மேஜர் பாரதி வீரவணக்க நாள் .!

0

மேஜர் பாரதி அவர்களின் 27ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்…!

விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவின் அரசியல் துறைத் துணைப்பொறுப்பாளராகப் பணியாற்றிய மேஜர் பாரதி 07.06.1992ம் ஆண்டு சிறு நாவல் குளத்தில் சிங்களப் படையுடன்
நடைபெற்ற மோதலில் வீரச்சாவடைந்தார்.

நான் ஏன் எழுதுகின்றேன் ?
 
எழுத்துலகில் எனது பெயர் பொறிக்கப்பட வேண்டும் என்பதற்காக நான் எழுதவில்லை .மனச்சுத்தியுடன் எழுத்தை மட்டும் பார்த்து விமர்சிக்கின்ற ஒரு நேர்மையான விமர்சகனால் என் எழுத்துக்கள் பாராட்டப்பட்ட பொழுதுகளில் என் ஆத்மா சந்தோசப்பட்டதுண்டு ,அதே போல் அவர்கள் சுட்டிக் காட்டும் திருத்தங்களை ஏற்கும் மனப்பக்குவமும் எனக்குண்டு ,என் எழுத்துக்கள் ,நான் வாழும் இந்த சமூகத்தில்ஒரு சின்ன துடிப்பை ஏற்ப்படுத்தினால் அதுவே என் எழுத்தின் வெற்றியென நான் உணருகின்றேன்
 
– மேஜர் பாரதி

 

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Leave A Reply

Your email address will not be published.