கடற்கரும்புலி மேஜர் புகழரசன், கடற்கரும்புலி கப்டன் மணியரசன் வீரவணக்க நாள் இன்றாகும்.
29.08.1993 அன்று யாழ். மாவட்டம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் P 464 அதிவேக “சுப்பர் டோறா” பீரங்கிப் படகு மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் புகழரசன் / புவீந்திரன், கடற்கரும்புலி கப்டன் மணியரசன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 27ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
விடுதலையின் கனவுகளுடன் பல வெற்றிகளுக்கு வித்திட்டு காற்றோடு கலந்திட்ட உயிராயுதங்கள்.!


தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”