“யூலை” என்றால் குடல்நடுங்கும்
நெஞ்சம் வெதுவெதும்பிக் கண்ணீர் வடிக்கும்
திட்டமிட்டுச் சிங்களத்தார் அள்ளிவைத்த கொள்ளியிலே
துடிதுடிக்கச் சரிந்த உறவுகளை நினைப்போம்
துன்பச் சிலுவை சுமந்த தோளிற்கு.
“யூலை ” என்றதும் பாரம் கூடும!
“இந்த யூலையில் என்ன நடக்குமோ…?
காலச் சக்கரம் விக்ச்சாய் சுழன்றதில்
கதையே மாறி…..
யூலை என்றதும் எமக்குள் ஒரு கிளர்ச்சி!
முறைவைத்துப் பொடியள் குடுப்பாங்கள் என்ற மகிழ்ச்சி!
“இந்த யூலையில் எந்த முகாமோ..?
“ஆமியோ……நேவியோ…….ஆகாயப்படைதானோ..?
எமக்குள் ஒரு பட்டிமன்றமே நடக்கும்.
எதிரியின் முகாமில் கதையே வேறு
அச்சமும்…… பயமும் …..
சாக்களையும்…… நித்திரை ஒண்ணாப்
பினியும் வாட்ட….
“கறுப்பு யூலை” கழியுமட்டும்
ஒரே கலக்கம் !!
ஆக்கம் :ஜெயா (பிரான்ஸ் )
வெளியீடு :களத்தில் இதழ்
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”