கரும்புலி மேஜர் ரட்ணாதரன் வீரவணக்க நாள் இன்றாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 1990ம் ஆண்டுகளில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட தமிழ் மக்கள் மீதான பல்வேறு படுகொலைகளுடன் நேரடியாகத் தொடர்புடைய வாகரைப் பகுதியின் இராணுவ முகாமின் இரண்டாவது கட்டளை அதிகாரி மேஜர் சங்கிலியன் மீது 09.08.1999 அன்று மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் ரட்ணாதரன் ஆகிய கரும்புலி மாவீரரின் 21ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
விடுதலையின் கனவுகளுடன் பல வெற்றிகளுக்கு வித்திட்டு காற்றோடு கலந்திட்ட தேசப்புயல் .!

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”