இலைகள் உதிரும் கிளைகள் ஒடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

Category: ஒரு போராளியின் குருதிச் சுவடுகள்

ஜீவனுள்ள நினைவுகள் லெப். கேணல் ஜீவன்.!

கையெட்டும் தூரமே கண்ணுக்குத் துலங்காத மைசொட்டும் இரவு. உடலெங்கும் உரிமையோடு கைபோட்டிருக்கும் முட்செடிகள். கொழும்பு ரோட் ( மட்டு – கொழும்பு நெடுஞ்சாலை ) அண்மித்து விட்டதால் காலணிகள் கைக்கு ஏறுகின்றன. ரைபிள் சிலங்குகள் சலசலக்காது இறுக்கிப்பிடிக்கப்படுகின்றன. ஆபத்தை தவிர்க்கும் அளவிற்கு அவசியமான இடைவெளி விட்டு முன்னே செல்பவரின் சிறு அரவத்தைக் கொண்டு திசையறிந்து பின் செல்வதே ஒரு கலை. தென்ஈழக் காடுகளிலே இந்தக் கலைதான் அவசியமான அரிச்சுவடி. கத்திவெட்டுப் போல் ஒரு நகர்வு… இப்படி புத்தியையும் […]

பகிர

பிரதி


லெப். கேணல் தர்சன் களத்திலெங்கும் ஒலித்த குரல்.!

இடைவிடாத எதிரியின் எறிகணை வீச்சுக்கும், காதைப் பிளக்கும் போர்விமானங்களின் குண்டு வீச்சுக்கும் வடமுனைப் போர் அரங்கு முகம் கொடுத்தவண்ணமிருந்தது. அது நீண்ட பல நாட்களாக சிறிலங்கா படையின் பிடியிலிருந்த பளைப் பிரதேசம். ஓயாத அலைகள் 03 என்ற வரலாற்று சிறப்புமிக்க போர் நடவடிக்கை மூலம் ஆனையிறவுத்தளத்தை உடைத்தெறிந்த போது அதனை நாம் வெற்றிகரமாக மீட்டுக்கொண்டோம். ஓயாத அலைகள் தனது தேவை கருதி ஓய்வுக்குத் திரும்பிய காலம், சிறிலங்காப் படைகள் பளை நகரை கைப்பற்ற துளியும் அனுமதிக்கக்கூடாது என்ற […]

பகிர

பிரதி


வெல்வோம் அல்லது வெற்றிக்காக வீழ்வோம்….!

அடர்ந்த காடு அதற்குள்ளால் நடைபயணம். கடக்க வேண்டிய தூரம் நினைத்துப் பார்க்க முடியாதது. ஆனால் கடந்தாக வேண்டும். நினைத்தவுடன் தண்ணீர் குடித்தவன் பசித்தவுடன் வயிறு நிரப்பிக் கொண்டவன். இந்தப் பயணம் முடியுமட்டும் இவை கிடைக்குமா இல்லையா என்றும் தெரியாமல் எப்படித்தான் பயணிப்பது? அவனது கால்கள் இந்தப்பயணத்திற்கு ஒத்துழைக்குமா என்பதற்கு எந்த ஆதாரங்களுமில்லை. அவன் எப்படித்தான் அடியெடுத்து வைப்பது? இப்போதுதானே அவன் போராளியாகியிருந்தான். பயிற்சிகளை இனித்தான் பெறவேண்டும். அந்தப் பயிற்சிகளைப் பெறவேண்டுமாயின் இந்தப் பயணம் முடிந்தாக வேண்டும். மணிவண்ணன் […]

பகிர

பிரதி


“காலவிதை” கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன்.!

