வீரமங்கை செங்கொடி நினைவு வணக்கநாள் இன்றாகும்.
சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் சாவு ஒறுப்பை நிறைவேற்ற இந்திய அரசு முயன்ற வேளை அம்மூவரின் உயிர் காக்க 28.08.2011 அன்று தமிழகத்தில் காஞ்சிபுரம் தாலுகா பணிமனையின் முன்பு தன்னுடலில் தீமூட்டி மரண தண்டனைக்கு எதிராக ஈகைச் சாவைத் தழுவிக்கொண்ட வீரமங்கை செங்கொடியின் 7 ம் ஆண்டு நினைவு வணக்கநாள் இன்றாகும்.
வீரமங்கை செங்கொடி அவர்களின் நீளும் நினைவுகள்.!
தமிழ் உறவுகள் மூவரின் உயிர்காக்க தன்னுயிரை ஆகுதியாகிய வீரமங்கை செங்கொடியை நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.