இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் கரும்புலி மேஜர் கலையழகன் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கரும்புலி மேஜர் கலையழகன் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கரும்புலி மேஜர் கலையழகன், கரும்புலி மேஜர் தொண்டமான், கரும்புலி கப்டன் ஐயனார், கரும்புலி கப்டன் சிவலோகன், கரும்புலி கப்டன் கரிகாலன், கரும்புலி கப்டன் மதிநிலவன், கரும்புலி கப்டன் சீராளன், கரும்புலி கப்டன் செந்தமிழ்நம்பி, கரும்புலி லெப். வீரமணி, கரும்புலி லெப். செங்கண்ணன், கரும்புலி லெப். நல்லதம்பி, கரும்புலி லெப். கண்ணன், கரும்புலி லெப். ஜீவரஞ்சன் வீரவணக்க நாள் இன்றாகும்.

பூநகரி கூட்டுப் படைத்தளம் மீதான “தவளைப் பாய்ச்சல்” நடவடிக்கைக்கு வலுச்சேர்ப்பதற்காக யாழ். மாவட்டம் பலாலி சிறிலங்கா விமானப் படைத்தளத்தில் ஊடுருவி 11.11.1993 அன்று மேற்கொண்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் கலையழகன், கரும்புலி மேஜர் தொண்டமான், கரும்புலி கப்டன் ஐயனார், கரும்புலி கப்டன் சிவலோகன், கரும்புலி கப்டன் கரிகாலன், கரும்புலி கப்டன் மதிநிலவன், கரும்புலி கப்டன் சீராளன், கரும்புலி கப்டன் செந்தமிழ்நம்பி, கரும்புலி லெப். வீரமணி, கரும்புலி லெப். செங்கண்ணன், கரும்புலி லெப். நல்லதம்பி, கரும்புலி லெப். கண்ணன், கரும்புலி லெப். ஜீவரஞ்சன் ஆகிய கரும்புலி மாவீரர்களின் 27ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

பலாலி படைத்தளத்திலிருந்து பூநகரியில் தாக்குதலுக்கு இலக்காகும் படையிருக்கான உதவிகள் சென்றடைவதைத் தடுத்து நிறுத்தும் நோக்குடன் பலாலி விமானப் படைத்தளத்திற்குள் 11.11.1993 அன்று ஊடுருவிய கரும்புலிகளின் சிறப்பு அணி படைத்தளத்தினுள் தாக்குதல்களை நடாத்தி சிறிலங்கா படையினரை நிலை குலையவைத்து “தவளைப் பாய்ச்சல்” நடவடிக்கையின் வெற்றிக்கு வழியேற்படுத்தியது.

தாய் நிலத்தின்  வெற்றிக்கு வித்திட்டு புயலாக வீசிய தேசத்தின் புயல்கள்.!

இவர்கள் நீளும் நினைவுகள் .!

பூநகரி இராணுவத்தளம் மீதான வெற்றிக்கு வழி அமைத்த தேசத்தின்புயல்கள் 11.11.1993.!

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கரும்புலி மேஜர் சதா

25.05.2000 அன்று “ஓயாத அலை – 03″ தொடர் நடவடிக்கையின் போது யாழ். மாவட்டம் மண்டைதீவுப் பகுதியில் நடைபெற்ற கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் சதா ஆகிய கரும்புலி மாவீரரின் ...

லெப் கேணல் பிரசாந்தன்

லெப்.கேணல் பிரசாந்தன் வின்சன் ஜெயச்சந்திரன் தருமபுரம், கிளிநொச்சி வீரப்பிறப்பு: 07.07.1972 வீரச்சாவு: 25.05.1999 திருகோணமலை புல்மோட்டை கடற்பரப்பில் கடற்படையுடன் ஏற்பட்ட திடீர் மோதலில் வீரச்சாவு   1992 ஆம் ஆண்டு இயக்கத்தில் இணைந்துகொண்ட பிரசாந் கடற்புலிகளின் மூன்றாவது பயிற்சிப் பாசறையில் தனது ஆரம்பப் பயிற்சியை...

கரும்புலி மேஜர் குமலவன்

"ரங்கண்ணையைப் போல கரும்புலியாகத்தான் போவன் கரும்புலி மேஜர் குமலவன் .! கரும்புலி மேஜர் குமலவன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 22.05.2000 அன்று யாழ். மாவட்டம் புத்தூர் பகுதியில் நடைபெற்ற...

மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல். ரமணன்

கேணல் “ரமணனை மத்திய புலனாய்வுத் துறையில் இணைக்க விரும்பினேன்.! மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு போராளிகளின் எல்லைக் காவலரண்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தவேளை சிறிலங்கா இராணுவத்தினர்  சமாதான உடன்படிக்கையை மீறி 21.05.2006 அன்று மேற்கொண்ட குறிசூட்டுத் தாக்குதலில்...

Recent Comments