
பிறப்பில் முதல் வலி.
தமிழாய்ப் பிறத்தது அடுத்த வலி
1956 இல் தொடங்கிய வலி
38, 61.77, 83 தொடரும் வலி
உரை6விட்டு
உறவை விட்டு
நாட்டை விட்டு
அகதியாய்
இடம்பெயர்ந்த வலி.
கூட்டைவிட்டு
கூலிக்காய் கலைத்த வலி
சேனநாயக்க முதல்
மகிந்த ஐயா வரை
மலிவாய்க் கிடைக்கும் வலி
மழை
வெய்யில்
பனி என இயற்கை வலி
நின்மதியாய்
உண்டு
உறங்க
பிணையின் வலி.
நிவாரணத்திற்காய் சங்கத்தில் தூங்கும் வலி
பட்டியில் பிள்ளையின் வலி
படுக்கையில் பாம்பின்வலி
வீதியில் வாசுத்தின் வலி
தொழிலை இழத்த வலி
கிபீரின் இரைசல் வலி
நித்தம் எறிகணைகளின் ஒசை வலி
******
தொடரும் மக்கள் வலிகள்:
இத்தனைக்குள்ளும்
வலியின் வலியை
உடைக்கும் வழி
பலம் கொண்டு ஈழத்தில்
ஒன்றவோம்
திறன் கொண்டு
பாரினில் வாழ்வோம்
கவியாக்கம் :-தெ .றஞ்சித்குமார்
வெளியீடு:எரிமலை இதழ்
மீள் வெளியீடு :வேர்கள் இணையம்
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”