இலைகள் உதிரும் கிளைகள் ஒடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

Category: அன்னைத்தாயகத்தின் வேர்கள்

செல்வராசா மாஸ்ரர்/அன்பு…!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆரம்ப கால சிறந்த போர்ப்பயிற்சி ஆசாண் மேஜர் செல்வராசா மாஸ்ரர்/அன்பு…! “புலிகள் அமைப்பில் சிறந்த ஆளுமையுள்ள பல போராளிகளை உருவாக்கிய போர்ப்பயிற்சி ஆசான்” இப்பிடித்தான் 1990களில் சண்டைகள் இல்லாத நேரங்களில் அண்ணை தளபதி மாரை தான் நிக்கிற இடத்துக்கு கூப்பிட்டு ஏதாவது போட்டி நடக்கும். பெரும்பாலும் அது துப்பாக்கி சூட்டுப்போட்டியா தான் இருக்கும். ஒருநாள் ரெண்டு கையிலை, ரெண்டு துவக்கு தூக்கிர போட்டி ஒண்டை வைச்சார். உது ஈஸி தானே? எண்டு […]

பகிர

பிரதி


இவன் சிந்திய குருதியின் பெயர் சொல்லி…!

சாள்ஸ் அன்ரனி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர். தலைசிறந்த கெரில்லா வீரன். திருமலையில் பிறந்த இந்தத் தியாகச்செம்மல் சிங்கள் இனவெறி ஆட்சியாளர்களின் கொடுமைகளையும் ஒடுக்குமுறைகளையும் தன் சிறுவயதிலிருந்தே கண்டுகொண்டவன், அதற்கெதிராய்க் கிளர்ந்தான். சிங்களத்தின் திட்டமிட்ட குடியேற்றங்களாலும் கடற்படை, விமானப்படை, இராணுவம், பொலிஸ், காடையர் குழு எனப் பல்வேறு பெயர்களிற் சிங்களப் பேரினவாதிகளால் திருமலை மண் சூறையாடப்பட்டு கபளீகரம் செய்யப்பட்டதும் அல்லாமல் அங்கு வாழ்ந்த மக்கள் தமது பூர்வீக நிலங்களிலே அகதிகளாக்கப்பட்டதும் கொல்லப்பட்டதும் வணக்க […]

பகிர

பிரதி


முதல் தமிழீழ தற்கொடையாளர் தியாகி பொன் சிவகுமாரன்.!

எமது தேசத்தின் நாளைய தூண்களான மாணவர்கள் நாளை எம் நாட்டைக் கட்டியெழுப்பும் இளைய சிற்பிகள். எமது தேச விடியலிற்காய் தம் உயிரை அர்ப்பணம் செய்தவர்களில் மாணவர்களின் பங்கு அளப்பரியது. தமிழீழ விடுதலைப் போராட்டம் வளர்ச்சி பெறுவதற்கு ஊன்றுகோலாக இருந்து. இப்போராட்டம் பெருவிருட்சமாக வளர்வதற்கு காரணமானவர்கள். உலகத்தின் புருவத்தை உயர்த்தி தமிழீழவிடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக உலகெங்கும் குரல் கொடுக்கக் கூடிய அளவிற்கு ஆணிவேராக இருந்தவர்கள். இற்றைக்கு மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் தாயகத்தை மீட்டெடுக்கும் ஆயுதப் போராட்டத்திற்கு வித்திட்டவர்கள் அன்று […]

பகிர

பிரதி


மேஜர் கேடில்ஸ்.!

பனை, தெங்கு தோப்பாய் அணிவகுத்திருக்க கனிமரங்கள் நிரை கட்டி நிற்கும் பிரதேசம் யாழ்.குடாநாட்டின் தென்மராட்சிப் பிரதேசம். இப்பிரதேசத்தில் ஆனையிறவும், நாவற்குழியும் என கடல் நீரேரியும் சதுப்பு நிலங்களும் நிறைந்து காணப்படுகின்றன. இப்பிரதேசத்தின் முதலாவது பொறுப்பாளனாக மேஜர் கேடில்ஸ் விளங்கினார். பதினெட்டு வயதிலேயே இப்பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. கண்டாவளையில் மகாலிங்கம் இணையரின் மகனான கேடில்சிற்கு பெற்றோர் இட்ட பெயர் திலீபன். இயல்பாய் சுறுசுறுப்பும், துருதுருவென இருந்த கேடில்ஸ் புலமைப் பரிசில் தேர்வில் சித்தியடைந்து யாழ்.இந்துக் கல்லூரியில் கல்வி பயின்றார். […]

பகிர

பிரதி


விடுதலைப் போராட்ட வரலாற்றில் தளபதி கிட்டு ஓர் அத்தியாயம்.!

‘கிட்டு ஒரு தனிமனித சரித்திரம். நீண்ட, ஓய்வில்லாத புயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றில்ஒரு காலத்தின் பதிவு’ இது தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் தளபதி கிட்டுவைப் பற்றி கூறியதாகும். உலகின் சரித்திரம் காலத்திற்கு காலம் உருவாகும் சாதனையாளர்களின் சரித்திரமாகவே அமைகின்றது. அவ்வாறே ஒரு நாட்டின் வரலாறாக இருந்தாலென்ன, ஓர் இனத்தின் வரலாறாக இருந்தாலென்ன, ஓர் போராட்டத்தின் வரலாறாக இருந்தாலென்ன, அதில் சாதனையாளர்கள் சரித்திரத்தில் இடம்பெருபவர்களாக இருக்கின்றார்கள். இந்தவகையில், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் […]

பகிர

பிரதி


கிட்டு ஒரு தனிமனித சரித்திரம்.!

