கரும்புலி கப்டன் தமிழ்க்குமரன்உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.!

கரும்புலி கப்டன் தமிழ்க்குமரன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

திருமலை மாவட்டம் புல்மோட்டைப் பகுதியில் 10.09.2000 அன்று இராணுவம் சுற்றிவளைத்து கைதுசெய்ய முயன்றவேளை தனது உடலில் பொருத்தி வைத்திருந்த வெடிமருந்துத் தொகுதியை வெடிக்கவைத்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி கப்டன் தமிழ்க்குமரன் ஆகிய கரும்புலி மாவீரரினதும் அதே சம்மவத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட “புலனாய்வுத்துறை” கப்டன் கலையரசன், லெப். அரவிந்தன் ஆகிய மாவீரர்களினதும் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

விடுதலையின் கனவுகளுடன் பல வெற்றிகளுக்கு வித்திட்டு காற்றோடு கலந்திட்ட தேசப்புயல் .!

விடுதலையின் கனவுகளுடன் கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்.!

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Leave A Reply

Your email address will not be published.