ஈகைப்பேரொளி செந்தில்குமரன் நினைவு வணக்கநாள்!

ஈகைப்பேரொளி செந்தில்குமரன் நினைவு வணக்கநாள் இன்றாகும்.

புலத்தமிழ் சமூகத்தின் ஒன்றுபட்ட எழுச்சியே தமிழீழ விடுதலையை விரைவாக்கும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையுடன், “அனைவரும் ஒன்றிணைந்து உங்ககள் உரிமையை நீங்களே வென்றெடுக்க வேண்டும்.” என்ற உருக்கமான வேண்டுகோளோடு 05.09.2013 அன்று ஐ.நா முன்றலில் முருகதாசன் திடலிலே தீயினிற் கருவாகி தமிழீழ விடுதலைக்கு ஒளியாகிய ஈகைப்பேரொளி செந்தில்குமரன் அவர்களின் 06ம் ஆண்டு நினைவு வணக்கநாள் இன்றாகும்.

எங்களில் ஒருவனாய் உரிமைக்காய் உறவாடிய இளையவன்; தன் தாய்நாட்டின் மீதும், மாவீரர்களின் உன்னதமான உயிர்த்தியாகம் மீதும் கொண்ட பற்றுறுதியால், தான் நேசித்த தேசம் விடுதலை பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், வாழ்வின் அத்தனை சுகங்களையும் துறந்து தன்னுயிரை தீயினிற் கருவாக்கிய ஈகைப்பேரொளி செந்தில்குமரன் அவர்களின் ஏகத்திற்கு தலைவணங்கி வணக்கம் செலுத்துவதோடு, அவரின் குடும்பத்தினரையும் போற்றுகின்றோம்.

 

தமிழீழ மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இன அழிப்புப்போரைத் தடுக்கக் கோரியும், தமிழீழ விடுதலைக்கு சாதகமான புறச்சூழலை ஏற்படுத்தவும் தாய்த்தமிழகம், மலேசியா, சுவிஸ்சர்லாந்து ஆகிய நாடுகளிலே தமது இன்னுயிர்களை தீயினிற் கருவாக்கிய அனைத்து ஈகியர்களையும் இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

ஈகைப்பேரொளி” இரத்தினசிங்கம் செந்தில்குமரன்.!

விடுதலை நெருப்பு.!

 

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

Leave A Reply

Your email address will not be published.