30.10.1995
மக்கள் அளித்த மாபெரும் பங்களிப்பு
(1995) வரலாற்றுப் பதிவாகிவிட்ட மாபெரும் யாழ்ப்பாண இடப்பெயர்வு.
தமிழீழ மக்களின் சழூக கலாச்சார பொருளாதார மையமாகவும் தளராத கோட்டையாகவும் பொங்கிப்பிரவாகிக்கும் விடுதலைத்தீயின் பிறப்பிடமாகவும் இருந்து யாழ்ப்பாணத்தில் மண்ணும் மக்களும் எனப்பிணைந்து போயிருந்த உறவின் தொப்பிள்கொடியறுத்து ஐந்தரை இலட்சம் மக்களை ஓரிரு இரவில் குடிபெயரவைத்தது சிங்களத்தின் “சூரியகதிர்”
நல்லைக்கந்தன் முற்றத்திலிருந்து செம்மணி வெளிநிறைந்து நாவற்குழிப் பாலம் நிரம்பி இறுக்கி முட்டி மோதியது மனிதத் தலைகள் .ஒருகாலடி எடுத்துவைக்க குறைந்துத 30 நிமிடங்கள் பிடித்தது.இது மிகையல்ல .நிஜம் .ஏனெனில் இம் மக்கள் வெள்ளத்தில் நானும் ஒருத்தன்.
மழை பெய்துகொண்டிருந்தது”’ஆட்லறி”எறிகணைகள் மக்களைக்கடந்து சென்று அருகில் விழுந்து வெடித்துக்கொண்டிருக்க மேலே எதிரியின் “புக்காரா”குண்டுவீச்சு விமானம் வட்டமடித்து எந்நேரத்திலும் குண்டுகளை வீசக்கூடியதாக பறந்து கொண்டிருந்தது. வயோதிபர்கள் சிலர் அந்த இடங்களிலேயே விழுந்து இறந்து கிடக்க பிரசவங்களும் அவ்விடத்திலேயே நிகழ்ந்தேறின பிறந்த குழந்தையும் உப்பு நீரில் குளித்து மழைநீரை குடித்து பாலம் கடந்தது. தமிழ்மானம் உயர்ந்தது.இது எனது அனுபவத்தின் ஊடான மனப்பதிவின் சில பதிவுகள் மட்டுமே.இன்னும் எத்தனையோ சொல்லொணாத் துன்பங்கள் அனுபவித்து தமது நிலபுல சொத்துசுகங்களை கைவிட்டு உடுத்த உடுப்புடன் கையில் எடுத்த பொருட்களுடன் எதிரியின் எண்ணத்துக்கு வேட்டு வைத்து தம்மண்ணைவிட்டு வெளியேறி விடுதலைக்கு உரம் சேர்த்தனர் எம்மக்கள்.
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் கூட அந்த வரலாற்று இடப்பெயர்வு குறித்து கூறும்போது ‘இது எம்மக்கள் அளித்த ஒரு உயர்ந்த பட்ச பங்களிப்பு.அது எங்கள் வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.ஒட்டு மொத்தமாக ஐந்து இலட்சம் மக்களும் செய்த ஒரு பெரிய பங்களிப்பு “ என்று குறிப்பிடுகின்றார்.
“யாழ்ப்பாண மக்களை விடுதலை செய்யப்போகின்றோம் அவர்களிற்கு விமர்சனமளிக்கப்போகின்றோம்.அவர்கள் விடுதலைத்புலிகளின் பிடிக்குள் இருந்து கஸ்ரப்படுகிறார்கள்.அவர்களிற்குமீண்டும் சுதந்திரத்தை பெற்றுக்பொடுப்பதே எமது பணி “எனக்கூறிக்கொண்டு 40000 படைகளை களத்தில் இறக்கி பன்மடங்காக ஆயுத பலத்தை பெருக்கிக் கொண்டு “சூரியகதிர்” படைநடடிக்கைகளில் அரசாங்கம் இறங்கியது.இருந்தும் என்ன பயன் சிறீலங்கா அரசுக்கு பறைசாற்றிய எம்மக்கள் புலிகளை ஆதரித்து அவர்கள் பின்னே சென்றனர்.முகத்தில் கரிபூசிக்கொண்டது சிங்கள அரசு.விடுதலைப்புலிகளும் மக்களும் ஒன்றே என்றும் தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக சிங்கள அரசை வெறுக்கிறார்கள் விடுதலைப்புலிகளையே தமது தலைமையாக ஏற்றுக்கொண்டுசெயற்படுகிறார்கள் என்பதையும் முழு உலகிற்குமே தெரியப்படுத்தியது இந்த மாபெரும் வரலாற்று இடப்பெயர்வு.
