தெரிந்தே மருத்துவமனை மீது விமானத்தாக்குதல் மேற்கொண்ட சிங்களம்.!

இறுதிப்போரில் பாதுகாப்பான இடமாக மக்கள் கருதிய மருத்துவமனைகளை இலக்கு வைத்து இடம்பெயரும் ஒவ்வொரு இடங்களையும் தாக்கத் தொடங்கியது இலங்கை இராணுவம்.
கிளிநொச்சியில் இருந்த மக்கள் அனைவரும் இடம்பெயரும்வரை கிளிநொச்சி மருத்துவமனை இயங்கிக் கொண்டிருந்தது. கிளிநொச்சி மருத்துவமனை என்று தெரிந்தும் விமானத்தாக்குதலை மிகத்துணிச்சலாக மேற்கொண்டது இலங்கை இராணுவம்.
தருமபுரம் மருத்துவமனை, புதுக்குடியிருப்பு மருத்துவமனை இரண்டும் இடம்பெயர்ந்தபின் மருத்துவமனை என்ற வளம் அங்கு இருக்கவில்லை. காயமடைந்து கொண்டுவரப்படும் மக்களின் எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக் கொண்டேயிருந்தது.
பாடசாலை கட்டடங்களே மருத்துவமனைகளாகப் பயன்படுத்தப்பட்டன. அரசாங்கத்திடம் இருந்து மருத்துபொருட்களும் மற்றும் எரிபொருட்களும் முற்றாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. வைத்திய அதிகாரிகள் உடனுக்குடன் மருத்துவமனை நிலைப்பாட்டினை எடுத்துக்கூறியும் எந்த ஒரு பலனும் கிடைக்கவில்லை மாறாக அந்த இடங்களுக்கு செல் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
மருத்துவமனைகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களால் அரசாங்க மருத்துவமனைகளில் வேலை செய்ய பலர் முன்வரவில்லை. ஒரு சிலர் மட்டும் கடமையில் ஈடுபட்டனர்.
தமிழீழ மருத்துவத் துறையினர் மக்களுக்கான பணியில் ஈடுபட்டது யாவரும் அறிந்ததே. பெண்களும் குழந்தைகளும் அதிகளவில் காயமடைந்து கொண்டுவரப்பட்டனர். அவர்களிற்கான அடிப்படைத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாது மருத்துவ துறையினர் தள்ளாடினர்.
போர்க்காயங்களில் குருதி ஏற்ற வேண்டிய தேவை மிகவும் அவசியம் இருந்தது. ஆனால் கண்மூடித்தனமாக தாக்குதல்கள் இடைவிடாது நடத்தப்பட்டுக் கொண்டு இருந்ததால் யாரிடமும் குருதியை எடுக்க முடியாத நிலை! ஒருவரிடம் குருதியை பெற்றால் அடுத்த நிமிடமே அவரும் காயமடைந்து வரக்கூடிய அசாதாரண நிலைதான் அங்கு நிலவியது. இக்கட்டான நிலையில்தான் தமிழீழ மருத்துவத்துறை அங்கு இயங்கிக் கொண்டிருந்தது.
இயலுமானவரை அவசியமான காயங்களிற்கு விரைவாக சத்திரசிகிட்சை மேற்கொள்ளப்பட்டது.
மருத்துவமனை வளாகங்களிலெல்லாம்  காயமடைந்தவர்கள் தேங்கிக்கிடந்தார்கள்  அவர்களிற்கான சிகிக்சை முடிப்பதற்கு முன்பே இன்னும் பெருமளவிலான மக்கள் காயத்துடன் கொண்டுவரப்படுவார்கள்.
காயங்களின் தன்மையை விபரிக்க முடியாது! பாரிய காயங்களாகவும் கொத்துக்குண்டு தாக்குதல்களில் காயமடைபவர்கள் பலர் அந்த இடத்திலே கொல்லப்பட்டார்கள். பாரிய எரி காயங்கள் ஏற்பட்டிருந்தன. குழந்தைகள் பெரும்பாலும் மருத்துவமனைக்கு கொண்டு வரும்போதே இறந்து விடுவார்கள்.
பொஸ்பரஸ் குண்டு தாக்கத்தால் பலர் மயக்கமடைந்து கொண்டுவரப்பட்டார்கள். தாய்மார் பார்த்துக்கொண்டு இருக்கும் போது குழந்தைகள் இறப்பதும், குழந்தைகள் பார்த்துக் கொண்டிருக்கும் போது தாய் சகோதரர்கள் இறப்பதும் என்று ஒரு மனித குலத்திற்கு நடக்கக்கூடாத கொடூரங்களை இலங்கை அரசு தமிழினத்திற்கு நடத்திக்கொண்டிருந்தது.
