இலைகள் உதிரும் கிளைகள் ஒடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

கடற்கரும்புலி கப்டன் அருள்ஜோதி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.!


கடற்கரும்புலி கப்டன் அருள்ஜோதி வீரவணக்க நாள் இன்றாகும்.

யாழ். மாவட்டம் காங்கேசன்துறைத் துறைமுகத்தில் 10.09.1995 அன்று தரித்து நின்ற சிறிலங்கா கடற்படையின் தரையிறங்கு கலம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி கப்டன் அருள்ஜோதி ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

 

விடுதலையின் கனவுகளுடன் பல வெற்றிகளுக்கு வித்திட்டு காற்றோடு கலந்திட்ட உயிராயுதம்   .!

இவருடன் கடலிலே காவியப் படைத்த கடற்புலி மறவர்கள்…..!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறைத் துறைமுகத்தில் தரித்து நின்ற தரையிறங்கு கலம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவுதழுவிக் கொண்ட மேஜர் மோகன் (நம்பி) , கப்டன் ராம்குமார்  ஆகிய கடற்புலி மாவீரரின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Please follow and like us:

தமிழீழம்