பிரிகேடியர் பால்ராஜ் – போர்க்களங்களின் புதியவரலாற்றுப் பெட்டகம்

-பவித்திரா

0
வன்னிமண் வனப்புடன் ஈன்ற ளித்தவெம்
வரலாற்று வித்தகன் வானுலகம் சென்றனே!
கன்னித் தமிழன்னை தன்மானம் காத்துநின்ற
கட்டிௗம் காளைகற் பூரமாய்ப் போயினனே!
முன்னிலைத் தளபதியாய் முடிசூடி நின்றவெம்
முத்தான தத்துவம் முழுநிலவா யானதே!
சென்னியிற் பதித்தேநாம் தொழுதிடும் மாவீரானய்ச்
செந்தமிழ்ச்செல்வன் சேர்ந்தனன்  இறையே:
தலைவனை மூச்செனக் கொண்டிலங்கு தம்பியாய்த்
தமிழீழமே தன்னுயர் தாரக மந்திரமாய்
மலையெனத் திடமுடன் மாற்றான் படைக்கோர்
மன்னும் சிம்மசொப்பனமாய்த் திகழ்ந்து
நிலையிலா இவ்வுலக வாழ்வினில் நிறைமாந்தர்
நெஞ்சத்தில் ஒளிரும் நெய்விளக்காய்த் திகழ்
விலையிலாத் தன்வாழ் வீய்ந்தோன் தன்னுயர்
வீரவரலாற்றினை விதந்துரைக்க விழைந்தோம்!
தேனொத்த தமிழாய்த் திகழுயர் தலைவனைத்
தேடினர் தீங்குசெய் இந்தியர் மனலாற்றினில் 
கானத்து விலங்குகளாய்க் கரிகாலனைச்சிறைப்பிடிக்கக்
காட்டாற்று வெள்ளமென வளைத்து நிற்கையில்
மானத்தை உயிரென மதித்துவாழ் மறவனாய்
மாசிலாவன்னி  மகன் மழவன்பாலசேகரன்
ஈத்துப் படையதன் இலக்கி னை  உடைத்து
இன்னுயிர் அண்ணனின் பொன்னுயிர் காத்தனன்!
கொக்குத் தொடுவாயின் கொடை யாய்க் கிடைத்தவன்
கொள்கையிற் பிறழ்விலாக் குலமகனாய் விளங்கிக்
கொக்காவில் மாங்குளம் கிளிநொச்சித் தாக்குதலில்
கொடியோராம் சிங்களத்தின் கொட்டம் அடக்கி
எங்காள மிட்டுக் கடற்காற்றுடன் மின்லென
எடுப்போடு எதிர்த்த படையெடுப்புத் தன்னைத்
தக்கதோர்தலைமை யெனத்தானே தோன்றித்
தடுத்தனன்  முல்லையொடு மணலாற்றின்

 

சிங்களத்தின் தலைகொய் சீரிய படைகொள்
சார்ள்ஸ் அன்ரனியின் சிறப்புத் தளபதியாய்ப்
பொங்குததமிழ்  மறவர் தம்  புலிப்படை தன்னுயர் 
புகழார்ந்தத துணைப்படைத் தளகர்த் தனாய்ச் 
செங்கதிராய்த் திளைத்துத் துன்லர்தா தாயிைற்
சுழன்று சிவப்பேற்றிச் சிதறிடச் செய்தோன்
மாங்காத ஒளியெத் துலங்கிடு மானிக்கம்
மாண்பு மெய்தனில் விழுப்புண்பல கண்டன்!
சூரியக் கதிரோடு முன்னேறிப்பாய்தலிற்
சூறாவளியெனக் கட்டளைகள் சுட்டிநின்றே
ஆரியர் படைதனை  அடித்து விரட்டினன் !
ஆனையிறவுச்சுற்றுலா விடுதிதனைத் தகர்த்து.
வாரி யழிக்கவென வவுனியா நின்றபடை
வன்னி விக்கிரம நடவடிக்கை தொடுக்கவே
கூரிய நுண்ணறிவிற் குற்றமற்ற போர்புரிந்து
கொடும்பகை விரட்டிக் குன்றென நின்றன்!
ஓயாத அலைகள் ஒன்றிரண்டு மூன்றென
ஓய்வின்றி உழைத்து ஆயுதங்கள் மீட்டுச்
சயாத திண்மையில் ஜெயசிக்குறு தன்னிலும்
தகர்த்தழித்த யாழ்தேவி தீச்சுவாலை களிலும்
நாயகனாய் நின்றுமே படைநடத்திவென்று
நானிலமும் மெச்சிட வாகைசூடி நின்றான் !
தாயாகத் தனைவளர்த்த அண்ணன்தன் எண்ணம்
தடையின்றி நிறைவேறத் தம்பிதனைக் கொடுத்தான்!
ஆண்டாண்டு காலமாய் அன்னியரின் ஆட்சிக்குள்
அகப்பட்டு நுடங்கிய ஆனையிறவுதன்னை
மீ ண்டும்நா மாண்டிட மெய்வருத்தம் நோக்காது
மிக்கவே பெற்றுத் தந்தோாம் பால்ராஜ்
ஈண்டிங்கு பிறப்பான் எம்முயிரிற் கலந்தான்
இணை யிலா வெற்றிகள் மென்மேலும் பெற்றிட
ஆண்டவன் திருநிழலிற் சேர்ந்தவன் தான்வளர்த்த
அரும்படை இயக்கியே அன்னை மண் மீட்பான்!
கவியாக்கம்:பவித்திரா 
வெளியீடு :சமர்கள நாயகன் நூல் (வெளியீட்டு பிரிவு ,அனைத்துலக தொடர்பகம் ,
தமிழீழ விடுதலை புலிகள் )
மீள் வெளியீடு மற்றும் இணைய தட்டச்சு © :வேர்கள் இணையம்  
 

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

 

Leave A Reply

Your email address will not be published.