெல்லாம் ஏறுவான். ஓடிச்சென்று மணல்திட்டில் ஏறி நின்றுகொண்டு சுற்றியுள்ள பிரதேசங்களை அளவிடுவான்.

அவனது ஒவ்வொரு அசைவும், பெறுமதிமிக்க இலக்கு ஒன்றினை கருப்பொருளாகக் கொண்டிருந்ததை பின்னைய நாட்களில், அவன் முடித்த் பணிகளிலிருந்து போராளிகளால் அறியமுடிந்தது.

முன்னணி அரண்களுக்கும், மோட்டார் நிலைகளுக்குமான பொருத்தமான் களச்சூழலை உருவாக்குவதில் மனமொன்றிப் பணியாற்றும் இவன், ஆண் – பெண் போராளிகளின் அரண்கள் யாவற்றிற்கும் நேரில் சென்று நிலைமைகளை ஆராய்வான். படையணிகளின் பொறுப்பாளர்கள், தளபதிகள் என நாளாந்தம் நடைபெறும் சந்திப்புகளும், அடுத்தடுத்த நகர்வுகளை நோக்கிய நேர்த்தியான ஒழுங்கமைப்புக்களையும் சேராமல் செய்தவண்ணமே இருப்பான்.

கேணல் கிட்டுப் பீரங்கி படையணியின் பளை – நாகர்கோவில் பகுதித் தளபதியான லெப். கேணல் தர்சன் தனது கடமைகளின் கனதியை உணர்ந்தவனாக, காற்றாக விரைந்து காணுமிடமெல்லாம் தர்சன், வேண்டிய போதெல்லாம் தர்சன், தேவைகள் உணரப்படும் இடத்தெல்லாம் தர்சன் என தன் போராளிகளின் மத்தியில் சுழன்றான்.

“ரூ சிக்ஸ்”, “ரூ சிக்ஸ்” என்ற குறியீட்டு மொழியில் களமுனைப் போராளிகளாலும், தளபதிகள், மற்றும் கட்டளைத் தளபதிகளாலும் மாறிமாறி இடைவெளி இன்றி அழைக்கப்பட்ட மந்திரச் சொல்லாகவே அவனது நாமம் அமைந்தது.

கரகரத்த தர்சனின் குரல் ஆபத்தான களச்சூழலை தவிடு பொடியாக்கி வழி திறந்துவிடும் வல்லமை பெற்றதாகவே போராளிகளால் உணரப்பட்டது.

பாதுகாப்புத் தாக்குதலாகட்டும், வலிந்த தாக்குதலாகட்டும் எதுவாயினும் களமுனைப் போராளிகள், படையணித் தளபதிகள் தமக்கு ஆதரவாக தமது மனங்களில் தேர்வுசெய்யும் மோட்டார் பற்றறிக் பகுதிக் கொமாண்டராக எங்கள் தர்சன் இருந்தமையானது அவனது மோட்டார் ஆதரவுச் சூட்டின் வலிமையை எடுத்துக் காட்ட தகுந்த உதாரணமாகும்.

காற்றைக் கிழித்துக்கொண்டு படுவேகமாக மோட்டார் சைக்கிள் ஒன்று வருகிறது.

“யார்ரா அவன் ? நிச்சயமாய் ரூ சிக்ஸ் ஆகத்தான் இருக்கும்.”

‘எவண்டா அவன்! இந்தப் பத்தைக்குள்ளால ரக்டரை உறுமிக்கொண்டு வாறது? அட தர்சன், நம்மிட ரூ சிக்ஸ்.’

இவ்வாறு எறிகணை புகை மூட்டங்களுக்கும் விமானக் குண்டுவீச்சுக்கு மத்தியிலும் சிரித்துக்கொண்டே அடிக்கடி பிரமிக்கத்தக்க வகையில் இவன் நடந்து கொள்வான்.

பூநகரிக் கூட்டுத்தளம் மீதான தவளை நடவடிக்கையின்போது கனரக இயந்திரத் துப்பாக்கியுடன் சமராடியவன் அங்கு எம்மால் கைப்பற்றப்பட்ட ராங்க்கினை அதன் பின்னான நாட்களில் பொறுப்பேற்ற அணியுடன் இணைந்து ராங்கினை இயக்குவதிலும் பயிற்சி பெற்றான். அதனை செலுத்தக்கூடிய ஓட்டுனராகவும் இருந்தான் என்பது இவனது இன்னொரு பக்கம்.

