இலைகள் உதிரும் கிளைகள் ஒடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

Category: சமர்க்கள நாயகர்கள்

விடுதலைப் பாதையில் அழியாத தடம் -லெப். கேணல் ராகவன்.!

விடுதலைப் பாதையில் அழியாத தடம்.! 1999 நவம்பர் இரண்டாம் நாள். உலகின் செய்திக் கதவுகளெல்லாம் பொங்கிப் பிரவாகித்த “ஓயாத அலை” களின் வீச்சுக்கு வழிவிட்டன. உலக இராணுவச் சரித்திரத்தில் நிலைபெற்ற ஓயாத அலைகள்  மூன்றின் முதலாம் நாள் தமிழீழத்தின் சிறந்த போர்த் தளபதிகளுள் ஒருவரான லெப். கேணல் ராகவனையும் தன்னுடன் அனைத்துக் கொண்டது. வெற்றிமுரசு கொட்டிச் சிங்களம் செய்த பெரும் போர் நடவடிக்கைகளின் போதெல்லாம் எதிர்த்து நின்று போரிட்ட புலிகளின் போர்த் தளபதி அவன். உலக வரலாற்று […]

பகிர

பிரதி


லெப். கேணல் சேகர் .!

சாவுக்குள் உழைத்த வீரம்.! 1998 சுதந்திர நாளுக்குக் கிளிநொச்சியிலிருந்து கண்டி வீதியால் தலதா மாளிகைக்குப் பேருந்து வருமெனச் சிங்களத்து ஜெனரல் விடுத்த சவாலுக்குச் சாட்டையடியாகக் கிளிநொச்சித் தளம்மீதான பாய்ச்சலுக்குத் தலைவர் கட்டளையிட்டார். அவரின் கட்டளைக்கு மையத்தலத்தினுள் முன்னேறி எமது போராளிகளை வீழ்த்தி எமது முன்னேற்றத்தைத் தடுத்துக்கொண்டிருந்தான் எதிரி. எதிரிக்காக எடுத்த சாதியின் அடி எங்கள் முதுகளிலேயே விழுந்துவிடுமா? எதிரி கொடியேற்றும் நாளில் எங்கள் தேசியக் கோடி அரைக்கம்பத்திற் பறக்குமா? அர்த்தமற்ற உயிரிழப்புக்களுடன் நாம் தளம் திரும்பநேருமா? தலைவன் […]

பகிர

பிரதி


சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரின்

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரின் போர்முனைக்குச் சென்றவர்கள் வென்றதுண்டு வந்ததில்லை என்பார்கள். இதை ஜஸ்ரினும் படித்திருந்ததினாலோ என்னவோ இறுதியாக மணலாற்றுச் சண்டைக்குச் செல்வதற்கு முன்னர் தனது தாயை அவன் சந்தித்தபோது “அம்மா, நான் சண்டைக்குப் போறேன். ஆனால் நான் உயிரோடை திரும்பி வர மாட்டன்” என்று கூறிவிட்டுச் சென்றான். கண் தெரியாத அந்தத் தாயிடம் அதனைத் தெரிவித்துவிடவேண்டும் என்று அவனது உள்ளுணர்வு அவனைத் தூண்டியுள்ளது. தாக்கு மகனாகச் செய்ய வேண்டிய கடமையைவிட […]

பகிர

பிரதி


உறுதியின் உறைவிடம்….!

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி, அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிப் பொறுப்பாளனாக முத்திரை பதித்தவன். அன்றையநாள் தமிழீழத்திற்குத் துயரந்தரும் நாளாய் விடிந்தது. அன்று காலைதான் ராஜன் எம்மைவிட்டுப் பிரிந்தான். முதல்நாள் மாலை, பண்டத்தரிப்பில் நின்ற போராளிகளைப் பார்க்க வந்த ராஜனிடம், எதிரியின் படையணி ஒன்றின் மீதான சிறியதாக்குதல் திட்டம் ஒன்றைக் கூறினர் கோபியும் தோழர்களும். எதிரியின் புதிய நில அக்கிரமிப்பை கண்டு குமுறிக்கொண்டிருந்த ராஜன் உடனடியாக ஒப்புதல் தந்துவிட, சிறிதாய்த் திட்டமிடப்பட்டிருந்த அந்தத் தாக்குதலுக்கான ஒழுங்குகள் […]

பகிர

பிரதி


இது வீரியமுள்ள வித்து லெப். கேணல் கில்மன்.!

  தாக்குதல்கள் செய்வதற்காக அவர்களைப் பாதுகாக்க வேண்டிய தாகவும் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்குத் தாக்குதல் செய்ய வேண்டியதாகவும் இருந்த களச்சூழலை அப்போது அவர்கள் எதிர் கொண்டனர். ஒவ்வொரு கணமும் அவர்கள் எதிர்கொள்ளவேண்டியிருந்த சிரமங்கள் ஏராளம். அவர்கள் சந்தித்த எந்தத் துயர்மலையாலும் துளிகூட அவர்களை நிலைகுலையச் செய்யமுடியவில்லை. ஒவ்வொரு வீரனின் உள்ளமும் உறுதியால் இழைக்கப்பட்டு தேசப்பற்றினால் உரம் பெற்றிருந்தது. எவ்வளவு கடினத்திற்குள்ளும் விடுதலைக்காக உழைக்கும் அவர்களின் உழைப்பு வீச்சுள்ளதாய் இருந்தது. அத்தனை வீரத்தையும் விடுதலைப்பற்றையும் தலைமுறைப் பற்றையும் ஊட்டியிருந்தான் […]

பகிர

பிரதி


நீரிற் கரைந்த நெருப்பு லெப்.கேணல் ராஜசிங்கம்/ ராஜன்.!.!