வங்கக் கடலின் நடுவே அந்த தியாக வேள்வித் தீ எரிந்து அணைந்து பல ஆண்டுகள் ஓடி மறைந்துவிட்டன. ஆயினும் தமிழ் மக்களின் மனங்கள் அதை நினைத்து நினைத்து இன்னும் எரிந்துகொண்டேயிருக்கின்றன. கேணல் கிட்டுவும், அவருடன் வந்த ஒன்பது தோழர்களும் தீயோடு தீயாகி, வங்கக் கடலில் சங்கமித்த அந்தச் சம்பவம் சரித்திரம் மறக்காத ஒரு சாவு மட்டுமல்ல, அது எங்கள் நெஞ்சங்களை நீங்க மறுக்கும் நெடும் அலையாகி, நினைவெங்கும் நிலைபெற்று விட்டதொன்று. கேணல் கிட்டு தேசியத் தலைவரால் அதிகம் […]

பகிர

பிரதி


வேருக்கு நீராகி.!

எமது தேசவிடுதலைப் போராட்டமானது மக்களின் பக்கபலத்திலும், எண்ணற்ற தியாகிகளின் குருதியிலும் உரமேறி ஓங்கி வளர்ந்துநிற்கின்றது.பல இடையூறுகள், துன்பங்கள், துயரங்களுக்கு மத்தியிலும் எம்மவர்களுக்கு உண்ண உணவு கொடுத்து, எதிரிப்பைடகளின் கோரப்பிடிகளுக்குள் சிக்காமல் தம் சிறகுகளால் மூடி, அவர்களின் நடமாட்டங்களையும், நகர்வுகளையும் அவதானித்து தகவல்களும்,   ஆயுதங்களும், உணவுப் பொதிகளும் சுமந்து, இந்த மண்ணில் வீரப்புதல்வர்களை, காவல் தெய்வங்களை வளர்த்தவர்கள் எம் மக்கள்.   உணவு கொடுத்து உதவிகள் புரிவதோடு மட்டும் நின்றுவிடாது, உயிர் கொடுக்கவும் துணிந்து நின்று நாட்டுப்பற்றாளர்களாகவும், […]

பகிர

பிரதி


கால் நூற்றாண்டு கடந்தும் லெப்.கேணல் விக்ரரின் நினைவுகள்……!

யாழ். குடாநாட்டுக்கு அது புதிய காட்சியாக இருந்தது. ஒவ்வொரு ஊர்களின் ஊடாகவும், கிராமங்களின் வழியாகவும், நகரங்களின் ஊடாகவும் அந்த வீரனின் இறுதி ஊர்வலம் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது. வீதிகளின் இருமருங்கிலும் மக்கள் வரிசையாக நின்று தமது தோட்டங்களிலும்,முற்றங்களிலும் பூத்திருந்த மலர்களை கொண்டுவந்து அவனின் உடல்தாங்கிய அந்த ஊர்திக்கு முன்பாக தூவி கண்ணீர் மல்க நின்றனர். அதற்குமுன்னர் ஒருபோதும் இப்படியான இறுதி ஊர்வல நிகழ்வு உணர்வுடனும், லட்சோபலட்சம் மக்களின் வழியனுப்பலுடனும் நடந்ததே இல்லை. யாழ். மண்ணில் நிலைகொண்டிருந்த […]

பகிர

பிரதி


செல்லக்கிளி அம்மான்.!

இயக்கத்தில் முதலில் அம்மான் என்று அழைக்கப்பட்டவர் செல்லக்கிளி அம்மான் ஆகும்.அது ஒரு காரணப்பெயரோ என்பதும், யார் அந்த பெயர் சொல்லி அவரை அழைத்தது என்றும் தெரியாது ஆனாலும் அந்த பெயரே அவரது பெயராக ஆகிப்போனது. இப்போது அவரை பற்றி எழுதும் போது படிப்பவர்கள் இலகுவாக புரிந்து கொள்ள வேணுமென்பதற்காக செல்லக்கிளி என்ற பெயரையும் சேர்த்து செல்லக்கிளிஅம்மான் என்று எழுதினாலும் அவர் வீரச்சாவு அடையும் வரை அம்மான்’ என்றழைக்கப்பட்டவர் அவர் ஒருத்தரே. அம்மான் வீரச்சாவடைந்த பின்னர் வந்த பெரு […]

பகிர

பிரதி


சூரியனும் சந்திரனுமாய் தலைவரைத் தாங்கிய சிகரங்கள்.!

விடுதலைப் புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவரான பாண்டியன் யாழ் மாவட்டத் தளபதியாக பணியாற்றியவர். இம்ரான் – பாண்டியன் இருவரும் உற்ற நண்பர்கள். அவர்கள் யாழ்ப்பாணத்தில் கொக்குவில் பிரம்படி என்ற இடத்தில் பிறந்து பக்கத்துப் பக்கத்து வீட்டில் வாழ்ந்த நண்பர்களாக இருந்து நண்பர்களாகவே போராட்டத்தில் இணைந்து நண்பர்களாகவே களமுனைகளில் களமாடி நண்பர்களாகவே தங்களுடைய இலட்சியத்திற்காக வீரச்சாவைத் தழுவிக் கொண்டவர்கள். எங்களுடைய புகழ் பூத்த மூத்த தளபதி கேணல் கிட்டு அண்ணாவின் தலைமையில் யாழ் மாவட்டம் எங்களுடைய முழுமையான கட்டுப்பாட்டுக்குள் […]

பகிர

பிரதி


தமிழீழம்