இவனது ஆரம்ப பயிற்சியின் போது இவன் காட்டிய திறமையின் நிமித்தம் இவனுக்கு கனமான பணிகளே ஒப்படைக்கப்பட்டது. அத்தனையையும் ஏற்றுக்கொண்டு குறும்புக்காரனாகவும், குழப்படிக்காரனகவும், திறமை மிக்கவனாகவும் செயற்ப்பட்டான்.

மோட்டார் சைக்கிளைக்கொண்டு மரத்தோடு மோதிவிட்டு பொறுப்பாளரின் முன்னாள் தலையைச் சொறிந்துகொண்டு தன் தவறை ஒப்புக்கொண்டு நிற்ப்பான். வாகனங்களைக் கேட்காமலே எடுத்துக்கொண்டு எங்கையாவது முட்டிவிட்டு கராச்சிற்குப் போய் திருத்தம் செய்துகொண்டு வந்து பொறுப்பாளரிடம் உண்மையைச் சொல்லி தனக்குரிய தண்டனையையும் வாங்கிக்கொள்வான். ஆரம்ப நாட்களில் இவன் செய்த அன்புத் தொல்லைகளாகவே இவை அமைந்தன.

வாகனத்தை இனிமேல் தொடக்கூடாது என்று இவனுக்கு கட்டளை இடும் பொறுப்பாளரே “மச்சான் தர்சன், வாகனத்தைக் கொண்டுபோய் சாமான்கள் கொஞ்சம் வந்துகிடக்கு கவனமாக ஏற்றிக்கொண்டுவா. எல்லாம் உடையும் சாமான்கள்” என்று கூறி பணியை ஒப்படைப்பார்கள். இவ்வாறான சர்ந்தப்பங்களில் பரஸ்பரம் நம்பிக்கைக்கு உயிர்கொடுக்கும் கள்ளம் கபடம் இல்லாப் போராளி எங்கள் தர்சன்.

பல்துறைசார் ஆற்றல் மிகுந்த இவன் கனரக ஆயுதங்களை இயக்குவதில் கைதேர்ந்தவனாகவும், ராங்கி ஓட்டுனராகவும் சிறந்த வேவு வீரனாகவும் அனுபவங்களைப் பெற்று கனரக மோட்டார் அணியுடன் இணைந்து செயற்படத் தொடங்கி பின்னர் கேணல் கிட்டு பீரங்கி படையணியின் முன்னணித் தளபதியாக வளர்ட்சியடைந்தான்.

இவனுடைய அசாத்தியமான வேகம் எங்கேயாவது கொண்டு போய் விழுத்திவிடுமா? அதுவும் இல்லை. வேகத்திலும் அப்படியொரு நிதானத்தை வளர்த்துக் கொண்டவன்.

“ரூ சிக்ஸ், ரூ சிக்ஸ்” என்ற அழைப்பு வரும்போது, “வேகமாய்ச் சொல்லுடா தம்பி, இந்தா இரண்டு அனுப்பியிருக்கிறன் கறைக்சன் தா” (திருத்தத்தை தா) என்று தனது துரித செயல் திறனாலேயே பதில் அனுப்பிவிட்டு, ராங் ஒண்டில் எரியுது அல்லது இழுத்துக்கொண்டு ஓடுது என்ற முடிவு தெரிந்தவனாக தன்னை அழைத்த போராளியின் பதிலுக்காகக் காத்திருப்பான்.

இங்கு முன்னணி காப்பரணில் நிற்கும் போராளி ஒருவன் தனது அரணுக்கு சற்று நெருக்கமாக எதிரியின் “ராங்” ஒன்று வந்துநின்று அச்சுறுத்த முனையும்போது அதனை மோட்டார் ஆதரவுடன் விரட்டி அடிக்க நினைத்து அந்த நிலைமையினை தர்சனுக்கு தெரிவிப்பதற்காகவே “ரூ சிக்ஸ்” என அழைத்திருப்பான்.

ஆனால் தர்சனோ அந்த போராளியின் நிலைமையினையும் ராங் உறுமல் சத்தத்தினையும் அனுமானித்து தான் எடுக்க வேண்டிய உடனடிப் பதில் நடவடிக்கையாக கணப்பொழுதில் மோட்டரை இணைத்து களமாடுவான்.