மருத்துவமனைகளில் சிகிக்சை பெற்றுக்கொண்டிருக்கும் போதே மக்களும் மருத்துவதுறையினரும் கொல்லப்பட்டு இருக்கின்றார்கள்.
கிளிநொச்சி, உடையார்கட்டு, புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன், வலைஞர்மடம் போன்ற இடங்களில் இருந்த மருத்துவமனைகள் மீது செல் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. குறிப்பாக ஏப்ரல் 29 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் கனிஸ்ட உயர்தரவித்தியாலத்தில் இயங்கிய மருத்துவமனை மீது இலங்கை இராணும் இடைவிடாது மிலேச்சத்தனமாக செல் தாக்குதலை மேற்கொண்டது.
பாரிய சத்திர சிகிட்சைகளை முடித்து icu என்று சொல்லப்படும்.அவசர சிகிச்சை விடுதியில் நோயாளர்களுக்கான சிகிச்சை நடைபெற்று கொண்டிருந்த போது  அந்த  விடுதியின் நடுவில் விழுந்த செல் அந்த இடத்திலே பலரது உயிரைப்பறித்தது பலர் மீண்டும் காயமடைந்தவர்கள் 50 மேற்பட்டோர் கொல்லப்பட்டும் படுகாயமும் மடைந்தாரகள். இவை எல்லாம் பார்க்கும்போது முற்றாக தமிழினத்தை அழிக்க அரசாங்கம் தெட்டதெளிவாக மேற்கொண்டநடவடிக்கையே
அதன் பின் மருத்துவமனையினை முள்ளிவாய்க்கால் அ.த.க பாடசாலைக்கு மாற்றப்பட்டது அந்த பாடசாலையில் சிறிய ஒரு கட்டிடம்மட்டுமே காயமடைந்தமக்கள் ஒரு கால் எடுத்து வைக்க முடியாத அளவிற்கு அந்த பகுதிமுழுவதும்நிறைந்துகிடந்தார்கள் காயமடைந்த மக்களுடன் அகற்ற முடியாத அளவிற்கு இறந்தவர்களின்உடல்களும்கிடந்தது
நிமிடத்திற்கு நிமிடம் பெரும் தொகை மக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும்கொண்டுவரப்பட்டார்கள் மருத்துவ மனைகளை இனங்காணகூடியவாறு செஞ்சிலுவை குறியீடு இடப்பட்டு இருந்தும் தாக்குதலை மேற்கொண்டு கொண்றுகுவித்ததுஅரசு
அரச சார்பற்ற நிறுவனங்களையும் ICRC
போண்றவற்றையும் இலங்கை அரசு வன்னிப்பகுதியை விட்டு வெளியேற்றியது காயமடைந்த நோயாளர்களை யுத்தப்பிரதேசத்தைவிட்டு திருகோணமலை க்கு எடுத்து செல்வதற்கான கப்பல் ஒழுங்கை செய்வதாககூறியும் அதனை செய்யவில்லை இரண்டுதடவைகள் மட்டும் கப்பலை அனுப்பிவிட்டு கடற்கரைக்கு மக்களை ஏற்றி செல்லும் வாகனம் மீதும் கடற்கரை முழுவதிலும் செல் தாக்குதலை மேற்கொண்டு மக்களை கொன்று குவித்தது இலங்கை அரசும் இராணுவமும் மே 16 பின்னர் மருத்துவமனை எல்லாம் முற்றாகசெயலிந்து போக வீதி வீதியாய் கிடந்தவர்கள் காயமடைந்தவர்கள்
இப்படி திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலையின்சாட்சிகள்இருந்தும் தமிழர் தரப்பு இன்னும் நான் பெரிது நீ பெரிது என்று போட்டிபோட்டுக்கொள்வதில் பத்தாண்டுகள் முடிந்து போய்விட்டது இனியாவது நடந்தது முடிந்த இன அழிப்பதற்கு நீதியைப்பெற்றுக்கொள்ளக்கூடிய பொறிமுறைகளை மேற்கொள்ளுமா?நமக்கான நீதியை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவையுணர்ந்து தமிழர்கள்  ஒற்றுமையுடன் செயற்படுவார்களா?என்ற ஆதங்கமே பாதிக்கப்பட்ட மக்களிடம்  இன்றும் இருக்கின்ற கேள்வியாகவுள்ளது.
-வேர்கள் இணையத்திற்காக மிதயா கானவி

Leave A Reply

Your email address will not be published.