இலைகள் உதிரும் கிளைகள் ஒடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

Category: அலைகடல் நாயகர்கள்

கடலில் அவனொரு காவியம் கடற்புலிகள் துணைத் தளபதி லெப்டினன்ட் கேணல் நிறோஜன்.!

கால்கள் மணலிற்குள்ளால் நடந்து கொண்டிருந்தாலும் மனம் இப்போதும் கடலிற்குள்ளேயே நின்றுகொண்டிருந்தது. கடலின் கரையைத் தொட்டுவிட ஒவ்வொரு அலையும் துடித்துக்கொண்டிருந்தது. இந்த அலையைப் போலவே இலட்சியத் துடிப்புடன் போராடி மடிந்த நிரோஜனின் நினைவுகள் தான் ஒன்றன் பின் ஒன்றாக எங்கள் நெஞ்சில் அழியாத தடங்களாகப் பதிந்திருந்திருக்கிறன. கடல்நீரும் துள்ளியெழும் அலைகளும் ஒரு பொழுதில் வாய் திரந்து பேசுமானால் இவனைப்பற்றி, இவன் இறுதியாய் எப்படி மடிந்தான் என்பது பற்றி தெளிவாக சொல்லியிருக்கும். ஆனால், அவை இப்போது மெளனமாய் இருப்பதால் அந்தப் […]

பகிர

பிரதி


அலையில் கரையும் ஆத்மாவின் தவிப்பு…! கடற்புலிகளின் துணைத்தளபதி லெப்.கேணல் இரும்பொறை மாஸ்ரர்.!

அலையில் கரையும் ஆத்மாவின் தவிப்பு…! கடற்புலிகளின் துணைத்தளபதி லெப்.கேணல் இரும்பொறை மாஸ்ரர்…. ……..”களத்திலே நிதி வீழ்ந்துவிட்டானாம்.” என்ற செய்தி வீட்டு வாயில்வரை வந்து சேர்ந்தது. அவனின் வித்துடல்கூடக் கிடைக்கவில்லை. எல்லோரும் அழுது புலம்பினார்கள். அவனின் இழப்பை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவனுக்காக எட்டுச்செளவும் முடிந்தது. இப்போது 31ம் நாள் நினைவுக்கான ஆயத்தங்கள் நடைபெர்ருக்கொண்டிருந்தன. “நிதி வீரச்சாவில்லையாம், நிதி வீரச்சாவிளையாம்.” காற்றோடு கலந்து வந்தது அந்த இனிய செய்தி. சாவீடு அங்கே சந்தொசத்த்தில் துள்ளிக்கூத்தாடியது. இரும்பொறையாய் கடற்புலிகளுக்காய் வரலாறு […]

பகிர

பிரதி


லெப். கேணல் குமுதன்.!

இயற்கை அழகூட்டும் வனப்புக்களை தன்னகத்தே கொண்டது யாழ். மாவட்டம். இங்கே வானை முட்டும் தென்னை மரங்கள் அதிகம் நிறைந்து வளம் தரும் வடமராட்சிக் கிழக்கில் உடுத்துறை என்னும் சிற்றூரில் தவராசதுரை – அன்னலட்சுமி இணையருக்கு மகனாகப்பிறந்தான் குமுதன். இவனுக்குப் பெற்றோர் இட்டபெயர் நாகேஸ்வரன். நாகேஸ்வரன்தான் அவர்களிற்கு மூத்த மகன். இவனுக்குப் பின் முன்று தம்பிமாரும், நான்கு தங்கைகளுமாக அன்புடன் வளர்ந்து வந்தான். உடன்பிறப்புக்களுடன் மிகவும் அன்பாகப் பழகுவான். நாகேஸ்வரன் தன் தொடக்க கல்வியை யாழ். ஆழியவளை சி.சி.த.க.கனிஷ்ட […]

பகிர

பிரதி


கடற் சமர்களின் கதாநாயகனாக லெப்டினன்ட் கேணல் தியாகன்.!