ஏனைய அரண்களில் நிற்கும் போராளிகள் நிலைமையினை உணர்ந்து தர்சனின் தொலைத்தொடர்பு அலை வரிசையின் எண்ணிற்கு சென்று தர்சனின் கட்டளை பிறப்பிக்கும் தன்மையை கேட்டுக் கொண்டு இருப்பர். உணர்ச்சி ததும்பும் நிலையில் தர்சன் வழங்கிக் கொண்டிருக்கும் கட்டளைகளை போராளிகளை பிரமிக்க வைக்கும்.

களமுனையில் அடிக்கடி வந்து சேட்டைபுரியும் படையினருக்கு இவனது எறிகணைகள்தான் பாடம் புகட்டும். தனது மோட்டார் தொகுதிகளைக் கொண்டு மிகத் துல்லியமான எறிகணை சூடினை வழங்கி எதிரிக்குப் பேரிடியாய் இடித்தவன் எங்கள் தர்சன்.

தனக்கென கொடுக்கப்பட்ட பிரதேசங்களில் ஒவ்வொரு அங்குல நிலத்தையும் அளந்து பெயரிட்டு, குறியீடு இட்டு, எப்பொழுதும் தயார் நிலையில் இருப்பதுடன், ஒவ்வொரு மூலயிலும் எதிரி இப்படித்தான் நகர்வான், இதுதான் நடக்கும் என்ற தெளிவான் பார்வையுடனும், அதனை முறியடிக்கும் திட்டத்துடனும் களங்களில் மோட்டார் பீரங்கிகளின் தளபதி என்ற பெயரிற்கு ஏற்ற வரைவிலக்கணமாக எங்கள் தர்சன் நின்றான்.

எமது போராளிகளோ அல்லது அணிகளோ தற்செயலாக இக்கட்டில் மாட்டிக் கொண்டுவிட்டால், அதில் இருந்து எவ்வாறு மீண்டுவர வேண்டும், அல்லது மீட்க்கப்பட வேண்டும் என்ற திட்டம் தர்சனின் உள்ளங்கையில் எப்போதும் இருக்கும்.

தன்னை நோக்கி அழைக்கும் குரலின் தன்மையைக் கொண்டு அந்தத் தேவை என்னவாக இருக்கும் தனக்குரிய பணி என்னவாக இருக்கும் தன்னிடம் எதிர்பார்ப்பது என்னவாக இருக்கும் என்ற பல விதமான கேள்விகளுக்கு மத்தியிலும் தேவையுணர்ந்தவனாக தேவையை ஊகித்துச் செயலார்ருகின்ர அவனுக்குள் குடியிருந்தது. இயக்கிய அவனது ஆற்றல்தான் என்ன !?

“மச்சான் தவசீலன் ஒன்றுக்கும் யோசிக்காத, கறைக்சன் மட்டும் தா, பிள்ளைகள கவனமா உன்னோட வச்சுக்கொள், நான் உன்னை வெளியால எப்படியும் எடுப்பன்” என்று முற்றுகை ஒன்றினுள் சிக்கிக்கொண்ட எமது அணி ஒன்றை மீட்பதற்காகத் தனது மோட்டார்களை ஒன்றிணைத்து எதிரியின் முற்றுகை வெளியை உடைத்தெறிந்து அவ்வணியினை பத்திரமாக மீட்டவன் எங்கள் தர்சன்.

தனி ஒரு மோட்டாரைப் பயன்படுத்தியதிலிருந்து, பல தொகுதி மோட்டார்களை இணைத்து சமர்க்களங்களை வழிநடத்தியதுவரை பட்டறிவினால் பட்டை தீட்டப்பட்ட வைரமான தளபதி அவன்.

முல்லைத்தள தாக்குதலின்போது அம்முகாமினுள் சிக்கிக்கொண்ட படையினரை மீட்கவென கடல்வழி தரையிறக்கம் ஒன்றினை வலிந்து மேற்கொண்டு, மீட்ப்புப்படை ஒன்றை படைத்தலைமை அனுப்பி வைத்தபோது, தரையிறங்கு கடற்கலத்தின் மீது குறிதவறாது விழ்த்தப்பட்ட எறிகணையினால், கடற்கலம் செதமானதுடன் நாற்பதிற்கு மேற்ப்பட்ட படையினர் கொல்லப்பட்டனர்.

