இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்க நாள்

லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்க நாள்

தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்க நாள் இன்றாகும்.

23.07.1983 அன்று யாழ். மாவட்டம் திருநெல்வேலிப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மீதான கரந்தடி கண்ணிவெடித் தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரும், தலைசிறந்த கெரில்லா தாக்குதல் தளபதிகளில் ஒருவருமான லெப். செல்லக்கிளி அம்மான் ஆகிய மாவீரரின் 36ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் தலைசிறந்த கெரில்லா தளபதியான லெப்டினன்ட் செல்லக்கிளி 1983  யூலை  மாதம் 23ம் திகதி திருநெல்வேலியில் சிங்கள இராணுவத்திற்கு எதிராக விடுதலைப்புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். இத்தாக்குதலில் 13 சிங்க இராணுவப் படையினர் கொல்லப்பட்டனர்.

திருநெல்வேலித் தாக்குதல் உட்பட பல கெரில்லா அதிரடித் தாக்குதல்களுக்கும் தலைமை தாங்கி வெற்றிகரமாக நடத்தி முடித்த செல்லக்கிளி அம்மான் யாழ்ப்பனத்திலுள்ள கல்வியங்காட்டை பிறப்பிடமாகக் கொண்டவர்.

இளம்பிராயத்திலேயே ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் சுதந்திரப் போராட்டத்திற்கு தம்மை அர்ப்பணித்துக்கொண்ட செல்லக்கிளி விடுதலைப்பற்று மிகுந்த ஒரு வீரமறவன். இவரது தன்னலமற்ற உழைப்பும், தியாகமும் என்றும் எமது மக்களால் நினைவுறுத்தப்படும்.

விடுதலையின் கனவுகளுடன் கல்லறையில் உறங்கும் மாவீரர்.!

லெப். செல்லக்கிளி அம்மான் மீளும் நினைவுகள் 

 

 

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...

Recent Comments