வீட்டிற்குமுன் வாகனம் வந்து நின்ற போது செங்கதிர்வாணன் தான் வருகிறான் என்று நினைத்துக் கொண்டாள் தண்ணீருற்று அம்மா. அவனின் அம்மா திருமலையில் என்பதால் இப்போது உறவுகள் எல்லாம் அந்த வீடுதான். அம்மா தலையை இழுத்து முடித்தபடி விளக்கையும் எடுத்துக்கொண்டு வாசலுக்கு ஓடிவந்தாள். அக்கம் பக்கத்து வீட்டுச்சிறுமிகள் எல்லாம் “குட்டான் மாமா வந்திட்டார்” என்ற மகிழ்ச்சியுடன் பாடப்புத்தகங்களை மூடிவிட்டு ஆரவாரித்து நின்றனர். அவர்களுக்கு ஒருபுறம் அச்சமும் இருந்தது. பாடப்புத்தகத்தில் கேள்வி கேட்பார். தேர்வு அறிக்கை பார்ப்பார். என்றாலும் , […]

பகிர

பிரதி


விடுதலை வீரியம் -லெப். கேணல் அக்பர்.!

வட போர்முனையின் கட்டளைப் பணியகம். தொலைத்தொடர்புக் கருவி அக்பரைத் தேடுகிறது. தொடர்பு இல்லை. காலையில்தான் முன்னணி நிலைகளைப் பார்த்துவிட்டு, அணித் தலைவர்களைத் தயார்படுத்துவதற்காக பின் தளத்திற்குப் போய் வருவதாகத் தளபதி தீபனிடம் கூறிச்சென்றவன். இன்னமும் வரவில்லை. மாலை 3.00 மணி அக்பரின் தொடர்பில்லை. மாலை 5.00 மணி தொடர்பில்லை. இரவு 8.00 மணி தொடர்பில்லை. தளபதியின் மனதில் ஐயம் தோன்றுகின்றது. நாளை விடிந்தால் எதிரி முன்னேறக்கூடிய நிலையில் அக்பர் ஒருபோதும் இத்தனை மணிநேரம் தொடர்பில்லாமல் நிற்கமாட்டான். நேரம் […]

பகிர

பிரதி


எமது விடுதலைப் போராட்டத்தில் மாபெரும் பணியாற்றிய லெப். கேணல் சாந்தகுமாரி.

எல்லோருடனும் சிரித்துக் கதைக்கின்ற சாந்தகுமாரி இன்று எங்களோடு இல்லை. ஆனால் எதிரியைச் சிதறடிக்கின்ற சாந்தகுமாரிகள் எங்களோடேயே களமுனையில் நிற்கிறார்கள். சாந்தகுமாரியின் பெயரில் தயாரிக்கப்பட்ட கண்ணி வெடிகள் எதிரிகளின் கால்களோடு கதைபேசிக் கொண்டிருக்கின்றன. புயலுக்கு முந்திய அமைதியோடு புலிகள் இருந்த காலப்பகுதியது. எதிரியானவன் எமது மண்ணை வல்வளைக்கும் நோக்குடன் ஜெயசிக்குறு, ரணகோச, வோட்டஜெற் என பெயரிட்டபடி படை நடவடிக்கைகளை மாறி மாறி மேற்கொண்டு எமது வளங்களை அழிவுக்குள்ளாக்கியதுடன், எம்மக்களையும் பெரிதும் துன்பப்படுத்திக் கொண்டிருந்தான். எவரும் எதிர்பாராத பெரு வெள்ளமாக […]

பகிர

பிரதி


தென்றலாய் வீசிய புயல்.!

கிளிநொச்சிக் கோட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் நாயகன் / நரேஸ் பூநகரிச் சமர்தான் புலிகள் இயக்கத்தின் பலத்தையும், அதன் போரிடும் சக்தியையும் எடுத்தியம்பியது. ஆனாலும், ”புலிகளுக்கே உரித்தான சண்டை” என்று, புலிகளின் போர்த்திறனைப் பறைசாற்றிய சண்டையென்று புலோப்பளைச் சமரைத்தான் சொல்ல வேண்டும். பட்டப் பகற்பொழுதில், கவசங்களற்ற வெட்ட வெளிப் பிரதேசத்தில், மணலோடு மணலாகி மறைந்திருந்த புலிகள், கவசங்களுடனும், கனரக ஆயுதங்களுடனும் நகர்ந்த எதிரிகளுக்கு முன்னால், ஆக்ரோசமாக எழுந்தபோது உலகையே வியப்பிலாழ்த்திய அந்தச் சண்டை வெடித்தது. டாங்கிகளும், […]

பகிர

பிரதி


“வன்னியின் முழுநிலவு” லெப். கேணல் சந்திரன்.!

