பிரிகேடியர் பால்ராஜ்: நெருக்கடிகளை உடைத்தெறிந்த பெரும் சாதனையாளன்

 கொள்கை முன்டுெப்புப் பிரிவுப் பொறுப்பாளர் எழிலன் அவர்கள் 
பிரிகேடியர் பால்ராஜ்  அவர்களுடைய  கள நினைவை  பதிவு செய்துள்ளார்   குறித்த பதிவானது  சமர்கள நாயகன் நூலிலிருந்து தட்டச்சு செய்து வேர்கள் இணையத்தில்   இன்று  (19.05.2018) மீள்வெளியீடு   செய்கின்றோம்  .!

 

பால்ராஜ் அவர்கள் சுகயீனம்  காரணமாக வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். இந்தச்
செய்தி வெளியே வந்தபொழுது தமிழீழப் பரப்பொங்கும் மக்களுடைய மனங்களிலே
மிகவும் ஒரு சோகமான நிலைமை. ஏனென்றால் பெரும்பாலும் பிரிகேடியர் பால்ராஜ்
அவர்களை முழுமையாக தெரிந்த மக்களாகத்தான் இருக்கின்றார்கள். அவரை
நேரடியாக பார்க்காதவர்கள் கூட அவருடைய செயற்பாடுகளை நிறைய
அறிந்திருக்கிறார்கள். அனைவருடைய மனங்களிலேயும் பெரும் தளபதியை, பெரும் வீரனை
இழந்துவிட்ட சோகம் உருவாகி இருக்கிறது
பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் இந்த விடுதலைப் போராட்டத்தில் மிகப் பெரும் வியத்தகும் வீரனாக நின்று உழைத்த ஒரு மனிதர். தன்னை முழுமையாக இந்த விடுதலைப் போராட்டத்திற்குள்ளே அர்ப்பணித்து இந்த விடுதலையின் நெருக்கடியான  காலகட்டங்களிலே அந்த நெருக்கடிகளையெல்லாம் உடைப்பதற்காக பெரும் சாதனைகளை புரிந்த ஒரு மாபெரும் வீரன். அவருடைய ஒவ்வொரு காலகட்டமும், அவருடைய நடவடிக்கைகளின் ஒவ்வொரு காலகட்டங்களிலேயும் இந்த விடுதலைப்  போராட்டம் பெரும் வெற்றிகளை சந்தித்திருக்கின்றது. அந்த வெற்றிகளுக்கூடாக இந்த விடுதலைப்
போராட்டம் நெருக்கடிகளிலே இருந்து விடுபடுவதற்கான சந்தர்ப்பாங்கள் கிடைத்தன. அவருடைய அரவணைப்பு நடவடிக்கைகளின் போதெல்லாம் அவருடைய அரவணைப்பு எப்பொழுதுமே போராளிகளிடமும் மக்களிடமும் மறக்க முடியாத ஒரு சம்பவங்களாகத்தான் இருக்கும் போராளிகளைப் பொறுத்தவரையிலே, அவர் மிகுந்த அரவணைப்போடு, இந்த விடுதலையை தலைமையை நேசிக்கவேண்டும் என்கின்ற விடயாங்கள்  தொடர்ந்து சொல்லப்படுகின்ற செய்திகளாகவே இருக்கும்.
அவற்றினுடாக இந்த விடுதலையை நேசிக்கின்ற போராளிகளாகவும் விடுதலைப் பற்றோடு
தாங்களை அர்ப்பனிக்கின்ற போராளிகளாகவும் நிறையப்பேரை அவர் வளர்த்தெடுத்திருந்தார்
அவருடைய கடந்த கால செயற்பாடுகளிலே விடுதலைக்காக உழைத்த பெரும் சமர்கள், மிகப் பெரும் சமர்கள் பல இருந்தன. ஆகாய கடல் வெளி சமரைப் பொறுத்தவரையிலே அன்றைய காலப் பகுதிகளிலே அந்த ஆனையிறவை  கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளிலே நாங்கள் இறங்கிய பொழுது, அந்தப் பெரும் சமரை நின்று ஒழுங்குபடுத்தி அதை நடத்திய தளபதிகளில் ஒருவராக நின்று தன்னுடைய பனியை சிறப்பாக செய்து இருந்தார். ஆனால், அந்தக்
காலப்பகுதிகளிலே அதைக் கைப்பற்ற முடியாமல் போனதையிட்டு அவருடைய மனதிலே
திடமான ஒரு உணர்வு இருந்தது. இந்த ஆனையிறவை  நாங்கள் கைப்பற்றியே
ஆகவேண்டும் என்கின்ற உணர்வு அவரிடம் இருந்தது அதேபோல , அவர் எதிர்பார்த்தது போல அமைந்த ஆனையிறவை  கைப்பற்றுவதற்கான பெருஞ்சமரில், குடாரப்பு பகுதிகளிலே தரையிறக்கம் செய்யப்பட்டு, ஊடறுத்துச் சென்று. அந்தப்பகுதிகளிலே நின்று தாக்குதல் நடத்தி
அவர்களுடைய மின்னுபகரணங்களை தடைசெய்ய வேண்டும் என்கின்ற ஒரு பொறுப்பு அவருக்கு கொடுக்கப்பட்டிருந்தது. மிகவும் நெருக்கடியான சூழலைக்
