இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home எரிமலை இதழிலிருந்து வெற்றிக்கு பின்னால் தெரிகின்ற உண்மைகள்

வெற்றிக்கு பின்னால் தெரிகின்ற உண்மைகள்

தோல்வியடையும் எந்த ஒரு நாட்டுக்கும் உலக நாடுகள் சார்பாக நிற்காது, தனக்கு இலாபம்
இல்லாதுவிட்டால் எந்த நாடும் எத்தகைய விடுதலைப் போராட்டங்களையும் ஆதரிக்காது. உலகத்தின் வரலாற்று நடைமுறை இதுவாகத்தான் இருக்கின்றது
புதிய உலக ஒழுங்கை வல்லாண்மை நாடுகளின் உற்பத்தி நிறுவனங்களே தீர்மானிக்கின்றன. வல்லாண்மை நாடுகளின் பெளதீக ஆக்கிரமிப்புகள் யாவும் முடிவுக்கு வந்தபின் உலக ஒழுங்கு மாறிவிட்டது.
தங்களுடைய கருத்தினை ஏனைய சிறு நாடுகள் மீது திணிப்பது அடுத்த கட்டம். அவர்களின் கருத்தே சிறிய நாடுகளின் கருத்தாகவும் இருக்கவேண்டும் என்பதே இதன் அடிப்படை. இந்தகருத்தாக்கிரப்பின் ஒருவகைதான் கலைக் கோட்பாடுகளை பரப்புதலும், இவை சிறிய நாடுகளின் சுயகலை வடிவங்களைத் திசைதிருப்பும் .
 
இன்று, வல்லாண்மை நாடுகளின் உற்பத்தி நிறுவனங்கள், தமது சந்தையாக சிறிய நாடுகளைப் பயன்படுத்துகின்றன இது புதிய ஆக்கிரமிப்பு வடிவம். கலைக்கோட்பாடும் இந்த ஆக்கிரமிப்பினுள் அடங்குகின்றது. ‘பின் நவீனத்துவம்’ என்ற
கலைக்கோட்பாடு புதிதாக இவ்வாறுதான் அறிமுகப்படுத்தப்பட்டது .
இது ஒரு பல்தேசிய நிறுவன  முதலாளியின் பணிப்பின் பேரில்உருவாக்கப்பட்டது. இந்தக் கோட்பாடு உருவான மேற்குலகில் இன்று இறந்துவிட்டது. ஆனால் சிறிய நாடுகளில் இது பெரும் சர்ச்சைக்குரியதாகிவிட்டது. இதுதான் ஆக்கிரமிப்பாளரின் நோக்கம். பின் நவீனத்துவத்தின் அடிப்படைக்கோட்பாடு, சிறு இனங்களின் தனித்துவச் சிந்தனை தேசியங்களையும் மீறி பொதுச்சிந்தனையை உருவாக்குவது என்ற போர்வையிலான ஆக்கிரமிப்பு இது.
இன்று உலகின் புதிய ஒழுங்கின்படி தனது சந்தைக்கு இடமளிக்கும் நாடுகளையேவல்லாண்மை நாடுகள் ஆதரிக்கின்றன இந்த நாடுகளின் உற்பத்தி நிறுவனங்களின் சந்தைப்போக்கு எதுவித இழப்பும், சேதமுமில்லாது ஒழுங்காக நடைபெறவேண்டும் என்பதே அவற்றின்
நோக்கு.சிறீலங்காவிலும் இநத நிறுவனங்கள் பெருமளவில் வேரூன்றியுள்ளன. இந்த நிறுவனங்களின் இலாபமானசெயற்ப்பாட்டிற்கு அமைதி நிலவவேண்டும் .
 
3ஆம் ஈழப்போரில் யாழ்ப்பாணத்தை சிறீலங்கா இராணுவம் ஆக்கிரமித்தபோது, அமைதியை போர்மூலம் கொண்டுவருவதாக அரசு நம்பிக்கையளித்தது. இதன்மீது நம்பிக்கைவைத்து மேற்படி நிறுவனங்களின் நாடுகள்போருககான நிதி உதவியை வழங்கினர் . இதனடிப்படையில் சத்ஜய, ஜெயசிக்குறு.எடிபல, ரணகோச, றிவிபல வோட்டர்செட் என படைநடவடிக்கைகளில் நீண்டவன்னியின் பகுதிகள்இராணுவ ஆக்கிரமிப்புக்கு உட்பட்டன.
 
சிறீலங்கா அரசு போர்மூலம்அமைதியைக் கொண்டுவந்து (அவர்களின்கருத்துப்படி புலிகளை ஒழித்தால் அமைதி வந்துவிடும்) தமது நிறுவனங்கள் இலாபங்களுடன் இயங்கும் சூழலை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை அந்த நாடுகளிடம் வளர்ந்தது. வெளிநாட்டு நிறுவனங்களில் ஒன்றான ‘மோட்டரோலா தனது தொலைபேசி நிறுவனத்தையாழ்ப்பாணத்தில் அமைத்து இலாபமீட்டிவருகின்றமையும் இங்குகுறிப்பிடவேண்டும்.
 