அன்றைய நாளின் மோட்டார் அணிக்கதாநாயகர்கள் சிலருள் எங்கள் தர்சனும் ஒருவன். கனரக மோட்டார்களினது கலப்பாவனையில் முன் அனுபவம் அற்ற நிலையில் களமிறங்கி எமது மோட்டார் அணி எடுத்துவைத்த முதல் அடியே பலமான அத்திவாரமாக எழுந்ததும், அதனை தொடர்ந்து நாம் சந்தித்த பெரும் சமர்களில் வெற்றிகரமாக நகர்த்தக்கூடிய தற்துணிவை எமக்கு ஏற்ப்படுத்தியது. அத்தகைய துணிவும் விரிவும் ஒன்ருதேற நிகழ்த்திய சாதனை தான் “இடைக்காடான” என்ற எங்கள் தரசனை எமக்கு இனம்காட்டியது.

அதனை உடனடுத்து சிங்களப் படைதொடுத்த “சத்ஜெய” வை எதிர்த்து களமிறங்கிய முன்னணிப் படையணிகளுக்கு ஆதரவுப் பலமாக மோட்டார் அணிகளும் இணைக்கப்பட்டன. அத்தகைய மோட்டார் அணிகளின் ஒரு தொகுதிக்கு பொறுப்பாளனாக தர்சன் நின்று செயற்பட்டான். தன்னிடம் இருந்த கணித அறிவினை இணைத்து துல்லியமாக மோட்டார்களை செயற்படுத்துவதிலும் வெற்றிகண்டான்.

புதியதோர் அறிவியல் போருக்குள் பிரவேசிக்கும் ஆரம்ப முயசிகளில் தர்சனிடம் இருந்த இனம்காணமுடியாத ஆர்வம், கடின உழைப்பு, துரிதவேக தேடற்பன்பு அவனது அணியைச் சார்ந்த ஏனைய போராளிகளுக்கும் ஊக்கமாத்திரையாகவே அமைந்திருந்தது.

சிறுரக மோட்டார்களைக் கொண்டு மரபு வழிச்சமரை எதிர்கொண்ட எமது படையணிகளுக்கு கனரக மோட்டார்கள், பீரங்கிகளை இணைத்துப் போரிடும் ஆற்றல் பலமடங்கு அதிகரித்தது. இன்று ஆற்றல் மிகு மோட்டர் பீரங்கி படையணிகளாக வளர்ந்து பாரிய வெற்றிகளைக் குவித்து நிற்கும் எமது இயக்கத்தின் போரிடும் ஆற்றலில் மோட்டார் பீரங்கிகளின் பயன்பாடு என்பது மூலவேராக இருக்கிறது.

இத்தகைய போராற்றல் பெறுவதில் இருந்த ஆரம்ப இடர்பாடுகளைத் தமது கடின உழைப்பால் தகர்த்து வழிசமைத்துத்தந்த அணிகளில் தர்சனின் பங்கு போற்றர்கரியது.

எதிரியின் “சத்ஜெய” நடவடிக்கையின் பின்னான காலங்களில் மோட்டார்கள் அனைத்தம் ஒழுங்கமைக்க்கப்பட்டும், அதற்குரிய அணிகள் ஒழுங்குபடுத்தப்பட்டு புதிய படையணி ஒன்றும் உருவாக்கம் பெற்றது.

கனரக மோட்டார் பயிற்சியின் ஆரம்ப கட்டங்களில் ஏற்ப்பட்ட அனுபவங்கள் வித்தியாசமானவை, கனரக பேராயுதம் ஒன்றை கையாளும் போது போராளிகளுக்கு இருக்ககூடிய உடல்வலு, மோட்டாரின் தொழில்நுட்பம் சார்ந்து எழக்கூடிய சவால்கள், போரில் சிறுரக ஆயுதங்களுடன் இணைந்து அதனைப் பயன்படுத்தும் முறைகள், கணித வரைபட அறிவை உட்புகுத்தி போரில் உச்ச பயன்பாட்டைப் பெற வேண்டும் என்ற துடிப்பு மோட்டாருக்கான அதிநவீன துணைக்கருவிகளின் பயன்பாட்டு உரைகள் என அனைத்துமே புதுமையானதாகவும் புதினமானதாகவும் இருந்தன.