கொண்ட பிரதேசமாக அது இருந்தது. ஏற்கனவே காலிலே பட்ட காயத்தினால், முழுமையாக நடந்து செல்வது கூட கடினமாக இருந்த நிலையிலும் தலைவரின் கட்டளைக்கிணங்க முழு விருப்போடு குறிக்கப்பட்டபோராளிகளோடு தரையிறக்கம் செய்து, எதிரியினுடைய பெரும்தொகை படைகளுக்கூடாக  ஊடறுத்துச்சென்று, ‘நான் திரும்பி இந்த ஏ-9 வீதியாலேதான் வந்து உங்களைச் சந்திப்பேன்” என்று சொல்லிவிட்டுச்சென்றதைப்போலவே, அந்த வீதியைக் குறுக்கறுத்து அவர்களுடைய நிலையங்களை தடைசெய்து, ஆனையிறவை நாங்கள் வெற்றி கொண்ட பொழுது. அந்த வீதியினாலேயே வந்து எங்களை சந்தித்து  இருந்தார்.
அதேபோன்று, யாழ்ப்பாணத்திலே இருந்து நாம் இடம்பெயர்ந்து வந்திருந்த நேரம், தமிழீழ விடுதலைப் புலிகள் 90 வீதமான பலத்தை இழந்து விட்டார்கள், இன்னும் 10 வீதம்தான் இருக்கிறது என்று சொன்னவர்களின் எண்ணங்களைப் பொய்யாக்கிய முல்லைத்தீவு முகாமை தாக்கியழிக்கின்ற நடவடிக்கையிலே விடுதலைப் புலிகள் ஈடுபட்டபொழுது அதனை முன் நின்று செயற்பட்ட தளபதிகளிலே ஒருவராக நின்று. அந்த பெரும் வெற்றியை எங்களுக்கு பெற்றுத்தருவதற்கான நடவடிக்கையிலே ஈடுபட்டிருந்தார்
அதேபோன்று விடுதலைப்புலிகளுடைய பலத்தை வெளியே கொண்டுவந்த மாங்குளம் இராணுவ முகாம் தகர்ப்பிலே தன்னுடைய அனைத்து நடவடிக்கைகளையும் செயல்படுத்தி, வழிநடத்தி, பெரும் வெற்றியை பெற்றுத் தருகின்ற நடவடிக்கையாக எங்களுக்கு மாற்றித் தந்திருந்தார் இப்படியாக அவருடைய ஒவ்வொரு தாக்குதல் நடவடிக்கைகளும் களமுனைகளிலும் எளங்களுக்கு மிகப்பெரும் வெற்றிகளை ஈட்டித்தந்த சமர்களாகவே இருந்தன. ஒரு விடுதலை வீரன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக தன்னுடைய செயற்பாடுகளை அவர் செய்து கொண்டு இருப்பார் மிகவும் எளிமையாக, எல்லோரோடும் அன்பாக பழகுகின்ற, எல்லோரையும் அரவணைக்கின்ற  மக்கள் மீது மிகவும் நேயம் கொண்டவராக வாழ்ந்தார். எங்களுடைய படைநடவடிக்கைளிலே தான் போகின்ற இடங்களிலே மக்கள் படுகின்ற துன்பங்களை அறிந்து விட்டு அவற்றை எப்படி சீர்செய்ய
வேண்டும், அந்த மக்களை நாங்கள் எப்படி ஒழுங்கு படுத்தவேண்டும் என்கின்ற விடயங்களை கூட எங்களோடு வந்து கதைத்துக்கொள்ளுவார். அப்படியாக ஒரு மிகப்பெரும் பண்பாளாக, மிகப்பெரும் தளபதியாக, மிகப் பெரும் வீரனாக, தலைவரின் அன்பைப்பெற்ற ஒரு படைத்தளபதியாக, அவர் தன்னு டைய பணிகளை இவ்வளவு காலமும் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார் சுகவீனம் அவரை தொடர்ந்து வாட்டியபடியே இருந்தது. கடந்த காலங்களிலே அவருக்கு ஏற்பட்டிருந்த அந்த சுகவீனம் காரணமாக, பல தடவைகள் அவர் வைத்தியசாலைகளிலே சிகிச்சைபெற வேண்டிய நிலைப்பாடுகள் இருந்தன. அந்த வேதனைகளை கூட அவர் ஒரு பொழுதும் வெளியே காட்டிக்கொள்வது
கிடையாது. அவருடைய அந்த சுகவீனம் அவரை வாட்டுகின்ற பொழுது கூட அதைப் பொருட்படுத்தாது இந்த தேசத்தின் தேவை என்ன  இருக்கின்றதோ அதை செய்ய வேண்டும் என்ற அந்த மன உணர்வோடுதான் அவருடைய செயற்பாடுகள் தொடர்ந்தும் இருந்தன. இன்று அவருடைய இழப்பு என்பது தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு பெரும் இழப்பாகவே இருக்கிறது.
நினைவுப்பகிர்வு :   எழிலன்
(கொள்கை முன்டுெப்புப் பிரிவுப் பொறுப்பாளர்)
வெளியீடு :சமர்கள நாயகன் நூல் (வெளியீட்டு பிரிவு ,அனைத்துலக தொடர்பகம் ,
தமிழீழ விடுதலை புலிகள் )
மீள் வெளியீடு மற்றும் இணைய தட்டச்சு © :வேர்கள் இணையம்  
 

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” 

Leave A Reply

Your email address will not be published.