கண்டி வீதியை ஊடறுத்திருந்த எமது பாதுக்காப்பு வியூகத்தை உடைத்து, எதிரி உட்புகுந்துவிட்டான். எமது போர்ப்பலத்தைச் சிதறடித்தவாறு எல்லா முனைகளாலும் எதிரி தாக்கினான். எமக்கு எவ்வகையிலும் சாதகமற்ற ‘மரணக்களமாய்’ மாறியிருந்தது அன்றைய களம். அன்று சித்திரை 10.2000 விடுதலைப் போர்களத்திற் புலிகள் இயக்கம் தீக்குளித்த நாட்களுள் அன்றைய நாளும் ஒன்று. ஆனையிறவை முற்றுகையிட்டிருந்த புலிகளின் இத்தாவிற் போர்க்களம் அது. அமைதியாகவே விடிந்திருந்த அந்தப் போர்க்களத்தைச் சிறிது நேரத்திலேயே பெரும் எரிமலைபோல் வெடிக்கச் செய்தான் எதிரி. புலிகளை மட்டுமல்ல, தமிழனின் […]

பகிர

பிரதி


பிரிகேடியர் பால்ராஜ்: வீரத்தின் குறியீடு.!

சமராக்கப் பிரிவுப் பொறுப்பாளர் யோ. செ. யோகி -அவர்கள்  பிரிகேடியர் பால்ராஜ்  அவர்களுடைய  கள நினைவை  பதிவு செய்துள்ளார்   குறித்த பதிவானது  சமர்கள நாயகன் நூலிலிருந்து தட்டச்சு செய்து வேர்கள் இணையத்தில்   இன்று  (19.05.2019) மீள்வெளியீடு   செய்கின்றோம்  .!   முல்லை மாவட்டத்தின் கொக்குத்தொடுவாயைப் பிறப்பிடமாகக்கொண்ட கந்தையா பாலசேகரம் எனும் இயற்பெயரைக்கொண்ட பிரிகேடியர் பால்ராஜ் 20.05.2008  அன்று மாரடைப்பால் சாவடைந்தார் என்ற செய்தி கேட்டு தமிழ்பேசும் மக்கள் மிகுந்த கவலையடைந்துள்ளனர். 1984-இல் இருந்து ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் போராட்டமே வாழ்வு என […]

பகிர

பிரதி


பிரிகேடியர் பால்ராஜ்: நெருக்கடிகளை உடைத்தெறிந்த பெரும் சாதனையாளன்

 கொள்கை முன்டுெப்புப் பிரிவுப் பொறுப்பாளர் எழிலன் அவர்கள்  பிரிகேடியர் பால்ராஜ்  அவர்களுடைய  கள நினைவை  பதிவு செய்துள்ளார்   குறித்த பதிவானது  சமர்கள நாயகன் நூலிலிருந்து தட்டச்சு செய்து வேர்கள் இணையத்தில்   இன்று  (19.05.2018) மீள்வெளியீடு   செய்கின்றோம்  .!   பால்ராஜ் அவர்கள் சுகயீனம்  காரணமாக வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். இந்தச் செய்தி வெளியே வந்தபொழுது தமிழீழப் பரப்பொங்கும் மக்களுடைய மனங்களிலே மிகவும் ஒரு சோகமான நிலைமை. ஏனென்றால் பெரும்பாலும் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களை முழுமையாக தெரிந்த மக்களாகத்தான் இருக்கின்றார்கள். அவரை […]

பகிர

பிரதி


இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று செயற்பட்டவர் பிரிகேடியர் பால்ராஜ்.!

தலைமைச் செயலகம்,தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். மே 21, 2008. எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே, விடுதலைக்கான நீண்ட பயணத்திலே எமது சுதந்திர இயக்கம் எத்தனையோ அற்புதமான தியாகங்களைப் புரிந்திருக்கிறது. எத்தனையோ வீரகாவியங்களைப் படைத்திருக்கிறது. எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது. மகத்தான இராணுவ வெற்றிகளைக் குவித்திருக்கிறது. இந்த இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று, எமது சண்டையணிகளையும் மரபுப் படையணிகளையும் வழிப்படுத்தி, நெறிப்படுத்திச் சமராடிய எமது வீரத்தளபதி இன்று எம்முடன் இல்லை. இவரது இழப்பால் எமது தேசம் […]

பகிர

பிரதி


மதிப்புக்குரிய தளபதி பிரிகேடியர் பால்ராஜ்.!

இந்தியப் படைகளுக்கு எதிரான போர் உக்கிரமடைந்திருந்த காலம். தலைவர் இந்தியப் படைகளுடனான போரை வழி நடாத்திக் கொண்டிருக்க நாங்கள் வடமராட்சியிலிருந்து செயற்பட்டுக் கொண்டிருந்தோம். ஆளெண்ணிக்கையை அதிகமாக்கி, நகரும் அணிகளைப் பெருமளவில் ஈடுபடுத்தித் தமது ரோந்து நடவடிக்கைகளை எல்லா இடமும் இந்தியர்கள் தீவிரப்படுத்தினர். இந்தியர்களின் இந்த நகர்வு எமக்கு தாக்குதல்களுக்குச் சந்தர்ப்பங்களை வழங்கியிருந்தாலும், எமது நகர்வுகளுக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுக்கத்தான் செய்தது.   இந்த நிலையில் தலைவர் அவர்களைச் சந்திப்பதற்காக நாம் வடமராட்சியிலிருந்து மணலாறு நோக்கிய ஒரு பயணத்தை […]

பகிர

பிரதி


தமிழீழம்