இலைகள் உதிரும் கிளைகள் ஒடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

Category: எரிமலை இதழிலிருந்து

ஆழிப்பேரலை புதிய பாதைகளைப் புலிகளுக்குத் திறந்துவிட்டிருக்கிறது

ஆழிப்பேரலை புதிய பாதைகளைப் புலிகளுக்குத் திறந்துவிட்டிருக்கிறது என Marie-France Cale என்று அழைக்கப்படும் பத்திரிகையாளர் கூறுகிறார் இலங்கைத் தீவில் கடல்கோளால் பாதிக்கப்பட்ட  பகுதிகளை நேரில் சென்று பாத்த பின் அவர் எழுதிய நீண்ட கட்டுரையின் ஒரு பகுதியின் தமிழாக்கத்தை இங்கு தருகிறோம்.  கிளிநொச்சிநகரம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது ‘பொறுத்தல்’ என்கின்ற சொல் தமிழீழ விடுதலைப் புலிகளின் அகராதியில் ஒருபொழுதும் இருந்ததில்லை புலிகள் இலங்கையின் வடக்கு, கிழக்கின் பெரும் பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். அவர்கள் மக்கள் மத்தியில் ஒழுங்குமுறைகள் பேணப்படுவதில் மிகுந்த அக்கறையோடு செயற்பட்டு வருகிறார்கள் . ஒழுங்குமுறைகள் பாரதூரமாக மீறுப்படுமிடத்து புலிகள் அவர்களை நீதியின் முன் நிறுத்தி விசாரணை செய்வார்கள். தலைவர் பிரபாகரன் அவரது நாட்டு மக்களால் தந்தை என்ற ஸ்தானத்தில் வைத்து நோக்கப்படுகிறார்.  […]

பகிர

பிரதி


சுதந்திரம் நோக்கி முன்னேறிச் செல்லும் தமிழீழ தேசத்தின் படிக்கற்கள்.!

தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்று பெரும் திருப்புமுனை ஒன்றில் நிற்கின்றது. மண் மீட்பிற்கான வழிகள் தெளிவாக திறக்கப்பட்டுவிட்டது. எமது தேசம் விடுதாளி நோக்கி விரைந்து முன்னேறும் என்ற உத்தரவாதம் மக்களுக்கு தெளிவாக வழங்கப்பட்டுள்ளது. ஓயாத அலைகள் 03ன் வெற்றி, அறிவுப்புகளுக்கான அடிப்படையாகும். அதாவது சிங்களப் பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை முறியடித்து, தமிழீழ தேசம் மீட்கப்படும் என்பதை இந் நடவடிக்கை மூலம் விடுதலைப் புலிகள் உறுதி செய்துள்ளனர். வேறு விதமாகக் கூறுவதானால் தமிழ் மக்கள் விடுதலை நோக்கி விரைந்து […]

பகிர

பிரதி


ஈழத்தின் முதல் வித்து லெப். சங்கர்….!

லெப். சங்கர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்தாக வீழ்ந்த மாவீரன். இன்று தமிழீழ விடுதலைப் போராட்டம் உலகளாவிய ரீதியில் கூர்ந்து கவனிக்கப்படுவதற்கு முதலாவது அத்திவாரக் கல்லாய் அமைந்த உறுதி மிக்க போராளி லெப். சங்கர். சத்தியநாதன் என்னும் இயற்பெயரைக் கொண்ட லெ. சங்கர் 1961இல் பிறந்தவர். 1977ஆம் ஆண்டு… வீட்டில் கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு அவர் பண்ணை ஒன்றில் இயங்கிய விடுதலைப் புலிகளின் பாசறையை அடைந்தார். விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் பண்டிதருடன் […]

பகிர

பிரதி


மெளனம் கலைத்து வெடித்த துப்பாக்கி .!

மெளனம் கலைத்து வெடித்தது துப்பாக்கி. வெடித்த துப்பாக்கியின் கந்தகப் புகை எழுதிச் சென்ற செய்தி அடிமையாய் அற்பத்தனமாய் சிங்கள பௌத்த பேரினவாத அரசின் திட்டமிட்ட அராஜகச் செயலுக்குப் பலியாகிப் போனவர்கள் எங்கள் நாதனும் கஜனும் நீண்ட சிறீலங்கா அரசின் படுகொலைக் பிரான்ஸ் தேசத்தின் லாசப்பல் தெரு இத்தத்தால் சிவந்துபோனது. இரத்தச் சிவப்பில் வீழ்ந்து கிடந்தவர்கள் மனித நேசத்தின் மகத்தானை முத்திரைகள் இரண்டு எமது தேசத்தின் முழுமையான விடுதலைக்காக முட்களிடையே மலர்ந்த ரோஜாக்கள் இவர்கள் வசதிகளையும் வாய்ப்புக்களையும் தேடி […]

பகிர

பிரதி


தமிழீழ மங்கையர்க்கு ஈடில்லை .!

  தமிழீழம் பெற்றெடுத்த மங்கையே! தரணியிலே மக்கு ஈடில்லை ! தாயகம் வெறிட புறப்படு: தழுவும் நெஞ்ச மிணைத்து அணுக் கருவி யெடுத்து வெடி குண்டினை இசைத்திடுவோம்! புவிமேனி கொழும்பினிலே புகழ் தமிழ் விடுவோம் ஏய்ச்சும் மனிதன் காணின் எட்டி மிதித்திடுவோம் இனிலரும் யூகத்தில்  இன்ப நிலவுக்கும் செல்வே’ ங்கள் இதய வீணை புலிக்கொடியும் இமயமாய் நடுவருவோம்! அறிவையர் ஆய்ந்தெடுத்த விண்கலத்தில் தவழ்ந்து நீரிவோம் அண்டத்தில் கோபல கண்டிடுவோம் உலகமே! உமக்கு முன்னால்   கவியாக்கம் : […]

பகிர

பிரதி


எழுச்சியும் மீட்பும்.!

