இலைகள் உதிரும் கிளைகள் ஒடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

Category: இனப்படுகொலைகள்

தமிழ் மக்களுக்கு எதிரான சிறிலங்கா அரசின் இனப்படுகொலைகள் .!

இலங்கைத்தீவின் வரலாறு அரசிய லமைப்புச் சட்டத்தின் ஊடாக பௌத்த மதத் துக்கு முதலிடம், புத்தசாசன அமைச்சினூடாகப் பஞ்சசீலக் கொள்கைகளுக்குப் பிரத்தியேக இடமும் கொடுக்கப்படுவதாகக் கூறப் படுகின்ற போதிலும் அது நடைமுறையில் பெருமளவுக்கு படுகொலைகளால் அறியப் படும் வரலாறாகவே இருந்துவருகிறது. இந்ததவிர்க்கமுடியாததும் சகிக்க முடியாததுமான துர்ப்பாக்கியமான நிலைக்கான அத்திவாரம், இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்பான காலத்திலேயே இடப்பட்டு இருக்கின்றது. அப்போதிலிருந்தே இந்த நாட்டை ஆளத் தலைப்பட்ட சிங்களத் தலைவர்கள், சிங்கள பௌத்த தேசியம்கொண்ட ஒரு நாடாகவே இலங்கையை வைத்திருக்க […]

பகிர

பிரதி


இலங்கை வரலாற்றில் தடம்பதித்த இனவன்முறைகள்

இலங்கை வரலாற்றில் தடம்பதித்த இனவன்முறைகள் எமது நாட்டில் இனக்குரோதம் சுதந்திரத்தின் பின் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்குப் பொருளாதார ரீதியான காரணிகள் சிறிதளவே செல்வாக்குச் செலுத்தியுள்ளன. பல இனங்கள் வாழும் இலங்கை போன்ற நாடுகளில் இனரீதியான பிரச்சினையின் தீவிரத்திற்குக் கடந்தகால அனுபவங்களை வெளிக்காட்டும் வெறுப்பான சம்பவங்களைக் கொண்ட வரலாறே காரணமாக இருந்துள்ளது என்பது தெளிவு. காலத்துக்குக் காலம் மேற்கொள்ளப்பட்ட அகிம்சாவாதிகளின் போராட்டங்களினால் கிடைத்த கசப்பான அனுபவங்கள் மற்றும் ஏமாற்றங்கள், ஒதுக்குமுறைகள், ஒடுக்குமுறைகள் போன்றவற்றை வெளிக்காட்டிய வரலாறு இலங்கையின் தமிழர் […]

பகிர

பிரதி


கறுப்பு யூலை 1983 ஒரு அனுபவப் பகிர்வு.!

ஈழத் தமிழினம் டீ.எஸ். சேனநாயக்கா போன்ற சிங்களப் பேரினவாதத் தலைவர்களால் காலத்துக்குக் காலம் பொருளாதாரரீதியாகவும், நில உரிமை ரீதியாகவும், மொழி ரீதியாகவும் நயவஞ்சகமாகவும் நேரடியாகவும் நசுக்கப்பட்டுக்கொண்டிருந்தாலும், அவற்றுக்கெதிராக அவ்வப்போது சில அரசியல் தலைவர்களது குரல் ஒலிப்பதும், சில அற்பசொற்ப சலுகைகளுக்காக அடங்கிப்போவதும் நாம் கண்ட, காண்கிற அனுபவங்களானாலும், தமிழினத்தை தன்னிலைபற்றிச் சிந்தித்து, தனக்கென ஒரு நாடு தேவை என்ற தீர்வைக் கொடுத்தது என்னவோ, சிறீமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரது ஆட்சிக் காலத்தில் அமுல்படுத்தப்பட்ட ‘தரப்படுத்தல்” என்ற தமிழ் மாணவரது […]

பகிர

பிரதி


வன்னிக்காடுகளில் சிறிலங்கா ஆழஊடுருவும் தாக்குதல் படையணி.

23.05.2008 அன்று முறிகண்டி- அக்கராயன் வீதியில் பள்ளி மாணவர்கள் உட்பட 16 பேர் லலித் ஜெயசிங்க என்பவரின் தலைமையிலான சிறிலங்கா படையின் ஆழஊடுருவும் தாக்குதல் அணியினரால் கொல்லப்பட்டவர்களின் 11 ம் ஆண்டு நினைவு நாள்….! சிறிலங்கா படையினரின் ஆழ ஊடுருவும் தாக்குதல் அணிகளின் ஆதிக்கம் 2008 ஆம் ஆண்டு வன்னிக்காடுகளை சூழ்ந்திருந்தது. 1998,1999 காலப்பகுதி போன்று நிலமை 2008 இல் இருந்திருக்கவில்லை. LRRP(Long Range Reconnaissance Patrol) or Deep Penetration Unit (DPU)இன் தாக்குதல்களில் பல […]

பகிர

பிரதி


“தமிழின அழிப்பு நாள்” 10 ம் ஆண்டு நினைவு.!