யுhழ்குடாவில் இன்றுவரைஆயிரக்கணக்கான மக்கள் இராணுவகட்டுப்பாட்டுக்குள் வாழ்ந்து வருகின்றனரே என சிலர் நினைக்ககூடும்.ஆனால் அன்றைய தினத்தில் தரைவழியாக ஓர் ஒற்றையடிப்பபாதையாகிலும் அம்மக்களுக்கு கிடைத்திருக்குமாயின் இன்றுவரை யாழ்;ப்பாணத்தில் இராணுவம் “இலையான்”தான் கலைத்துக்ககொண்டிருக்கும்.என்பது அவர்கள் அறிய வேண்டிய உண்மையாகும். ஓருவேளை அப்படி நடைபெற்று இராணுவம் மட்டுமே யாழ்குடாவில் இருந்திருக்குமாயின் எப்பொழுதோ இலகுவாக எந்தச்சிக்கலுமின்றி விடுதலைப்புலிகள் யாழ்குடாவை மீட்டிருப்பார்கள் என்பது உறுதி.
இப்படை நடவடிக்கையானது சிங்கள அரசின் அரசியல் தந்திரோபாயத்திற்கும் நோக்கத்திற்கும் கிடைத்த மிகப்பெரிய தோல்வி என்பதை உலக நாடுகளே சுட்டிக்காட்டியிருந்தன.தம்மிடம்; இருந்த மிகப்பெரிய பலமான ஆட்பலத்தை வைத்துக்கொண்டு ஆயுத பலத்தின் உதவியுடன் விடுதலைப்புலிகளை வலிந்து சண்டைக்கிழுத்து அவர்களை பலவீனப்படுத்தி விடுவதென்று சமரை ஆரம்பித்த சிங்கள படைத்தலைமை சற்றும் எதிர்பார்க்கவில்லை யாழ்ப்பாணத்தை விட்டுபுலிகள் தந்திரோபாயமாக பின்வாங்கி விடுவார்கள் என்று யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய இந்த 5 வருட காலப்பகுதியில் பேரினவாத அரசால் எதனைச்சாதிக்க முடிந்தது. ஒன்றுமே இல்லை.
யாழ்குடாவை சிறீலங்கா இராணுவம் ஆக்கிரமித்த பின்னர் 1995 இல் தனது மாவீரர் நாள் உரையின்போது தமிழீழதேசியத்தலைவர் அவர்கள் கூறிய விடயமொன்றை இங்கு குறிப்பிடுவது இன்றைய காலத்திற்கு மிகவும்பொருத்தமாக அமைவதுடன் அவரது நுட்பமான திட்டமிடலுக்கும் தீர்க்கதரிசனத்திற்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கம் என்பது திண்ணம்.அது யாதெனில் “பெரும்படையை திரட்டி நிலத்தை கைப்பற்றுவது கடினமான காரியமல்ல.ஆனால் கைப்பற்றிய நிலத்தில் காலூன்றி நிற்பதுதான் கடினமான காரியம் .உலகெங்கும் ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்கொண்ட வரலாற்று உண்மையிது.இந்த வரலாற்றுப்பாடத்தை சிறீலங்கா இராணுவம் படித்துக்கொள்வதற்கு வெகுகாலம் செல்லாது என்பதே.
இவரது ஐந்து வருடத்திற்கு முந்தைய கூற்று இன்று செயல்வடிவம் பெற்று பெருவெற்றியைக் கண்டுவருவதானது “புலிகள் சொன்னதை செய்வார்கள்”என்பதை கட்டியங்கூறி நிற்கிறது.
