மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை, வாகனேரிப் பகுதியில் 06.12.2001 அன்று சிறிலங்காப் இராணுவத்துடன் ஏற்பட்ட எதிர்பாராத நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்மாறை மாவட்ட துணைத் தளபதி லெப். கேணல் ஜீவன் / எழிலவன், கப்டன் சேகரன், வீரவேங்கை தயாபரன், வீரவேங்கை சுஜீவன், வீரவேங்கை குகராஜ், வீரவேங்கை திருமகன், வீரவேங்கை சதானந்தன், வீரவேங்கை சங்கர் ஆகிய மாவீரர்களின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தாயக விடுதலை கனவுகளுடன் கல்லறையில் உறங்கும் மாவீரச் செல்வங்கள்….!
இதே நாளில்
யாழ். மாவட்டம் மட்டுவில் பகுதியில் 06.12.2000 அன்று சிறிலங்கா இராணுவத்தினர் மீதான தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 2ம் லெப்டினன்ட் ஈழவண்ணன் ஆகிய மாவீரரின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக்
காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”