இச்சர்ந்தப்பங்களில் அனுபவ ஆசானாக நின்ற தர்சன் அனைத்து அணிகளைச் சார்ந்த போராளிகளையும் பயிற்சிக்களத்தின் மையத்தில் சந்தித்தான். அவர்களுக்கு புத்தூக்கியாகச் செயற்பட்டான். போராளிகள், பொறுப்பாளர்கள், தளபதிகள் ஆகியோருடன் இரண்டறக் கலந்து அணிகளுக்குப் புதுவேகம் ஊட்டினான்.

வியர்வையில் குளித்து, உடல் சோர்ந்து போகும்வேளை போட்டார் அணியினது தனி ஒரு போராளியின் இயலாமையானது, அவ் அணியையும் பாதிக்கும். மோட்டாரையும் பாதிக்கும். எனவே ஒருமித்த போராளிகளது செயற்பாடு இங்கு மிக அவசியமானது.

கை நழுவினால் கால் சிதையும், கால் இடறினால் கை களுக்கும் கூடவே மோட்டரின் “லொக்” உடையும். இவ்வாறு மோட்டரின் கனமான பகுதிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்லும். வாழ்வாகவே பயிற்சிக்காலம் தொடர்ந்தது.

இத்தகைய கதைகளை பொருத்தமான இடங்களில் சொல்லிச்சொல்லி அணிகளை ஆற்றுப்படுத்தி சவால்களை எதிர்கொள்ளும் இலகு வித்தைகளைக் கற்றுக்கொடுத்த தர்சனுக்கு அனைத்துப் போராளிகளிடமும் மரியாதைக்குரிய ஆசான் என்ற நிலையினையும் பெற்றுக்கொடுத்தது.

அக்காலப்பகுதியில் எதிரியால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட “ஜெயசிக்குறு” என்ற வரலாற்றுப் படைநடவடிக்கை வன்னி மண்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட போது எமது தலைவர் அவர்களால் கேணல் கிட்டு பீரங்கிப்படையணி என்ற பெயர் சூட்டி புதிய வரலாறு படைக்க, புதிய மூச்சுடன் மோட்டார் படையணிகள் களமிறங்கின.

“ஜெயசிக்குறு” நகர்வை அதன் தொடக்க வாயிலில் இருந்து இடைநடுவில் கைவிட்டுச் செல்லும்வரை புலிகளின் எதிர்ச்சமர் போரியல் வரலாற்றில் புதிய பதிவொன்றை ஏற்ப்படுத்தியத்தை காலம் எமக்கு நினைவூட்டும். அதை மோட்டாரினால் சாதித்தவர்களின் ஒருவன் தர்சன்.

வரலாற்றுச் சமரை எதிர்கொண்ட களங்களில் எமது படையணிகள் சந்தித்த சவால்கள் ஒவ்வொன்றும் இலகுவாக விளக்கமுடியாதவை. மோட்டார் அணிகளைப் பொறுத்தவரை மோட்டார் ஒன்றினை நகர்த்தி உரிய இடத்தில் நிலைப்படுத்திவிட்டு எந்நேரமும் தயாராக இருக்க வேண்டும்.

“வேகமாக நிலைப்படுத்திப்போட்டு ‘ஒகே பன்னுங்கு’ என்ற கட்டளை கிடைக்கும். அடுத்தகணம் சூடு பறக்க வேலைகள் நடக்கும்போதே” உங்கட மோட்டாரை அல்பா பகுதிக்கு நகர்த்தி வேகமாக நிலைப்படுத்திப்போட்டு ஒக்கே பண்ணுங்கோ” சண்டையின் போக்கிற்கு ஏற்ப பறந்துவரும் மாற்றுக் கட்டளைகள்.

‘முந்துபவன் வெல்வான்’ என்பது போரில் கடைப்பிடிக்கவேண்டிய விதிகளில் ஒன்று. எங்கள் பிரியத்துக்குரிய தர்சனிடம் இருந்த சலியாத வேகம் எமது அணிகளை துரிதமாக நகர்த்திச் சென்றது.

தனித்து ஒரு போராளியால் கையாள முடியாத பாரிய சுமைகொண்ட உடற்பாகங்களைத் தாங்கிய ஒரு மோட்டாரினை கழற்றுவதும், மீண்டும் பொருத்துவதும் என்பது விரைந்துவரும் வெற்றிச்செய்தியைப் போலல்ல.

ஏற்று, இறக்கு, பொறுத்து, நிலைப்படுத்து, மீண்டும் கழட்டு, தூக்கு, கொழுவு, பொறுத்து என்ற சொற்களால் அடிக்கடி கட்டுண்டவர்களாக எமது பணிகள் தொடரும்போது, கூட நின்று வழிகாட்டி தோள் கொடுக்கும் சுமைதாங்கியாகவும் தர்சன் செயற்படுவான்.