  உன்னை நாங்கள் மறந்து விட்டோமா? இல்லை. அது எங்களால் முடியாது.உன்னை மட்டுமல்ல, உன்னைமாதிரி இந்த மண்ணை நேசித்து, இந்த்த மண்ணுக்கு உயிர் தந்த எவரையுமே எங்களால் மறக்க முடியாது. சந்திரன், உன்னை – உனது உணர்வுகளை, மறக்கமுடியாமல் நாங்கள் மட்டுமா தவிக்கிறோம்? இல்லை. புதரிகுடாவில் காற்சட்டை இல்லாமல் உன்னைக் கண்டதாகவும் சிறுசுகளும், பொன் நகரிலும் முள்ளியவளையிலும் உரலுக்குள் பாக்கிடித்தபடியே விழிகளால் உன்னைத் தேடும் கிழவிகளும், களைத்து விழுந்துவரும் உன்னைத் தடவி உற்சாகமாக வழியனுப்பும் நிழல்மரங்களும் உன்னைக் […]

பகிர

பிரதி


2ம் லெப்ரினட் பூபாலினி.!

2ம் லெப்ரினட் பூபாலினி, அவளிடம் எதிலும் ஒரு நேர்த்தி ஒழுங்குமுறை இருக்கும். எதனையும் முடிந்தவரை முழுமையாக, செம்மையாக, சலிப்பின்றிச் செய்யும் தன்மைகள் அவளிடம் அதிகம். அவளுக்காய் கொடுத்த பணி நிறைவு பெறும்வரை அவளைப் பசியோ, தூக்கமோ அண்டாது. அவளுக்கான பணியாய் பணியகப் பணி வழங்கப்பட்டிருந்த காலமதில், குறித்த பணியக நேரத்தில் முழுமையாக செயற்பட்டுக் கொள்வதோடு அந்நேரத்திற்கும், வேலைக்கும் அப்பாலும் சென்று கண்விழித்துக் கடமையில் ஈடுபட்டிருப்பாள். ஒழுங்குபடுத்தப்பட்ட வேலைநேரத்திற்கு அப்பால் என்றால், ஓய்வு நேரங்களையும் நித்திராதேவியிடம் சரணடையும் நேரங்களையும் […]

பகிர

பிரதி


லெப்.கேணல் மாருதியன் றஞ்சன்.!

அது தமிழீழத்தின் எல்லை மாவட்டம் மிக அழகான பச்சைப்பசேல் என்ற வயல் வெளிகளையும் அதன் எல்லையில் எம் வீரமறவர்களை வளர்க்கும் அடர்த்தியான பெரும் கானகத்தையும் பல புலிவீரர்களை ஈன்றெடுத்த அழகிய தமிழ் கிராமங்களையும் கொண்டது தான் அம்பாறை மாவட்டம். அந்தக் கானகம் எமக்கு பரீச்சயமானதாக இருந்தாலும் புதிதாகச் செல்பவர்களுக்குப் பயம் நிறைந்திருக்கும். அக்காட்டினுள் இருக்கும் புலிகளின் பாசறையில் பகல் வேளைகளில் கூட சூரியனைக் காணமுடியாது. எத்திசையில் இருக்கின்றோம் என்பது தெரியாது. அத்தோடு பல மிருகங்களின் வெவ்வேறுபட்ட மிகப் […]

பகிர

பிரதி


தமிழீழம்