எல்லாளன் நடவடிக்கையில் காவியமான கரும்புலி மறவர்களின் நினைவாய் “எல்லாளன்” படக் காட்சிகளை திரைக்காவியாமாக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை 17.02.2008 அன்று பளைப் பகுதியில் இடம்பெற்ற சிறிலங்காப் படையினரின் எறிகணை தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட நிதர்ன முதன்மைப் படப்பிடிப்பாளர் / போராளிக் கலைஞன் லெப். கேணல் தவம், மேஜர் புகழ்மாறன், போருதவிப்படை வீரர் சுப்பிரமணியம், போருதவிப்படை வீரர் சிறிமாறன் ஆகிய மாவீரர்களின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளின் திருமுகங்கள்.!
தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”