‘களைப்பாய் கிடக்கு, தேநீர் ஒன்று குடிப்பம்’ என்று ஆசை எழும்போது நின்ற இடத்திலேயே அது தயாராகும். “தர்சண்ண வழங்கல் சீனி முடிஞ்சி போச்சு”, “சரி மச்சான் தண்ணிய அடுப்பில வை, சீனி கொண்டுவாறன்” இப்படிச் சொல்லும் தர்சன், சுழன்று அடித்துக்கொண்டு சீனி, லக்ஸ்பிறே என்று கொண்டுவந்து சேர்ப்பான்.

‘மோட்டார் நிலைக்கு சைக்கிள் ஒன்று வேணும் தர்சண்ணையை கேப்பம்.’ வரைபட வேலைக்கு பென்சில், மாக்கர், திபெக்ஸ் வேணும் தர்சண்ணணை கேப்பம். ‘ரக்டர் பெட்டி உடைஞ்சு போச்சு தர்சண்ணையிடம் மாறிக்கேப்பம்.’

‘வோக்கி சொக்கர் பழுது, குறொசும் அருந்திட்டுது தர்சண்ணைக்கு அறிவியுங்கு.’ இன்னும் ஒரு கிளுமீர்ரருக்கு “லைன்” தகடுகள் போடவேணும், தகடும், பெயின்றும் கொண்டுவாறன் என்று தர்சண்ணன் சொன்னவர்.’

‘இது தர்சண்ணன் வாங்கித் தந்த சேர்ட், இந்த ஜீன்ஸ் தர்சண்ணன் தச்சுத்தன்தவர்.’

இப்படி, இப்படி எல்லோர் மனங்களிலும் நிலைத்து நிற்கக்கூடிய முத்திரையை பதித்துவிட்டவன் எப்படி எங்களைப் பிரிந்து போகமுடியும்.

“திறினைன், திறினைன்……” இது எங்கள் தளபதி சேகரை அழைக்கும் குறியீட்டுப் பெயர். “உங்கட பக்கத்தால ராங் ஒன்று அடிச்சுக்கொண்டு வருகுது நான் அத நிப்பாட்டுறன் நீங்க மற்றதுகள் கவனியுங்கோ.”

“ரூ சிக்ஸ் நானும் அத சொல்ல நினைத்தேன் நீங்களும் அதை கவனிச்சு போட்டியல் என்ற தளபதி சேகரின் நம்பிக்கையும், நன்றியும் கலந்த உரையாடலுடன் களம் வெற்றியை நோக்கி நகரும்.

“ரூ சிக்ஸ், ரூ சிக்ஸ்….. போர் சிகஸ்….”, சொல்லுங்கோ அண்ண…. உன்னிட்ட இருக்கிற ‘ முடியரசன் ‘ வரைபடத்தை ஒருக்கா பார்…”, “சொல்லுங்கோ அண்ண”, “அதில விடிவெள்ளி என்கிற சாந்தி இருக்கு பார்…” “விளங்கிட்டுது சொல்லுங்க அண்ண” “அதில கவனமா பார் அந்த முக்கோணத் துண்டில் கொஞ்சப்பேர் வந்து ஒதுங்கிறாங்கள். பவல்ல கொண்டுவந்து இறங்க்கிறான் அத துடைச்சு அழிக்கோணும் உடன செற்பண்ணு” என கட்டளைத் தளபதி கேணல் பானு சொல்லி முடிக்கவும் தர்சன் ஒகே பண்ணவும் மின்னல் வெட்டிமறையும் இடைவெளிக்குள் துடிப்பு அழிப்பு அரங்கேறும்.

இவ்வாறே தனது வரைபட அறிவாலும் கணித அறிவாலும் பரந்த பகுதியில் திகொன்றாக நடந்துகொண்டிருக்கும் உக்கிர மோதல்களில், களநிலையை துல்லியமாகக் கணக்கிட்டு தளபதிகளின் கட்டளைகளை நிறைவேற்றவும் அணிகளுக்கு ஆதரவு வழங்கவும் தர்சன் முண்டியடிப்பான்.