போர்முனைக்கு பொருட்களை எடுத்துவந்தன. தோளில் மூங்கில்த்தடி துலாக்கள் மூலம் மக்கள் பொருட்களைக் கொண்டு சென்றனர். போரின்போது எதிரியின் குண்டுகளுக்கு மத்தியில் மக்கள்படை, சமையல், மருத்துவப்பணி, போக்குவரத்து போன்ற சகல பணிகளையும் செய்தது’ “மக்கள் போரின் இராணுவக்கலை” என்ற நூலில் வியட்நாம் விடுதலை அமைப்பின் இராணுவ தளபதி ஜெனரல் கியாப். லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த நிக்கரகுவா விடுதலைப் போராட்டம், மக்கள் எழுச்சிக்கு சிறந்த உதாரணம். சன்டினிஸ்டா போராளிகள் விடுதலைப் போரை உச்சநிலைக்குக் கொண்டு வந்த போது, இருந்த மக்கள் […]

பகிர

பிரதி


தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் திரு .கரிகாலன் அவர்களுடான நேர்க்காணல் .!

சுவிஸ் நாட்டில் 2004 ம் ஆண்டு நடைபெற்ற பொங்கு தமிழ் எழுச்சி நிகழ்வில்  கலந்துகொள்ள  சுவிஸ் நாட்டிற்கு வருகை தந்திருந்த  தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்  திரு .கரிகாலன் அவர்களுடான நேர்க்காணல்   காலத்தின் தேவை கருதி வேர்கள் இணையத்தில்  மீள்  வெளியீடு செய்கின்றோம்   கேள்வி :- புலம்பெயர்ந்து வாமும் தமிழீழ மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் உள்ளக்கிடக்கைகளை, அவர்களின் உணர்வு நிலையை அறிந்துகொள்ளும் சந்தர்ப்பம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இங்குள்ள மக்கள் தொடர்பில், நீங்கள் என்ன கருதுகிறீர்கள்! பதில் […]

பகிர

பிரதி


உயிர் ஒன்று மெய் இரண்டு .!

கார்வண்ணன் வவுனியாவில் வீரச்சாவு ,அரசவானொலி அன்று பகலே முன் உணரவைத்த ஊகம் எமது தொடர்புசாதனத்தினுாடும் உறுதியாகிப்போனது     ‘கார் இன் பணியின் தாக்கம்……… அவனது சாவின் காரணி ——–அவையல்ல இங்கு பேசுபொருள் வேறொன்று, சோகம்,பாசம், அந்தரம், பரிதவிப்பு, ஆறுதல், தேறுதல் ஆக உணர்வுகளின் சங்கமம்.     ஒரு பெயரில் பலர் இருப்பது ஒன்றும்புதினமல்ல, இருப்பினும் எம்மில் புலனாய்வுத்துறையில் பலரில் இவர்கள் இருவருக்கும் மட்டும் பெயர் கார்வண்ணன். செல்லமாக ‘கார்இரண்டு கார்வண்ணனும் வெவ்வேறு பணியாக ஒரே பணிக்களத்தில் […]

பகிர

பிரதி


அதிர்ச்சிநோய் எமக்கல்ல”

அதிர்ச்சிநோய் எமக்கல்ல”இது 1993ஆம் ஆண்டு வெளியான தமிழீழத்தின் ஆன்றோனான நாக – பத்மநாதன் ஐயாவின் உருவகங்களுக்கான தலைப்பு. இத்தலைப்பும், இத்தலைப்பின் கீழ் வரும் உருவக்கமும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இன்றைய அதியுயர் வளர்ச்சிநிலை கண்டு பதறியடித்து வரலாறு பிதற்றும் சர்வதேசத்திற்கு எவ்வளவு சாலப்பொருந்துகின்றது என்பதைக் காட்டுவதே இக்கட்டுரையின் இலக்கு. இப் பிதற்றல்களை நாங்கள் தொகுத்தால் . அயலிலுள்ள அதிகாரத்தோர் (தமிழீழம் அமைப்பதற்கு அனுமதிகோரி தமக்கு அனுப்பப்பட்ட விண்ணைப்பத்தை நிராகரிப்பது போன்றதொனியில்) தமிழீழம் அமைவதை அனுமதியோம் என்கிறார்கள். அதிகாரத்தை […]

பகிர

பிரதி


தாயும் மகளும்…….!

போராட்டக் களத்தினிலே மாவீரர்களாகிவிட்ட போராளிகளை ஈன்றெடுத்த பெற்றோர்களின் மனம், இவ்வீரர்களைப் பெற்றதற்காக ஒரு புறம் பெருமிதம் கொண்டபோதினிலும், மறுபுறம் ஏக்கம் கலந்த ஒரு வெறுமையும்கூட அங்கு உள்ளது. எனினும் ஏதோ ஒரு நம்பிக்கை கலந்த நிலையினிலேயே பெரும்பாலான பெற்றோர்கள் வாழ்கின்றார்கள். இப்போராட்டத்திற்குத் தொடர்ந்தும் தமது பங்களிப்பை வழங்கி வருகின்றார்கள். அந்த வரிசையிலே 2ம் லெப். சாளினியின் பெற்றோரை இங்கு சந்திக்கின்றோம். சாளினி அக்காவின் வீட்டுவாசலைத் திறந்து ”அம்மா” என்றவாறு உள்ளே செல்லவும், ”வாருங்கோ பிள்ளையள், சாளியை உங்களுக்குத் […]

பகிர

பிரதி


தமிழீழம்