இத்தகைய சூழலில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் திட்டமிடலில் அவரின் நேரடி நெறிப்படுத்தலில் ஆரம்பமான ஓயாத அலைகள்-3 நடவடிக்கை ,வடபகுதியில் பெருமளவிலான இராணுவஆக்கிரமிப்புப் பகுதிகளை மீட்டுள்ளதுயாழ். குடா படையினரின் ஆனையிறவு நுழைவாயில் பெருந்தளம் உட்பட்ட யாழ்ப்பாணப் பகுதிகள் மற்றும் வன்னியின் பெரும் பகுதிகள் விடுதலைப்புலிகளால் மீட்கப்பட்டுள்ளன. இதனால் சிறீலங்கா அரசு படுதோல்வியைச் சந்தித்துள்ளது. மீளமுடியாத பொறியில் இராணுவம் சிக்கியுள்ளது. விடுதலைப்புலிகள் இராணுவ மேலாண்மையை பெற்றுள்ள சூழலில் தமிழீழத்தின் வெற்றி இலக்குகள் நெருங்குகின்றன. இந்தச் சூழலில் சிறீலங்கா அரசு இராணுவம் மூலம் அமைதியைக்கொண்டு வருவதாக வல்லாண்மை நாடுகளுக்கு வழங்கிய வாக்குறுதிகள் யாவும் பொய்த்துவிட்டன அந்த நாடுகள் சிறீலங்காவின் வாககுறுதகளை நம்பவும் தயாராகவில்லை .
இந்தச் சூழலில் சிறீலங்கா மற்றும் தமிழீழம் தொடர்பாக
புதிய ஒழுங்கை மேற்கொள்ளவேண்டிய நிலைக்கு அந்த நாடுகள்
தள்ளப்பட்டுள்ள வியட்நாமில்-தியன்-பியன்பூ தளத்தை பிரான்ஸ் இழந்தபோது அதன் தோல்வி உறுதிசெய்யப்பட்டுவிட்டது. அப்போது பிரான்ஸ் அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளிடம் உதவிகோரியது. ஆனால்
அவை உதவவில்லை அதேபோன்ற நிலையில்தான் தற்போது சிறீலங்காவும் உள்ளது.
வல்லாண்மை நாடுகள் சிறீலங்கா தமக்குச் சாதகமானதாக இருந்தும்கூட 
அதன் இராணுவத் தோல்வி காரணமாக அதன் மீதான நம்பிக்கையை இழந்துவிடுகின்றன
 
தோல்வியைத்தழுவும் நாட்டுக்குஎந்தநாடும் துணை நிற்கப்போவதில்லை தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒருதீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளது தமிழர் நிலங்களை ஆக்கிரமிப்பதன்மூலம் விடுதலைப் புலிகளை ஒழிக்கலாம் என்ற திட்டத்தில் தனது பெரும் .
 
படைப்பலத்தை சிறீலங்கா அரசு செலவிட்டது. நாட்டின் பெரும் பொருளாதாரமும் போரிற்கு
செப்டெ ம்பர் வரை 1995 முதல் சிறீலங்காவின் இராணுவ நடவடிககைகளை உச்சக்கட்டத்திலேயே இருந்துவந்தன. 1999 செப்டெம்பர் வரை உச்சக்கட்டத்தில் இருந்த படை நடவடிககைககாக சிறீலங்கா தேசத்தின் பெரும் பொருளாதாரவளம் செலவிடப்பட்டது
சிறீலங்காவின் போரிடும் வலுக்கொண்ட முழுமையான இராணுவ வளமும், தமிழர்நில ஆக்கிரமிப்பில்பயன்படுத்தப்பட்டன.
 
ஓயாத அலைகள்-3 நடவடிக்கை மூலம்விடுதலைப் புலிகள் சிறீலங்கா இராணுவத்தின் போரிடும் வலுக்கொண்ட படைகளின் வலிமையைச் சிதறடித்துள்ளனர். இழக்கப்பட்ட தளங்களையும் மீட்டுள்ளனர்.
ஆட்லெறிகள் உட்பட பலநுாறு கோடிகள் ரூபா பெறுமதியான போராயுதங்களையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர். மீள உயிர்பெறக் கடினமான சூழலில் இராணுவம் உள்ளது. தமது பொருளாதார இலாபங்களுக்காக உலகின் பல நாடுகள் சிறீலங்காவுக்கு ஆயுத தளபாடங்களை வழங்கினாலும்கூட, மனவுறுதி சிதைந்த படைகள் புதிய ஆயுத தளபாடங்களால் வெற்றிகளை ஈட்டலாம் என்பது கடினமான காரியமாகிவிட்டுள்ளது
 
இந்தச் சூழலில் உலக நாடுகள் சிறீலங்காவுக்கு வழங்கும் ஆதரவு குறித்து மறுபரிசீலனைகளை
செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு விடுதலைப் புலிகளின் உயர்ந்த மேலாண்மையே காரணமாக அமைநதுளளது.
ஆக்கம் :தி .தவபாலன் (புலிகளின்குரல் வானொலி)
வெளியீடு :எரிமலை 
மீள் வெளியீடு மற்றும் இணைய தட்டச்சு  உரிமை :வேர்கள் இணையம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

Recent Comments