
கிழக்கினை நோக்கி
புதிய விடிவொன்றை தேடுவோம்.
இல்லையேல்
இரவுகளை இல்லாதொழிப்போம் .
எழுது கோலையும்,
கலப்பை முனையையும்
முகில்களைக் கிழிக்கும்
ஆயுதமாக்குவோம்
முகிலினைவிலக்கி
புதிய ஒளியிேைதடுவோம்.
புறப்படத் தயாராகுங்கள்.
காற்றைப் போலன்றி
பெரும் புயலாக …
எல்லோர் மூச்சையும்
கடும் சூறாவளியாக்கி
புறப்படத் தயாராகுங்கள்.
மலைகளில் பிறந்த நீரை
நதிகளாக்கினோம்
நதிகள் காய்ந்துவிடப்போகிறது.
கடல்கள் ஆகுவோம்
கடலிணைநோக்கி
புறப்படத் தயாராகுங்கள்.
கிழக்கிேைநாக்கி
எல்லோரும்
புறப்படத் தயாராகுங்கள்
கவியாக்கம் :ஈரத்தி
மீள் வெளியீடு :வேர்கள் இணையம்
மாவீரர் நாள் சிறப்பு பதிவிலிருந்து வேர்கள்
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”