கடற்கரும்புலி மேஜர் திசையரசி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
15.08.2000 அன்று கடல் விநியோக நடவடிக்கைக்கு தயாராகிக்கொண்டிருந்த வேளை முல்லை மாவட்டத்தில் கடற்புலிகளின் சாளைத்தளம் மீதான எதிரிகளின் தாக்குதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் திசையரசி உட்பட கடற்புலி கட்டளை அதிகாரி லெப். கேணல் பழனி, கடற்புலி மேஜர் தூயவள் ஆகிய மாவீரர்களின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
விடுதலையின் கனவுகளுடன் பல வெற்றிகளுக்கு வித்திட்டு காற்றோடு கலந்திட்ட உயிராயுதம்.!
விடுதலையின் கனவுகளுடன் கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்.!
கடற்புலி லெப்.கேணல் பழனி / பழனிராஜ் (அங்கமுத்து சிவநாதன் – கண்டி, சிறிலங்கா)
கடற்புலி மேஜர் தூயவள் (சங்கரப்பிள்ளை விஜயலட்சுமி – முரசுமோட்டை, கிளிநொச்சி)
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!