இலைகள் உதிரும் கிளைகள் ஒடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

Category: உறங்காத கண்மணிகள்

லெப். கேணல் பொற்கோ குறித்து பொட்டம்மான் கூறுகையில் ….

தளபதி லெப். கேணல் பொற்கோ பற்றி அம்மான் சொன்னது……….. லெப். கேணல் பொற்கோ சாதாரண போராளிகளை விட பல்வேறு விடயங்களில் மாறுபட்டவராக இருந்தார்” என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் தெரிவித்துள்ளார். லெப். கேணல் பொற்கோ அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவில் கருத்து பகிர்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்: “போராட்டத்தில் இணைவதற்கு முன்னர் கிறிஸ்தவ பாதிரியாருக்கான கற்கை நெறியில் பொற்கோ இணைந்திருந்தார். அநேகமாக அக்கற்கை நெறியின் நடுப்பகுதியை கடந்த […]

பகிர

பிரதி


எங்கள் தேசம் நிமிர்வுற நிமிர்ந்தவன் மல்லி.!

எங்கள் தேசம் நிமிர்வுற நிமிர்ந்தவன் மல்லி.! லெப். கேணல் மல்லி, விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவன். இவன் விடுதலைப்போராட்ட காலத்தில் பல களங்களில் தன் முத்திரையைப் பதித்தவன். இரு தேசங்களின் ஆக்கிரமிப்பு இராணுவங்களுடன் இவன் போராடினான். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு என்னும் இடத்தில் பிறந்தான். நீண்ட போராட்ட வாழ்வில் ஒயாது கடுமையாக உழைத்தவன். தனைவருத்தி தன்னொளி பார்த்தவன். அமைதிப் போர்வையுடன் வந்த இந்தியப் படைகள் முள்ளியவளையில் முகாம் இட்டிருந்தன. 1990ம் ஆண்டில் இம்முகாம் மீதான தாக்குதலில் பங்கேற்று […]

பகிர

பிரதி


எங்கள் போராட்ட வரலாற்றில் அவர் ஓர் தனி அத்தியாயம்.!

எங்கள் தலைவரின் சேனைக்குள் உருவான ‘அக்கினிக் குழந்தை’ மெல்ல உயிர்ப்புக்காக உழைத்தவர்களில் லெப்.கேணல் அகிலாவின் பங்கும் அளப்பரியது. அவருள் இருந்த அந்த ஆளுமை, பல்துறை விற்பன்மை, எமது தேசத்தைக் கடந்து பறந்து போன பெருமை….. அவரது தனித்துவமான இடம் நிரப்பப்பட முடியாததுதான். எப்போதுமே காற்சப்பாத்துக்களைக் கழற்றியறியாத கால்கள், நடந்துவரும் போது தனியானதொரு கம்பீரம் நடையிற் தெரியும். அந்த மெல்லிய உருவத்தின் வல்லமை, அதைவிட உறுதியின் வலிமை, எல்லாவற்றிலுமே முன்னுதாரணமான போராளி. அகிலாக்கா எல்லாப் போராளிகளையும் தொட்டுச்சென்ற அவரது […]

பகிர

பிரதி


எல்லாளன் நடவடிக்கையில் முக்கியபங்காற்றிய லெப்.கேணல் தமிழ்மாறன்….!

22.10.2007 அன்றைய நாளை தமிழ் மக்கள் மட்டுமல்ல, சிங்கள மக்களும் ஏன் உலக இராணுவ வல்லுனர்களும் இலகுவில் மறந்து விடமாட்டார்கள். எல்லாளனைத் தோற்கடித்ததாகப் பெருமைகொண்ட சிங்கள இனத்திற்கு, யார் எல்லாளன் என்பதை தமிழீழ தேசியத் தலைவர் காண்பித்த நாள் அது. ஏன் இந்த உலகமும் எல்லாளனை அறிந்துகொண்டது அந்த நாளில்தான். இந்த எல்லாளன் நடவடிக்கை ஒரு சில மணி நேரங்களுக்குள் நடந்து முடிந்துவிட்டபோதும், இதற்கான திட்டமிடல்களும், பயிற்சிகளும், வேவுகளும் மிக நீண்ட காலமாக இடம்பெற்றன. இந்த வெற்றிக்காக […]

பகிர

பிரதி


அவன் நிறையவே சாதிக்கவேண்டியவன்……!

யாழ்ப்பாணத்து மண்ணில் முருகைக் கற்களினுள் ஊற்றெடுப்பது தண்ணீர் மட்டுமல்ல வீரமும்தான். இல்லாதுவிடின் வந்தேறி ஆக்கிரமிக்கும் அன்னியருக்கு தண்ணீர் பாய்ச்சி குளிரவைத்து குந்தியிருக்க இடம் கொடுத்திருக்குமல்லவா? இல்லையே? விதையை உடைத்து மண்ணைப் பிளந்து யாழ்மண்ணில் பலத்தையெல்லாம் திரட்டி காற்றைக் கிழித்து சூரியனைத் தொட்டுவிடத் துடிக்கும் பனைமரத்துடம் லெப். கேணல் செந்தமிழ்ச்செல்வனையும் பார்க்கிறேன். 1990 யாழ்ப்பாணம் இந்திய ஆக்கிரமிப்புப் படைகளிடமிருந்து மீண்டும் தமிழர்படையாம் புலிகளின் கட்டுப்பாட்டினுள் வந்திருந்த நேரம். மாவட்ட புலனாய்வுப் பொறுப்பாளருக்கு முகவர்களாக செயற்பாட்டளர்களாக ஆட்கள் தேவைப்பட ‘கட்டைக்’ […]

பகிர

பிரதி


காற்றில் கலந்துவிட்ட தென்றல் லெப்.கேணல் டேவிட்.!

