இலைகள் உதிரும் கிளைகள் ஒடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

ஜூலை 83 முதல் செம்மணி வரை சிங்களத்தின் இனப்படுகொலைகள் .!


நான் தமிழ் மக்களின் அபிப்பிராயங்கள் பற்றி கவலைப்படவில்லை .
இப்போது நாம் அவர்களைப் பற்றி எண்ணிப்பார்க்க முடியாது; அவர்களது உயிர்கள் பற்றியோ அபிப்பிராயங்கள் பற்றியோ எண்ணிப்பார்க்க முடியாது. எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக அழுத்தத்தை வடக்கில் போடுகிறீர்களோ இங்கு சிங்களவர்கள் அவ்வளவு மகிழ்வடைவார்கள். உண்மையில் நான் தமிழர்களை விரட்டியடித்தால் சிங்கள மக்க ள் மகிழ்ச்சியடைவார்கள்
– முன்னாள் சிறீலங்காஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தா
1983-ஜூலை  இனப்படுகொலை தமிழ் சிங்கள தேசங்களுக் கிடையேயான  பிணக்கை உலக அரங்கிற்கு வெளிச்சம் போட்டுக்காட்டிய நிகழ்வு ஆகும். அரச ஆதரவுடன் சிங்கள இனவாத இயந்திரம் நடாத்தி முடித்த இப் படுகொலைசிங்கள தேசத்துடன் தமிழ்த் தேசம் சேர்ந்து வாழலாம் என்ற அபிப்பிராயங்களின் மேல் சிங்கள தேசம் தொடுத்த வினா ஆகும்.
15 ஆண்டுகளின் பின் உலகை, சிங்கள தேசத்தின்  மற்றுமொரு  இனப்படுகொலை உலுக்கியிருக்கிறது. மெளமாக கொலை செய்யப்பட்டு யாழ் புதைக்கப்பட்ட பல நூறு தமிழர்களின்  விவகாரம் இன்று பகிரங்கமாக தொடங்கிவிட்டன. கிருஷாந்தி என்ற தமிழ் மாணவி மீது நடாத்தப்பட்ட சந்திரிகா அரசின் கொடுரத்தை உலக சமூகத்திற்கு கொண்டுசென்று தமிழர் கள் போராடியதன் விளைவு, சிங்கள அரச இயந்திரத்தை மற்றுமொரு முனையில் உடைக்கத் தொடங்கியுள்ளது .
இந்த இரு வேறுபட்ட காலகட்டத்து இனப்படுகொலை நடவடிக் கைகளானது, தமிழர்களின் மீதான சிங்கள இனவெறி குரோதம் கால ஓட்டத்தினுாடு மாற்றம்  காணாமல் ஆழம் பெற்றிருப்பதை  காட்டுகின்றது . 15 வருட காலத்து இடை வெளியில் போர் பாரிய அழிவினை சிங்கள இனவெறி ஆதிக்கத்திற்குகொடுத்துள்ளது. சிங்களத்தின் பொருளாதார அடித்தளம் ஆட்டம் கண்டுள்ளது; சிங்கள சமூக பண்பாட்டு வாழ்வின் சமூக நிலைமை சிதறடிக்கப்பட்டுள்ளது; அதனது அரசியல் வாழ்வு கறைபடிந்த – போரை அதிகார லாபங்களுக்காக தொடரும் இனவெறி தலைமைகளிடம் அகப்பட்டுள்ளது. தொடரும் பாசிசத்தின் அடிப்படை நியதி சிங்கள தேசத்தின் தமிழின எதிர்ப்பை அணையாது பாதுகாக்கின்றது
செம்மணி புதைகுழிகள் விடயமானது யாழ் குடாநாட்டில் சிறீலங்கா புரிந்துள்ள போர்க் குற்றத்திற்கு ஆதாரமாகும்.
உலக இயக்கப் போக்கில்போர்க் குற்றங்களையும் இனப் படுகொலைகளையும் தண்டிக்கும் அதிகாரம்  நசுக்கப்படும் – போராடும் மக்கள் கரங்களில் கொடுக்கப்படவில்லை
தற்போது சர்வதேச நீதி மன்றத்தில் இடம்பெறும் சேர்பியர்களுக்கு எதிராக பொஸ்னியா தொடுத்துள்ள இனப்படுகொலை குற்றங்களுக்கான ஆதாரங்களாக சேர்பியர்களின் பிகக் (Bihac) மற்றும் பகுதிகளில் இரகசியமாக உருவாக்கிய புதைகுழிகள் காட்டப்படுகின்றன. மறுபுறம் றுவண்டாவில் இனப்படுகொலையில் ஈடுபட்டவர்களை புதிய டுட்சி இன மக்களின் அரசு நீதி விசாரணைகளின் பின் பகிரங்கமாக சுட்டுக்கொன்று வருகின்றது. இத் தண்டனைகளானது நீதி வழங்கப்படுகிறது என்பதை பகிரங்கமாக வெளிக் காட்டும் நடவடிக்கையென ருவண் டாவின் நீதி அமைச்சர் வர்ணிக்கிறார் செம்மணி புதைகுழிகள் இதனை ஒத்த நடவடிக்கையாகும்.இடதுசாரிசிங்கள நாளேடான ‘யுக்திய’ இதுதொடர்பாக வெளியிட்ட  அதிர்ச்சியூட்டும் தகவலில் இனப் படுகொலைகள் உயர்தலைவர்களினதும், தளபதி களினதும் உத்தரவின் பெயரில் இடம்பெற்றுள்ளமை தெளிவாகின்றது
