கரும்புலிகள் மேஜர் மலர்விழி, மேஜர் ஆந்திரா, கப்டன் சத்தியா வீரவணக நாள்.!

கரும்புலி மேஜர் மலர்விழி, கரும்புலி மேஜர் ஆந்திரா, கரும்புலி கப்டன் சத்தியா வீரவணக நாள் இன்றாகும்.

ஓயாத அலைகள் 03 நடவடிக்கையின் போது 31.03.2000 அன்று ஆனையிறவுத் தளத்தினைக் கைப்பற்றும் சமரிற்கு வலுச்சேர்ப்பதற்காய் தாமரைக்குளப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிறிலங்கா படையினரின் ஆட்லறி தளத்தினுள் ஊடுருவி நான்கு ஆட்லறிகளைத் தகர்த்தழித்துவிட்டு வெற்றியோடு தளம் திரும்பிக்கொண்டிருந்தவேளை இடையே சிறிலங்கா இராணுவத்தினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் மலர்விழி, கரும்புலி மேஜர் ஆந்திரா, கரும்புலி கப்டன் சத்தியா ஆகிய கரும்புலி மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும்.

வீரத்தின் சிகரங்களாக 31.03.2000 அன்று தம் நீண்டகாலக் கனவை நிறைவேற்றி நான்கு ஆட்லறிகள் தகர்த்து மூன்று பெண் கரும்புலிகளும் மிகவும் துணிச்சலோடு சண்டையிட்டு எதிரியின் கோட்டையாயிருந்த தாமரைக்குளப் பகுதியில் பன்னிரெண்டு கொமாண்டோக்களைக் கொன்று கொமாண்டோப் படையைக் கதிகலங்கவைத்து மகிழ்வோடு எங்கள் தேசத்தின் நினைவுக் கற்களில் அழியாதபடி ஓயாத அலைகளின் வெற்றிவீரர்களாக தங்கள் பெயரையும் பொறித்துக்கொண்டார்கள்.

 

தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

Leave A Reply

Your email address will not be published.