நிலங்களை இழப்பதும் பின் அவற்றை மீட்பதும் உலகவிடுதலைப்போராட்ங்கள் அனைத்துமே சந்தித்த சந்திக்கின்ற ஒரு பொதுவான நிகழ்வதான் .1943இல் “மாவோ சேதுங்”கின் “செஞ்சேனைப்” படைகள் “யேனான்” எனும் பகுதியை விட்டுப் பின்வாங்களப்பின் அதை மீட்டெடுத்த வரலாற்று வெற்றி.1974இல் எரித்திரிய விடுதலைஇயக்கம் “அஸ்மாறா”எனும் தனது தலைநகரை இழந்து சில வருடங்களின் பின்னர் மீண்டும் அதை மீட்ட வரலாறு.வியட்நாம் விடதலைப்போரில் நடைபெற்ற நில ஆக்கிரமிப்பு நிலமீட்புச்சம்பவங்கள் போன்று இன்னும் எத்தனையோ சம்பவங்கள் இதற்கு உதாரணம்.
இந்த உதாரணங்களின் அடிப்படையில் இன்று யாழ் மண்ணை புலிகளின் ஓயாத அலைகள் மீட்டெடுத்து வருவதானது 5வருடங்களுக்கு முன்பு தனது மண்ணுடனான உறவின் தொப்பிள்கொடியறுந்து இன்றுவரை நெஞ்சில் வலிசுமந்து வாழ்ந்து வருகின்ற மக்களுக்கு மட்டுமன்றி முழு ஈழத்தமிழனுக்குமே தமிழீழ விடுதலைப்பலிகள் இயக்கம் பெற்றுக்கொடு;க்கின்ற இனிப்பான செய்தி மட்டுமல்ல உடுத்த உடுப்புடன் எங்கே செல்வது எங்கே தங்குவது எதை உண்பது என்று எதுவுமே தெரியாத நிலையிலும் விடுதலைப்புலிகளின் சொல் கேட்டு அவர்களின் பின்னே சென்று போராட்டத்திற்கு வலுச்சேர்த்த மக்களுக்கு தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் மன் நெஞ்சு நிறைந்து கொடுக்கின்ற பரிசாகவும் அமையும்.
இந்த பரிசுகளில் ஒன்றுதான் தமிழீழத்தின் தொண்டைக்குள் சிக்கிய “முள்” ஆக இருந்த ஆணையிறவு இன்று பகைவனின் உச்சியில் அறைகி;ன்ற ஆணியாக மாறியிருப்பது ஆகும்.
யாழ்மண்ணை ஆக்கிரமித்து விடுதலைப்புலிகளை தனிமைப்படுத்திவிடலாம் எனப்பகற்கனவு கண்ட சிங்கள அரசுக்கும் அதன்படைகளுக்கும் இன்று அந்த மக்களின் துணையுடனேயே பிரபாகரனின் சேனைகள் சென்று புதைகுழி அமைத்து வருவது உலகவரலாற்றில் பதியப்பட வேண்டிய இன்னொரு அத்தியாயமாகும். தமிழ்மக்களை மீட்கவென வந்திறங்கிய சிங்களப்படைகள் இன்று மீண்டு செல்ல முடியாது விழிபிதுங்கி நிற்பதானது இன்று உலகறிந்த பரிதாபம் .
தமிழ்மக்களின் நீண்ட விடுதலைப்பயணமானது பல தடைகளைத்தாண்டி இன்று வெற்றிப்படிகளில் முன்னேறி வருகிறது .எதிரி ஆக்கிரமித்திருந்த பெரும் பிரதேசங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. மிகப்பெரிய வரலாற்று இடப்பெயர்வை நினைவு கூர்ந்து நிற்கின்ற நாம் இவ்வேளையில் ஒன்றை மட்டும் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.
“ஈழத்தமிழனுக்கு இனிமேலும் குடிப்பெயர்வு என்பதே இல்லை எல்லாமே குடிபுகும் விழாக்கள்தான்”
வெளியீடு-எரிமலை இதழ்