இலைகள் உதிரும் கிளைகள் ஒடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

குமுழமுனைக் படுகொலை.!


முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்றுப் பிரதேசசெயலர் பிரிவில் குமுழமுனைக் கிராமம்அமைந்துள்ளது. இக்கிராம மக்களின் பிரதான தொழிலாக விவசாயம், கால்நடை வளர்ப்பு என்பன அமைந்துள்ளன.
1984ஆம் ஆண்டு காலப்பகுதியில் குமுழமுனைக் கிராமம் அதிகாலையில் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்படுவதும், மக்கள் கைது செய்யப்பட்டுத் துன்புறுத்தப்படுவதும் வழக்கமாக இருந்தது.

வழமைபோல 01.10.1984 அன்று அதிகாலை சுற்றி வளைக்கப்பட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டனர். தொடர்ந்து 29.11.1984 அன்றும் பலர் கைது செய்யப்பட்டனர்.

இதில் முன்பு கைதான ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் ஏனைய நான்கு சகோதரர்களும், மோகன் என்பவரும் (குமுழமுனையைச்சேர்ந்தவர்) தவிர்ந்த ஏனையோரை இராணுவத்தினர் விடுதலை செய்தனர்.

 

இவர்களின் மனைவியர் தமது கணவன்மாரை விடுதலை செய்யுமாறு இராணுவத்தினரைக் கேட்டபொழுதெல்லாம் அவர்களை விசாரணை செய்தபின் விடுதலை செய்வதாகக் கூறிய இராணுவத்தினர் அவர்களை (02.12.1984 அன்று தாம் சுட்டுவிட்டதாக உரியவர்களின் வீடுகளுக்கு 14.02.1985 அன்று
அறிவித்தனர். இச்சம்பவத்தில் குமுழமுனையைச் சேர்ந்த பொன்னம்பலம் என்பவரின் பிள்ளைகள் 6 பேர் உட்பட அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் அடங்கலாக 07 பேர் உயிரிழந்தனர். அக்கிராமத்தைச் சேர்ந்த 06 குடும்பங்களில்
குடும்பத் தலைவர்கள் இல்லாமல், (06 பெண்கள் விதவைகளாக்கப்பட்டனர். இச் சம்பவம் 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தை தொடர்ந்து முல்லைத்தீவில் நடைபெற்ற முதலாவது சம்பவம் ஆகும்.

02.12.1984 அன்று குமுளமுனைப் படுகொலையில் கொல்லப்பட்டோர் விபரம்

பொன்னம்பலம் நமசிவாயம்                51
பொன்னம்பலம் ஆனந்தன்                    53
பொன்னம்பலம் கெங்காதரன்             45
பொன்னம்பலம் பொன்ராசா                43
பொன்னம்பலம் சந்திரலிங்கம்            49
பொன்னம்பலம் விவேகானந்தம்       47
மோகனதாஸ்                                                     32

குறிப்பு : இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.

-தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.

 

 

Please follow and like us:

தமிழீழம்