சிறிய ஆளணியையும், மிக அரிதான வளங்களையும் பயன்படுத்தி குறுகிய காலத்தில் செய்துமுடிக்க வேண்டுமென்று திட்டமிட்டுக் கொடுக்கப்படும் பணிகளை மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன், கவனத்துடனும் செய்து முடித்துவிட்டு கட்டளைத் தளபதியின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றவே காத்திருப்பான்.

“தர்சனிட்ட கொடுக்கிற எந்த வேலைத்திட்டங்களையும் திருப்பி ஒருக்கா பார்க்கவேண்டிய தேவையில்லை அந்தளவு அவன்ர வேலையில நம்பிக்கை இருக்குது” இப்படி மூத்த தளபதி கேணல் பானு தர்சனைப் பற்றிய கருத்தை பகிர்ந்து கொண்டார்.

“எமது தாக்குதல்களில் நாம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக தன்னால் எவ்வளவு செய்ய முடியுமோ அத்தனையையும் செய்யவேண்டும் என்ற ஆர்வம் தர்சனிடம் இருந்தது. பல தாக்குதல்ல தர்சன் அதை செய்தும் காட்டியுள்ளான்” இவ்வாறு வடபோர் முனைக் கட்டளைத் தளபதியான கேணல் தீபன் தனது மனதிலுள்ளதைப் பகிர்ந்துள்ளார்.

“எங்களுக்கெண்டு சண்டையில ஒரு பகுதி தரப்பட்டா அதற்க்கு மோட்டார் சப்போட்டா தர்சண்ண வரமாட்டாரா? என்று எங்களுக்குள்ள கதைப்பம்.” என்று இளநிலைத் தளபதிகள் பலரும் தரசனை நினைவு கூறுகிறார்கள்.

போர்க்களங்களில் தனது துணிவு, அறிவு, ஆற்றல்களை ஒவ்வொரு சர்ந்தப்பங்களிலும் நிறைவாக பயன்படுத்திய இவன் 04.11.2000 அன்று காவலரண் பகுதி ஒன்றின் ஊடாக களநிலைகளை அவதானித்துக் கொண்டு வரும்போது எதிரியினால் குறிபார்த்து சுடப்பட்ட குண்டை மார்பிலேந்திச் சரிந்த தர்சனை அறிந்த அத்தனை போராளிகளின் மனங்களிலும் இப்போதும் குமுரிக்கொண்டுதான் இருக்கிறது.

நினைவுப்பகிர்வு:- அ.அமுதன்.
வெளியீடு:விடுதலைப்புலிகள் (புரட்டாசி, ஐப்பசி 2003) இதழ்

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

புலிகளின் குரல் வானொலி.!

புலிகளின்குரல் வானொலி தமிழீழ தேசியத்தலைவரினால் உத்தியோக புர்வமாக தொடக்கிவைக்கப்பட்ட நாள் 1990 ஆம் ஆண்டு கார்திகை மாதம் 21 தேதி. புலிகளின் குரல் வானொலிச் சேவையின் ஓராண்டு பூர்த்தி நாளை முன்னிட்டு தமிழீழத் தேசியத்...

கரும்புலி மேஜர் கலையழகன் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கரும்புலி மேஜர் கலையழகன், கரும்புலி மேஜர் தொண்டமான், கரும்புலி கப்டன் ஐயனார், கரும்புலி கப்டன் சிவலோகன், கரும்புலி கப்டன் கரிகாலன், கரும்புலி கப்டன் மதிநிலவன், கரும்புலி கப்டன் சீராளன், கரும்புலி கப்டன் செந்தமிழ்நம்பி,...

பூநகரி இராணுவத்தள வெற்றிக்கு வழியமைத்த தேசப்புயல்கள்.!

பூநகரி இராணுவத்தளம் மீதான வெற்றிக்கு வழி அமைத்த தேசத்தின்புயல்கள் 11.11.1993. 1993 கார்த்திகை 11 அன்று தமிழீழ விடுதலைப்புலிகளால் பூநகரி தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஈரூடக தாக்குதலான தவளைப்பாய்ச்சல் இராணுவ நடவடிக்கையின் போது பலாலி...

கடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன், கடற்கரும்புலி லெப். கேணல் தாரணி, கடற்கரும்புலி மேஜர் வளவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக நாள் இன்றாகும்.! சர்வதேசக் கடற்பரப்பில் 09.11.1998 அன்று விநியோக நடவடிக்கையின்போது சிறிலங்காக் கடற்படையுடன்...

Recent Comments