லெப். கேணல் ஸ்ரிபன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
போரியலுக்கு பலம் சேர்க்கும் வகையில் ஈடுபட்ட விநியோக நடவடிக்கையின்போது 17.09.2006 அன்று பொத்துவில் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையும் – வான்படையும் மேற்கொண்ட தாக்குதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப். கேணல் விதுசன் / வெள்ளை, கடற்கரும்புலி லெப். கேணல் அந்தணன் / தமிழ்மாறன், கடற்கரும்புலி லெப். கேணல் கலைச்செல்வன் / சபீன், கடற்கரும்புலி மேஜர் தமிழ்த்தென்றல், கடற்கரும்புலி கப்டன் சமர்மறவன் இவர்களுடன் கடற்புலி லெப். கேணல் ஸ்ரிபன், கடற்புலி லெப். கேணல் லிங்கவேந்தன், கடற்புலி கப்டன் ஈழப்பதி உட்பட ஏனைய மாவீரர்களின் 11 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
“வெற்றிக்கு வித்திட்டு தாய்மண்ணின் விடியலின் கனவுடன் புயலாக வீசிய தேசத்தின் உயிராயுதங்கள்”
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”