எமது தேசவிடுதலைப் போராட்டமானது மக்களின் பக்கபலத்திலும், எண்ணற்ற தியாகிகளின் குருதியிலும் உரமேறி ஓங்கி வளர்ந்துநிற்கின்றது.பல இடையூறுகள், துன்பங்கள், துயரங்களுக்கு மத்தியிலும் எம்மவர்களுக்கு உண்ண உணவு கொடுத்து, எதிரிப்பைடகளின்
கோரப்பிடிகளுக்குள் சிக்காமல் தம் சிறகுகளால் மூடி, அவர்களின் நடமாட்டங்களையும், நகர்வுகளையும் அவதானித்து தகவல்களும்,
ஆயுதங்களும், உணவுப் பொதிகளும் சுமந்து, இந்த மண்ணில் வீரப்புதல்வர்களை, காவல் தெய்வங்களை வளர்த்தவர்கள் எம் மக்கள்.
உணவு கொடுத்து உதவிகள் புரிவதோடு மட்டும் நின்றுவிடாது, உயிர் கொடுக்கவும் துணிந்து நின்று நாட்டுப்பற்றாளர்களாகவும், நிமிர்ந்த எம் மக்கள் நினைவில் நிறைகின்றனர்.
தம் தாயக மண்ணின் விடுதலைக்காகவே சிறீலங்கா அரசகூலிப்படைகளினதும், அயல் தேசங்களிலிருந்து அமைதிக்காகவென வந்த பாரதப்படைகளினதும், தாயகத்துமண்ணின் விடுதலைக்கென ஆயுதமேந்தி அரசபடைகளின் கைக்கூலிகளாகிப்போன எமது நாட்டின்
தேசவிரோதக் கும்பல்களினதும் துப்பாக்கி ரவைகளுக்கும், கத்திகளுக்கும் பலியாகிப்போன 250இற்கு மேற்பட்ட தேசப்பற்றாளர்கள் இன்றுவரை தம் உயிர்களைத் தியாகம் செய்துள்ளனர்
அந்நியப்படைகளின் அநீதிக்கெதிராக அகிம்சைப்போரில் குதித்து 32 நாட்கள் உண்ணாவிரத நோன்பிருந்து பசியென்னும் தீயினிலே உருகி
தன் உயிர் நீத்தவர் அன்னை பூபதி.
போராளிகளை அரவணைத்து உண்டிகொடுத்து ஆதரித்ததனால் புளொட் தேசவிரோதக்கும்பல்களினால் சுடப்பட்ட பாக்கியமக்கா.
விறகு கட்டையால் புலிகளை மூடிவிட்டு , தன் சேலையை அதன்மேல் காயவிட்டு, மேலே ஏறியிருந்து சிங்களக்கூலிப்படைகளின் கண்களில் மண்ணைத்துதூவி காத்து, சிறீலங்காப் படைகளாலேயே சுட்டுக்கொல்லப்பட்ட சரோக்கா .
விடுதலைப் புலிகளுக்கு உணவளித்துக் கொண்டிருக்கும்போது திடீரென வீட்டைச் சுற்றிவளைத்த இந்தியப்படைகளுக்கும், தேசவிரோதக்கும்பல்களுக்கும், புலிகளுக்கும் இடையே நடந்த மோதலில் அந்த புலிவீரர் சயனைற் அருந்தி வீரகாவியமாக மீதி சயனைற்றை தானும் உண்டு உயிர்துறந்த மஞ்களாதேவி.
இன்னும் இந்தியப்படைகளாலும், தேசவிரோதிகளாலும் சுட்டும் வெட்டியும் கொல்லப்பட்ட லிங்கையா ,பொன்னம்பலம், கைலாயநாதன், நித்தியானந்தன் , யோகன், சின்னைய்யா, கருணானந்தசிவம்மாஸ்ரர்,மனோகர், செல்லமுத்து, சிவஞானவதி, செல்வராணி, செல்வமக்கா, சிவக்கொழுந்து இனந்தெரியாதோரால்கொலை செய்யப்பட்ட செல்விசோபா என்னும் தியாகிகள் பெயர்கள் நீண்டு கொண்டே செல்கிறது .
மாவீரர்களை நினைவுகூரும் இவ்வேளையில் பலவழிகளில் தம்மைதியாகம்செய்துவிடுதலைக்கு உரம்ஊட்டிய ஏனைய தாயகப்பற்றாளர்களையும் நினைவுகூர்வதுடன் , அவர்களுக்காகவும் தலைவணங்குகின்றோம்.!
-சூரியப்புதல்வர்கள்
மாவீரர்கள் நினைவிலிருந்து வேர்கள்.!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”