தமிழீழ போரியல் வரலாற்றில் அதிகளவான கடற் சமர்களின் கதாநாயகனாக விளங்கிய தியாகன். கடற்புலி லெப்டினன்ட் கேணல் தியாகன் சந்திரசேகரம்பிள்ளை தசகுமாரன். வீரச்சாவு: 13.08.2007 சம்பவம்: திருகோணமலை புல்மோட்டைக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படையினருடனான நேரடிச் சமரின் போது. 1991ம் ஆண்டின் பிற்பகுதியில் தொடர்ச்சியாக மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இராணுவ ஆக்கிரமிப்புக்கள் இராணுவத் தாக்குதல்கள் காரணமாக விடுதலைப் புலிகளமைப்பில் தன்னை இணைத்துக் கொண்ட தியாகன். கடற்புலிகளின் இரண்டாவது பயிற்சி முகாமான மாவீரரான மேஜர் யப்பான் நினைவாக அவரது பெயரில் உருவான […]

பகிர

பிரதி


“எதிரிக்கு தரையிலும் கடலிலும் தக்க பதிலடி கொடுத்தவர் லெப். கேணல் கதிர்வாணன்”

லெப். கேணல் கதிர்வாணன், கடலில் எதிரிகளை தாக்கி அழித்து கடற்கலங்களை மூழ்கடித்து எதிரிக்கு பாரிய அழிவினை ஏற்படுத்தி ஆயுத தளபாடங்களை எதிரியிடம் இருந்து கைப்பற்றியவன். இவன் போரியலின் சகல வல்லமைகளையும் கற்றுத்தேர்ந்து போரினை அறிவியல் ஊடாக நகர்த்திய அதேவேளை படைத்துறைக்குள்ளும் செயற்படுத்தியவன்.கடலில் எதிரிக்கு இழப்பை கொடுத்த இவன் தரையிலும் எதிரிக்கு தக்க பதிலடி கொடுத்தவன் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து வன்னிக்குப் போராளிகளை நகர்த்தியதிலும் வன்னியில் இருந்து மட்டக்களப்பிற்கு போராளிகளை நகர்த்துவதிலும் சிறிலங்கா கடற்படையினருக்கு தக்கபாடம் கொடுத்து போராளிகளை […]

பகிர

பிரதி


கடற்புலிகளின் துணைத் தளபதி லெப் கேணல் சாள்ஸ்.!

சிங்களக் கடற்படையின் படகுகளைக் கண்டால் எங்களது சாதாரண படகுகள் கடலில் நிற்காது, நிற்கமுடியாது. சண்டைகளுகென்றே தயாரிக்கப்பட்ட நேவிப்படகுகளின் வேகத்திற்கு, அவற்றில் பொருத்தப்படிருக்கின்ற சக்தி வாய்ந்த ஆயுதங்களின் தாக்குதலுக்கும் ஈடுகொடுக்க எங்களது சாதாரண படகுகளால் முடியாது என்பதால் துரத்தில் கண்டவுடனேயே ஓடி மறைந்துவிட வேண்டும், வேறு வழியில்லை. எங்களது படகுகளை அழிப்பது அவர்களின் இலக்கு என்பதுடன், கலைப்பது அவர்களுக்கு ஒரு பொழுதுபோக்காகவும் இருந்தது. ஆனால் இன்று அந்நிலை நேர்மாறாக மெல்ல மெல்ல மாறி வந்துவிட்டது. தரையைப்போல கடலிலும் சிங்களப்படையை […]

பகிர

பிரதி


கடற்புலிகளில் ஓய்வில்லாது உழைத்த வீரத்தளபதி லெப் கேணல் மங்களேஸ்.!