2009 மே 18ம் தேதி அன்று முள்ளிவாய்க்கால் மண்ணிலே உலக வல்லாதிக்க நாடுகளின் கூட்டு ஒத்துழைப்புடன் சிறிலங்கா அரசு மேற்கொண்ட தமிழினப் படுகொலையின் வலிசுமந்த 10 ம் ஆண்டு நினைவு நாள். தமிழின அழிப்பு நாள் (Tamils Genocide Day) 21ம் நூற்றாண்டின் அதியுச்ச இனவழிப்பு தமிழீழ தேசத்தின்மீது காலங்காலமாக அன்னியரால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகளின் உச்சம்தான் 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் முள்ளிவாய்க்காலில் நடந்த தமிழர் இனவழிப்பு நினைவுநாள்  உலகத் தமிழ் மக்களால் […]

பகிர

பிரதி


முள்ளிவாய்க்கால் பார்த்ததுண்டா.!

முள்ளிவாய்க்கால் பார்த்ததுண்டா அந்த கந்தக கடற்கரை வெளியை பற்றி அறிந்ததுண்டா .?       Please follow and like us:

பகிர

பிரதி


மே 16 திகதி இந்த நாள் இதயத்தின் இறுதி நாள்.!

மே 16 திகதி இந்த நாள் இதயத்தின் இறுதி நாளமும் அறுக்கப்பட்டதாய் அந்தரித்துப்போனோம் .முள்ளிவாய்க்கால் அ.த.க பாடசாலையில் இறுதியாக இயங்கிக் கொண்டிருந்த மருத்துவமனையை விட்டு உடன் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது .. காயமடைந்தவர்கள் ஒரு புறம் இறந்தவர்களின் உடல்கள் என வேறுபாடற்று மருத்துவமனை இயங்கிய பாடசாலைவளாகம் முழுவதும் நிறைந்து கிடந்தது.நிமிடத்திற்கு நிமிடம் இறப்புகள் கண்முன்னே நடந்து கொண்டிருந்தன.எம் மால் எதுவும் செய்யமுடியவில்லை ஒரளவு எழுந்து நடக்ககூடியவர்களை இவ்விடத்தை விட்டுப்போகுமாறு தமிழீழகாவல்துறையினர் சொல்லிக்கொண்டிருந்தனர் காயமடைந்த உறவுகளை தூக்கிக்கொண்டு […]

பகிர

பிரதி


தெரிந்தே மருத்துவமனை மீது விமானத்தாக்குதல் மேற்கொண்ட சிங்களம்.!

இறுதிப்போரில் பாதுகாப்பான இடமாக மக்கள் கருதிய மருத்துவமனைகளை இலக்கு வைத்து இடம்பெயரும் ஒவ்வொரு இடங்களையும் தாக்கத் தொடங்கியது இலங்கை இராணுவம். கிளிநொச்சியில் இருந்த மக்கள் அனைவரும் இடம்பெயரும்வரை கிளிநொச்சி மருத்துவமனை இயங்கிக் கொண்டிருந்தது. கிளிநொச்சி மருத்துவமனை என்று தெரிந்தும் விமானத்தாக்குதலை மிகத்துணிச்சலாக மேற்கொண்டது இலங்கை இராணுவம். தருமபுரம் மருத்துவமனை, புதுக்குடியிருப்பு மருத்துவமனை இரண்டும் இடம்பெயர்ந்தபின் மருத்துவமனை என்ற வளம் அங்கு இருக்கவில்லை. காயமடைந்து கொண்டுவரப்படும் மக்களின் எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. பாடசாலை கட்டடங்களே மருத்துவமனைகளாகப் […]

பகிர

பிரதி


குமுதினிப் படுகொலை.!

குமுதினிப் படகில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் நினைவுநாள் இன்றாகும். 1985ம் ஆண்டு வைகாசி மாதம் 15ம் தேதி குறிகட்டுவான் துறைமுகத்திற்கும் நெடுந்திவிற்க்கும் இடையில் குமுதினிப் படகில் பயணம் செய்த 36 சொந்தங்களை சிறிலங்கா கடற்படை ஈவிரக்கமின்றி காட்டுமிராண்டித் தனமாக வெட்டிப் படுகொலை செய்த அந்த கொடூரத்தின் அந்த ரணங்கள் தமிழீழக் கடலில் ஆறாத 34ம் ஆண்டு ஈரநினைவு நாள் இன்றாகும். நீதி சாகாது என்று நம்பும் எங்களுக்கு  நீதி மறுக்கப்பட்ட அல்லது வழங்கப்படாத ஒரு துயரத்தின் கதை.! […]

பகிர

பிரதி


தமிழினப்படுகொலை மகிந்தரின் கொலைக்களம்.!

தான் யார் என்பதை மகிந்த ராஜபக்ச வெளிப்படுத்தி வருகின்றார். இதுவரையான சிங்கள ஆட்சியாளர்களில் மிகவும் கொடூரமான கொலை வெறித்தாகம் கொண்ட ஆட்சித்தலை வராக மகிந்த ராஜபக்ச காணப்படுகின்றார். பேச்சில் மென்மையும் – செயலில் கொலைவெறியும் கொண்ட பிரேமதாசாவை விடவும் குரூரமான சனாதிபதியாக மகிந்த ராஜபக்ச அடையாளம் காணப்பட்டுள்ளார்.தலை வேறு – உடல் வேறாகத் தமிழர்களைப் படுகொலை செய்வித்து ஆற்றிலும் – வயல்களிலும் – வீதியோரங்களிலும் வீசி எறிவது பிரேமதாசாவின் காலத்து வழமையாக இருந்தது. பிரேமதாசாவின் பிரதான கொலைக் […]

பகிர

பிரதி


தமிழீழம்