ஏற்றம் பற்றி பேச்சு நடத்தும் தேசத்துரைமாரே குனிந்து பாருங்கள்.!

ஐ.நா சபையின் அடுக்குமாடி
உறுதியாக உயர்ந்து நிற்கிறது
மனித எலும்புகளின் மகத்தான உறுதியினால்
வானைப் பிடிக்க வளர்ந்து வருகிறது
பட்டொளி வீசி பறக்கின்ற கொடியினை
எட்டிப் பாருங்கள் – தொகை வகையாய்
சேர்ந்த உயிர்கள் ஆடித்துடிக்கின்றன.

தேசத்துரைமாரே குனிந்து பாருங்கள் பூவாய் இருக்கும் கம்பளம் கீழே.!

மேஜர் பாரதி அவர்களின் கவியாக்கத்தை வேர்கள் இணையம் குரலாக்கம் வடிவில் வெளியீடு செய்கின்றோம் .! ஐ.நா சபையின் அடுக்குமாடிஉறுதியாக உயர்ந்து நிற்கிறதுமனித எலும்புகளின் மகத்தான உறுதியினால்வானைப் பிடிக்க வளர்ந்து வருகிறதுபட்டொளி வீசி பறக்கின்ற கொடியினைஎட்டிப் பாருங்கள் – தொகை வகையாய்சேர்ந்த உயிர்கள் ஆடித்துடிக்கின்றன.மேடைமீது ஏறி இருந்துஏற்றம் பற்றி பேச்சு நடத்தும்தேசத்துரைமாரே குனிந்து பாருங்கள்பூவாய் இருக்கும் கம்பளம் கீழேபுழுவாய் நெளியும் மனித உடல்கள்அவை உங்கள் குருட்டுக் கண்களைவெருட்டி திறக்கும்.

Slået op af தமிழ்த் தேசிய ஆவணக்காப்பகம் i Torsdag den 6. juni 2019

மேடைமீது ஏறி இருந்து
ஏற்றம் பற்றி பேச்சு நடத்தும்
தேசத்துரைமாரே குனிந்து பாருங்கள்
பூவாய் இருக்கும் கம்பளம் கீழே
புழுவாய் நெளியும் மனித உடல்கள்
அவை உங்கள் குருட்டுக் கண்களை
வெருட்டி திறக்கும்.

 

கோழிச் செட்டைக்குள்
குஞ்சுகள்தன் பாதுகாக்கப்படும்
ஆனால் இங்கே பருந்துகள் தானே
பாதுகாக்கப்படுகின்றன.

ஐ.நா சபையே உன் ஏமாளித்தனத்தை
என்னென்று சொல்ல – கோடி கோடியாய்
ஏழை உயிர்களை ஏப்பம் விட்ட
வல்லூறுகளின் வண்டி
ஊதிப்பெருத்து உள்ளுக்குள் அடங்காது
செட்டைக்குள்ளே சின்னதாய் தெரியுது

‘உலக சமாதானம் – இந்த
உன்னத கோட்பாட்டிற்குள்
தலையைப் புதைக்கும் தீக்கோழி நீ
முகம் தெரியாவிட்டாலும் – சீ…
முழு உடலும் அம்மணமாய் தெரிகிறது.

உரிமைப்போர் எல்லாம் உன்னால்
உறுதிப்படுத்தப்பட வேண்டுமாம்
உலகம் சொல்கிறது.
சுதந்திரத்தின் சுகம் பற்றி சொல்வதற்கு
சொந்தமாய் உனக்கேதும் அனுபவம் உண்டா?
இல்லையே

எங்கள் தேசம் எங்கள் மக்கள்
எமதே உரிமை எனவே நாம்
சுதந்திரப் பிரகடனம்
செய்து முடித்திடுவோம்.

நாளை தியாகமும் திறமையும்
திடமாய் எமை வளர்க்கும் – அப்போது
சமநிலையை சரிப்படுத்த எம்மை நீ
சந்திக்க வேண்டிவரும்.
அக்கணத்தில் சுதந்திரம் பற்றிய
சொந்த அனுபவத்தை
நாங்கள் சொல்லித் தருவோம்.

-ஆக்கம் :மேஜர் பாரதி 

வெளியீடு :வெளியீட்டுப்பிரிவு – விடுதலைப்புலிகள் மகளிர் அமைப்பு, காதோடு சொல்லிவிடு நூல் பக்கம் (45- 46) ”, 

மீள் வெளியீடு :வேர்கள்  தமிழ்த் தேசிய ஆவணக்காப்பம்

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “

Leave A Reply

Your email address will not be published.