1990ன் ஆரம்பகால பகுதிகளில் விடுதலைப்புலிகளுடன் இனைந்து கொண்டு பலாலி காவலரனில் கடமையாற்றிய இவர் பொன்னம்மான் தாக்குதல் படையனியில் கடமையாற்றினார். விடுதலைப்புலிகளால் முதன் முதலில் பெயர் சூட்டப்பட்ட ஆகாய கடல் வெளி நடவடிக்கையில் ஆரம்பம் முதல் இறுதி வரை திறம்பட செயற்பட்ட மங்களேஸ் 1991ம் ஆண்டு இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட மின்னல் இராணுவச்சமரில் திறன்பட செயற்பட்டார். பின்னர் யாழ்மாவட்ட படையனியில் இனைந்துகொண்டு பலாலி வசாவிளான் 150 காவலரன் தகர்ப்பு தாக்குதலில் ஈடுபட்டு தனது கன்னத்தில் வீரத்தழும்படைந்தார். 1992 இறுதி பகுதியில் கடற்புலிகளுடன் […]

பகிர

பிரதி


நிலவாய் பிரகாசித்த நிலவன்…..!

நிலவாய் பிரகாசித்த நிலவன்…..! ஆறடி உயரம், ஒருமுறை பார்த்தால் மறுமுறை பேசத் தூண்டும் எடுப்பான தோற்றம். கள்ளம் கபடமற்ற அவன் சிரிப்பு. அரசியல் தெளிவு மிக்க அவன் பேச்சு, படையியல் காய் நகர்த்தலில் அவனுக்கிருந்த திறன், மக்களுக்குள் இறங்கி அவர்களின் வாழ்வியலை உயர்த்த அவன் உழைத்த உழைப்பு என எல்லாவற்றிலும் என்றும் மறக்க முடியாத ஒருவன் தான் நிலவன்.   இம்ரான் பாண்டியன் படையணியில் இருந்து கடற்புலிகள் அணிக்கு வந்திருந்த நிலவனது கையில் இருந்தது RCL ஆயுதம். […]

பகிர

பிரதி


கேணல் பகலவன் .!

1989ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து எமது தாயகத்தின் விடுதலைக்காக ஆரம்பத்தில் யாழ்மாவட்ட தாக்குதல் படையனியிலும் பின்பு சாள்ஸ் அன்ரனி படையனியிலும் பல தாக்குதல்களில் பங்குபற்றிய இவர் 1993ம் ஆண்டு கடற்புலிகள் படையணியில் இணைந்து முதன்மை கனரக ஆயுத சூட்டாளராகவும் எமது சண்டைப்படகுகளின் பிரதான ஆயுதங்களின் சிறந்த சூட்டாளராக பல கடற்சமர்களில் பங்குபற்றி பின்னர். படகுக்கட்டளை அதிகாரியாகவும்,பின் தொகுதிக்கட்டளை அதிகாரியாகவும் ,பனியாற்றியபோது இவரின் திறமையைக்கண்டு ஆழ்கடல் விநியோக கட்டளை அதிகாரியாகவும் செயற்பட்டார். கடலில் நடைபெற்ற அதிகளவான […]

பகிர

பிரதி


அலையில் கரையும் ஆத்மாவின் தவிப்பு…!

”களத்திலே நிதி வீழ்ந்துவிட்டானாம்.” என்ற செய்தி வீட்டு வாயில்வரை வந்து சேர்ந்தது. அவனின் வித்துடல்கூடக் கிடைக்கவில்லை. எல்லோரும் அழுது புலம்பினார்கள். அவனின் இழப்பை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவனுக்காக எட்டுச்செளவும் முடிந்தது. இப்போது 31ம் நாள் நினைவுக்கான ஆயத்தங்கள் நடைபெர்ருக்கொண்டிருந்தன. “நிதி வீரச்சாவில்லையாம், நிதி வீரச்சாவிளையாம்.” காற்றோடு கலந்து வந்தது அந்த இனிய செய்தி. சாவீடு அங்கே சந்தொசத்த்தில் துள்ளிக்கூத்தாடியது. இரும்பொறையாய் கடற்புலிகளுக்காய் வரலாறு படைத்தவன் 1991 இல் ஆனையிறவு ஆகாய கடல் வெளிச்சமரில் மடிந்துவிட்டதாக வந்த […]

பகிர

பிரதி


தமிழீழம்