இருள் திரை போர்த்திங்கு
நில மகள்
மாசுப்பாதங்கள் பதித்து
நொந்து போயுள்ளாள்
ஒரு கூட்டில் பொரித்து
கூடியிருந்த குஞ்சுகள்
திக்கொன்றாய்.
விடியலின் அறிகுறி
சேவலின் கூவலில் அல்ல
கதிரவனின்
இளஞ் சூட்டுக் கதிர்களிலுமல்ல
ரீங்காரமிடும்
சிட்டுக் குருவிகளின் சிறகடிப்பிலுமல்ல
கனத்த இருளின் கருக்கலில்
காலடிகள் சில கரைதேடி
காவியங்கள் ஆகும்
இவை உண்மை
விடியலுக்காக….!
-கவியாக்கம் : அ.பிலோமினா .
வெளியீடு :சூரியப்புதவர்கள் 2003
மீள் வெளியீடு :வேர்கள்
மாவீரர் நாள் சிறப்பு பதிவிலிருந்து வேர்கள்.!