சிறீலங்கா முப்படைகளினதும் கூட்டுத் தளபதி ஜனாதிபதி சந்திரிகா, பாதுகாப்பு   இணை அமைச்சர் ஜெனரல் ரத்வத்த ஆகியோர் முதல் யாழ் குடாநாட்டு இராணுவத்தை தலைமை தாங்கிய தளபதிகள் வரை இவ்வாறு இனம் காணப்பட்டுள்ள நிரூபிக்கத்தக்க போர்க் குற்றங்களைப் புரிந்த குற்றவாளிகளாகியுள்ளனர்.
உலக இயக்கப் போக்கில் போர்க்குற்றங்களையும், இனப் படுகொலைகளையும் தண்டிக்கும் அதிகாரம்  நசுக்கப்படும் – போராடும் மக்கள்  கரங்களில் கொடுக்கப்படவில்லை. சர்வதேச நீதி நெறிமுறைகளும் நாடுகளுக்கிடையேயான உறவுகளுமே இனப்படுகொலைகளை தண்டிக்கும் விடயத்தில் ‘தீர்மானிக்கும்’ அதிகாரத்தை கொண்டுள்ளன
ருவண்டா இனப்படுகொலைகள் இடம்பெற்றபோது இவ் உலக நீதி அமைப்பும் – மன்றங்களும் அமைதி காத்தன. தத்தமது நலன்களுக்கேற்ற இராஜதந்திர மொழிகளை சர்வதேச சக்திகள் பரிமாறிக் கொண்டன.
ஈற்றில் இப் படுகொலைகளை புரிந்த சக்திகள் தோற்கடிக்கப்பட்டு நசுக்கப்பட்ட மக்களுக்காக  அதிகாரததை கைகளில் எடுத்தபோது “ருவண்டா இனப்படுகொலையில் தான் சரியாக நடக்கவில்லை ” என அமெரிக்கா ஜனாதிபதி கிளிண்டன் மன்னிப்புக் கேட்கின்றார்.
பொஸ்னியாவில் சேர்பிய அரசுஇனப் படுகொலைகளை அரங்கேற்றிய போது அதற்கெதிரான சர்வதேச சக்திகளின் நடவடிக்கை காத்திரமானதாக இருக்கவில்லை . பல்லாயிரம் படுகொலைகளும் – இழப்புகளும் ஏற்படுத்தப்பட்ட பின்னரே பொஸ்னியா விடுவிக்கப்பட்டது  இன்று பொஸ்னிய அரசு சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலையில் ஈடுபட்ட சேர்பியர்களை குற்றவாளிகளாக முன்நிறுத்தியுள்ளது.
இவ்விரு இனப்படுகொலைகளையும் ஒத்த தமிழர்கள் மீதான  சிங்கள தேசத்தின் படுகொலைகள் சர்வதேச நிகழ்ச்சித் திட்டத்தில் இன்று உரிய இடம் பெறவில்லை சிங்கள அரசின் திட்டமிடப்பட்ட பிரச்சார யுக்திகளும் பனிப்போருக்குப் பிற்பட்ட காலத்தில் தென்னாசியப் பிராந்தியத்தில் இழந்துவிட்ட கேந்திரமுக்கியத்துவம் இவ் சர்வதேச மந்தப்  போக்கிற் காரணங்களாகும்
ஆயினும் இனப் படுகொலைக் குற்றவாளிகள் எதிர்காலத்தில் தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும் என்ற இயற்கையான விதி இங்கும் பொருத்தமாயுள்ளது. 1983- ஜூலைப் படுகொலை முதல் செம்மணி புதைகுழிகள் வரை பல்லாயிரம் தமிழர்களை கொன்றொழித்த சிங்கள இனவாத குற்றவாளிகளை எமது வரலாறு பதிவுசெய்து வைத்துள்ளது. நாளை நாம் பலம் பெற்று  எம் தேசம் விடுவிக்கப்படும்போது சர்வதேச நெறிமுறை எமது விண்ணப்பத்தை அங்கீகரிக்கும். போர்க் குற்றவாளி கள் தண்டிக்கப்பட வேண்டுமாயின் நாம் விடுதலைக்கான எமது போரை வெல்ல வேண்டும்
ஆக்கம் :நாதன் 
வெளியீடு :எரிமலை இதழ் (1998)
மீள் வெளியீடு ;வேர்கள் இணையம் (2018) 
முதல் இணைய தட்டச்சு :வேர்கள்  இணையம் 
Please follow and like us:

தமிழீழம்