தமிழீழத்தின் திசைகளில் மோதும் காற்றில் கலந்துவிட்ட தென்றல். விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு பரிமாணங்களையும் தன் காலத்திலேயே நேரடியாகக் கண்ட மிகச் சில போராளிகளில் ஒருவன். தமிழீழத்தின் விடுதலைப் போராட்டம் , எல்லாக் காலங்களிலும் , கடல் பிரயாணங்களை முதன்மைப் படுத்துவதாக அமைந்தது. எத்திசையும் கடலால் சூழப்பட்ட எம்தாயகத்தின் , தாக்கமுள்ள நகர்வுகள் கடல் மூலமே மேற்கொள்ளப்பட்டுள்ளன. எமது விடுதலைப் போராட்டத்தில் , கடல் பயணங்கள் பிடித்திருந்த இடத்தின் , அதே அளவு இடத்தை , எமது கடல் […]

பகிர

பிரதி


வெளிவராத இரகசியங்களின் வெளிச்சம் கேணல் சங்கீதன் .!

வெளிவராத இரகசியங்களின் வெளிச்சம் கேணல் சங்கீதன் .! உளவுத்தலமைக்கு கடைசிவரை மதி உரை (உறுதி) கொடுத்து உயர்ந்தவனே உயிர்போகும் இறுதிவரையும் உயர் இரகசியங்களை தன்னகத்தே காத்தவனே.! வெளிவராத இரகசியங்களின் வெளிச்சம் இவனே.! தேடித் தேடித் தான் படித்து தேர்ந்தெடுத்து பலரை வளர்த்து விட்ட வித்தகனே.! எதிர்காலத்தை நிகழ்காலத்தில் கணித்து மதிப்பீடுகளை மனம் கோணாது முன்வைத்த விவேகனே.! ஈழப்போரின் கடசிக்களம்வரையும் ஈகம் ஒன்றை தவிர வேறொன்றையும் தேர்ந்தெடுக்காத புனிதனே விழுப்புண் ஏற்றபோதும்.! விசாரணையில் சூட்சுமம் அவிழ்த்து விசமிகள் வேரறுத்த […]

பகிர

பிரதி


மகத்தான மாவீரன் கேணல் வீரத்தேவன்.!

மகத்தான மாவீரன் கேணல் வீரத்தேவன்! தாயை விட தாய்நாடுதான் முக்கியம் என்பதை சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன் அந்த வார்த்தைகளின் உயிருள்ள உருவத்தை அவனில் நான் கண்டேன். வீரத்தேவனின் துணிகரமான சாதனைகளை என்னால் எழுத்தில் வர்னிக்க முடியாதவை இருந்தாலும் எனது மனதைத்தொட்ட ஒரு நிகழ்வை மட்டும் அவனது மன உறுதியை எழுத உந்தியது.1996ஆம் ஆண்டு 9ஆம் மாதம் ஆரம்பத்தில் மட்டு அம்பாறை மாவட்ட புலனாய்வுப்பகுதிக்குப் பொறுப்பாளராக இருந்த திரு நிக்சன் அவர்கள் வவுனியா மாவட்ட புலனாய்வுப்பொறுப்பை ஏற்றிருந்த காலம் நிக்சன் […]

பகிர

பிரதி


விடுதலையின் விழுதெறிந்தவன்….!

நேற்றுத்தான் அவனது வீடுக்குச் சென்றிருந்தேன். ‘முதுமை’ அவரை அந்தப் பனையோலைப் பாயில் கிடத்தியிருந்தது. தன் வாழ்நாட்களின் இன்ப, துன்பங்களை பௌர்ணமி முழுநிலவுப் பொழுதில் மீட்டி அசைபோடும் ஆறுமுகம் ஐயாவுக்கு மனைவி பாக்கியம்கூட அவருக்கெனக் கிடைத்த பாக்கியம்தான். “அப்பா” இனிமையான தாழ்வான என் அழைப்பு. என் முகத்துக்கருகாக ‘கரிக்கன்’ விளக்கினை நீட்டியவர் “மங்கிய பொழுதுகளின் படலையைத் திறந்து ‘அப்பா’ என என் மகன் அழைப்பதாய் ஞாபகம்” என்றவாறே கதைக்கத் தொடங்கினார். “எப்பையாவது ஒரு பொழுதில் வருவான். ஈரம் பட்டிருக்கும் […]

பகிர

பிரதி


நிமிர்ந்த பனை.!

சிலந்திவலைப் பின்னலாகிப் படர்ந்திருந்த இந்தியர்களின் கையில், தமிழீழம் சிக்கிப்போயிருந்தது ஒரு காலம்.மறக்க முடியாத அந்த நாட்களில் யாழ்ப்பாணத்தில் நின்றுபிடித்து புலிகளின் சுவடுகளைப் பேணிக்காத்து நிலைநிறுத்தி வைத்திருந்த வீரர்கள், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சிலபேர்தான். அந்தச் சிலபேருக்குள் நேற்றுவரையும் எஞ்சியிருந்தவந்தான் சூட். அவனை விளங்கிக்கொள்ள அந்த நேரத்து “இராணுவச் சூழ்நிலை” யைப் புரிந்துகொள்ளவேண்டும். அந்த சூழ்நிலையைப் புரிந்து கொள்ள வலிகாமத்தின் தரையமைப்பைத் தெரிந்துகொள்ள வேண்டும்.தமிழீழத்தில் வேறெங்கும் இல்லாதவிதமாக முற்றுமுழுதான நகரச் சூழலை பெரிய அளவில்கொண்ட புவியியல் அமைப்பையும், குறைந்தளவு நிலத்தில் […]

பகிர

பிரதி


தமிழீழம்