லெப். கேணல் யோகா, லெப். கேணல் பவா வீரவணக்க நாள் இன்றாகும்.
மட்டக்களப்பு மாவட்டம் காயன்கேணிப் பகுதியில் 20.08.2004 அன்று சிறிலங்கா படையினரின் ஒத்துழைப்புடன் தேசவிரோதிகள் (கருணா குழு) நடத்திய தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய விடுதலைப் புலிகளின் மட்டு – அம்பாறை மாவட்ட அரசியற்துறை நிர்வாகப் பொறுப்பாளர் லெப். கேணல் பாவா / தயாசீலன், மட்டு – அம்பாறை மாவட்ட தொண்டு நிறுவனங்களிற்கான இணைப்பாளரான லெப். கேணல் யோகா ஆகிய மாவீரர்களின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தாயக விடுதலை கனவுகளுடன் கல்லறையில் உறங்கும் மாவீரச் செல்வங்கள்….!
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக்
காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”