லெப். சீலன், வீரவேங்கை ஆனந் வீரவணக்க நாள் இன்றாகும்
யாழ். மாவட்டம் மீசாலைப் பகுதியில் 15.07.1983 அன்று துரோகி ஒருவனின் காட்டிக்கொடுப்பால் சிறிலங்கா படையினரின் முற்றுகையில் ஏற்பட்ட மோதலில் நெஞ்சில் குண்டுபாய்ந்த வேளையில் எதிரியிடம் தான் உயிருடன் பிடிபடக்கூடாது எனவும், துப்பாக்கியை பாசறையில் ஒப்படைக்கும் படியும் கூறி தோழன் கையில் இருந்த சுடுகலனைக் கொண்டு தம்மை சுடுவித்து, வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் தளபதியும், தமிழீழ தேசியத் தலைவரின் உற்ற தோழனுமாகிய லெப்.சீலன் (ஆசீர் / இதயச்சந்திரன்), வீரவேங்கை ஆனந் ஆகிய மாவீரர்களின் 34ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக்
காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”