இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் கடற்கரும்புலி மேஜர் குமாரவேல் .!

கடற்கரும்புலி மேஜர் குமாரவேல் .!

பருத்தித்துறைக் கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலி மேஜர் குமரவேல் அவர்களின்  19ம் ஆண்டு நினைவு நாள்
 
01.09.2001 அன்று யாழ். மாவட்டம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் நீரூந்து விசைப்படகு மீது ஊடுருவி மேற்கொண்ட தாக்குதல் முயற்சியின்போது வீரச்சனைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் குமரவேல் / மதி ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
 
யாழ். பருத்தித்துறைக் கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் சிறிலங்கா கடற்படையின் நீரூந்து விசைப்படகு ஒன்றினைத் தாக்கியழிக்கும் நடவடிக்கைக்கு சென்றவேளை தேசத்துரோகி ஒருவரின் காட்டிக்கொடுப்பினால் தாக்குதல் திட்டத்தினை ஊகித்துக் கொண்ட சிறிலங்கா கடற்படையினர் அப்பகுதியில் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொது மக்களை தமது படகில் ஏற்றியிருப்பதை தெரிந்து கொண்டு, மக்கக்களிற்கு பாதிப்பு ஏற்படாதவகையில் மக்களைக் காத்து
கடற்படைப் படகிற்கு தொலைவாக வைத்து தனது படகினை தகர்த்து வீரச்சாவினைத் தழுவிக்கொண்டார் கடற்கரும்புலி மேஜர் குமரவேல்.
 
 
 
 
 
 
 
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
 
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
 
 
 
 
 
 
 
 
 
 
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கவசஅணி வீரன் லெப்.கேணல் சிந்து.!

11.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற மோதலில் சிங்கள பயங்கரவாத அரசின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப் கேணல் இம்ரான்- பாண்டியன் படையணியைச் சேர்ந்த லெப் கேணல் சிந்து அவர்களின்...

கடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி, கடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனா, கடற்கரும்புலி லெப். கேணல் அன்பு, கடற்கரும்புலி மேஜர் மலர்நிலவன் வீரவணக்க நாள் இன்றாகும். 11.05.2006 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில்...

கரும்புலி மேஜர் மறைச்செல்வன்.!

நெஞ்சுக்குள் நெருப்பெரித்தவன் கரும்புலி மேஜர் மறைச்செல்வன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 10.05.2000 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் நடைபெற்ற...

தமிழீழத்தின் வீர ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்…

“வசந்தன் மாஸ்ரர்” என்ற அர்ப்பணிப்பு மிக்க உன்னதமான போராளியை 1993 தமிழீழ படைத்துறைப்பள்ளியில் பார்த்தேன் உயரமான, கறுத்த, மிடுக்கான உருவம், மாஸ்ரரை பார்த்தால் அல்லது அவர் வந்திருக்கிறார் என்றால் எமக்கு முன் படைத்துறைப்பள்ளியில்...

Recent Comments