வீதை வெடித்து
முளைத்துப் பெருத்துக் கன்றாகிப்
பருவ நிலைகட்குப் பணியாது சளையா
விண்வெளி துளாவி வளர்ந்திற்று!
கிளைத்துக் கிளைத்து
கிளையிற் கிளைத்து
துளிர்த்து கூடைத்து
இலையுதிர்த்து,
துளிர்துத் துளிர்துச் சடைத்திற்று
ஆழவேர்க் கால் புதைத்து
மண்பற்றிப் பெயரா மலையென
நிர்ந்து ,
கனியாகக் காற்றாக
நிழலாக மழையாக
பலதாகப் பயன் செரியும் அது!
புள்ளி வித்துள்
பெரிய விருட்சம்!
விருட்சமென விசாலித்த மெய்
வாழ்க்கை
எணறு வரும
மனிதர் பலருக்கு !?
சுயச்சயல் அல்லது மீறியெழல்
குயிலுக்குப் போல குரல் வளம்
எனக்கும் இருப்பதாய்
உணர்கிறேன்!
பாடத் தோன்றுகுது.
பாடிவிட முனைகிறேன்!
சபிக்கச் சிக்க
நக்கலடிக்க நகைத்தொதுக்க
சுற்றியிருப்பவர் பலர்!
குரல்வளை நெரிக்கவு கூடும் அவர்
எனினும் நான் என் பாட்டில்
ஓர் புறமிருந்து பாடுவேன் உரத்து
என் இயல்பாய் இசையில் லயித்து
இயற்றி
இனிமையான புதுப்பாட்டு!
கவியாக்கம் :இளந்திரையன்
வெளியீடு எரிமலை (1997)
மீள் வெளியீடு :வேர்கள்
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “