இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் கடற்கரும்புலி லெப். கேணல் றெஜி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் றெஜி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் ரெஜி, கடற்கரும்புலி மேஜர் றோஸ்மன், கடற்கரும்புலி மேஜர் திருமாறன், கடற்கரும்புலி மேஜர் நித்தி, கடற்கரும்புலி மேஜர் நிதர்சன், கடற்கரும்புலி மேஜர் மயூரன் வீரவணக்க நாள் இன்றாகும்.

திருகோணமலை துறைமுகத்தில் வைத்து 23.10.2000 அன்று சிறிலங்கா கடற்படையின் மூன்று போர்க்கப்பல் கலங்களை மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப். கேணல் ரெஜி, கடற்கரும்புலி மேஜர் றோஸ்மன், கடற்கரும்புலி மேஜர் திருமாறன், கடற்கரும்புலி மேஜர் நித்தி, கடற்கரும்புலி மேஜர் நிதர்சன், கடற்கரும்புலி மேஜர் மயூரன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 20 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

விடுதலைக்கு  வித்திட்டு கலடன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள்.!

திருகோணமலை துறைமுகத்தின் மீது 23.10.2000 அன்று கடற்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலில் சிறிலங்கா கடற்படை பாரிய அழிவுகளை எதிர்கொண்டது. மார்பிள் பீச் பகுதியிலிருந்து துறைமுகத்தினை நோக்கி கடுமையான மோட்டார் தாக்குதல் நடாத்தப்பட துறைமுகத்திற்குள் உள்நுழைந்த கடற்புலிகளும், கடற்கரும்புலிகளும் சிறிலங்கா கடற்படையுடன் கடுமையாகச் சமரிட்டு பாரிய அழிவுகளை ஏற்படுத்தினர்.

இதன்போது சிறிலங்கா கடற்படையின் தரையிறங்குகலம் (படைக்காவி), போர்ப்படகு உட்பட மூன்று கடற்படைக் கலங்கள் கடற்கரும்புலிகளால் தகர்த்து மூழ்கடிக்கப்பட்டன. மேலும் இரு போக்குவரத்துக் கப்பல்கள் கடுமையாக சேதப்படுத்தப்பட்டன.

மார்பிள் பீச் பகுதியிலிருந்து துறைமுகம் மீது எறிகணை வீச்சில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போராளிகளுடன் மோதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த படையினருக்கு சூட்டாதரவை வழங்கிக் கொண்டிருந்த சிறிலங்கா வான்படையின் எம்.ஐ.24 ரக தாக்குதல் உலங்குவானூர்தி ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.

 

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...

Recent Comments