இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home அலைகடல் நாயகர்கள் லெப். கேணல் சேரமான்

லெப். கேணல் சேரமான்

லெப்.கேணல்

சேரமான்

கதிர்காமத்தம்பி சஞ்சயன்

இளவாலை வடக்கு, யாழ்ப்பாணம்

வீரப்பிறப்பு: 27.12.1972

வீரச்சாவு: 21.04.2001

முல்லைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் வலிந்த தாக்குதலில் வீரச்சாவு


கடற்சிறுத்தை படையணி தளபதி லெப். கேணல் சேரமான்

1991 ஆண்டு பிற்பகுதியில் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட சேரமான் கடற்புலிகளின் இரண்டாவது பயிற்சிப் பாசறையில் தனது அடிப்படை பயிற்சியை நிறைவு செய்து பின்னர் தலைவரின் சிந்தனைக்கு அமைவாகவும் கடற்புலிகளின் பலத்தை அதிகரிக்கும் நோக்கோடும் பலகரையோரப் பிரதேசங்கள். கடற்புலிகளுக்கு அரசியல் பணிகளுக்காக வழங்கப்படுகிறது.அந்தவகையில் இவரும் அந்த அரசியல் பணிக்கு செல்கிறாா்.

28.02.1992 அன்று யாழ். மாவட்டம் தாளையடிக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படையினருக்கு எதிராக ஒரு வலிந்த தாக்குதல் முயற்சி மேற்கொளளப்பட்டது; அம்முயற்சி வெற்றியளிக்காத போதிலும் அம்முற்சியில் நாம் கற்றுக்கொண்ட பாடத்தின் அடிப்படையில் கடற்புலிகள் அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரி ஆரம்பிக்கப்படுகிறது. இவ் பயிற்சிக் கல்லூரிக்கு போராளிகள் உள்வாங்கப்பட்டபோது சேரமானும் உள்வாங்கப்படுகிறார். அங்கு பயிற்சி முடிவடைந்தும் ஆசீர் படையணியில் இணைக்கப்படுகிறாா். (இப்படையணியானது கடல் விநியோகம் மற்றும் கடற் தாக்குதலனியாகவும் செயற்பட்டது. குறிப்பாக யாழ்ப்பாணத்திற்க்கும் – வன்னிக்குமான போக்குவரத்துப் பாதையாக செயற்பட்ட கிளாலி நீரேரியில் மக்களுக்கான பாதுகாப்பையும் இப் படையணியினரே வழங்கினர்.) அங்கு ஏனைய பயிற்சிகளைவிட தொலைத்தொடர்புத் துறையில் முன்னனி வகித்ததால், தொலைத் தொடர்புத்துறைக்கு உள்வாங்கப்பட்டு மேலதிக பயிற்சிகள் வழங்கப்பட்டது. அதன் பின் போராளிகளுக்கு தொலைத்தொடர்பு சம்பந்தமான வகுப்புகள் எடுத்துக் கொண்டிருநத வேளையிலும் கடற்சமர்களில் பங்குகொண்டு தனது திறமையையும் வெளிக்காட்டத் தவறவில்லை.

அவ் வேளையில் தான் கடற்புலிகளின் சிறப்புத் தளபதியின் வேண்டுகோளுக்கு இணங்க சர்வதேச கடற்பரப்பில் பணியாற்றிக் கொண்டிருந்த போராளிகளுக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். அங்கு கடமையாற்றிக் கொண்டிருந்த வேளையில் தமிழீழத்தில் முல்லைத்தீவு இராணுவ முகாம்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அத்தாக்குதலில் வீரச்சாவடைந்த கடற் சிறுத்தைகளின் பொறுப்பாளரான லெப். கேணல் சேரனின் இடத்திற்க்கு சேரமான் பொறுப்பாளராக 17.09.1996 அன்று நியமிக்கப்படுகிறார்.

தமிழீழத்தில் நடைபெற்ற பல கடற்சமர்களில் கடற்புலிகளுக்கு உதவியாகவும், தனித்துவமாகவும் இச் சிறுத்தைப் படையணி பங்குபற்றியது. அதன் பின் தலைவரின் கட்டளைக்கு அமைவாக கடற் சிறுத்தைப் படையணி கடற்புலிகளுடன் இணைக்கப்படுகிறது. அவ்வேளையில் தனது படையணியனருடன் கடற்புலிகளுக்கு வந்த சேரமான் கடற்புலிகளின் விநியோகப் பாதுகாப்பிற்கான சமரிலும் சரி கடற்புலிகளால் திட்டமிட்டு நடாத்தப்பட்ட வலிந்த தாக்குதலாகிலும் சரி தனது ஆற்றலை வெளிப்படுத்தத் தவறவில்லை.

அத்தோடு ஒய்வுநேரங்களில் போராளிகளுக்கு தொலைத்தொடர்பு சம்பந்தமான வகுப்புகள் எடுப்பதிலும் தனது கடல் அனுபவமாகிலும் சரி தனது கடற்சண்டை அனுபவங்களையும் நகைச்சுவையோடும் சொல்லிக்கொடுத்த ஒரு ஆசான். இப்படியாக ஒவ்வொரு விடயத்திலும் போராளிகளை வளர்த்து விடவேண்டும் என்கிற அவா அவனுள் இருந்து இப்படியான ஒரு உன்னத போராளி.

21.04.2001 அன்று எமது விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போராளிகளுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுககொண்டிருந்த கடற்தாக்குதல் அணிமீது முல்லைத்தீவுக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படையினரின் வலிந்த தாக்குதலில் இறுதிவரை எப்படி சண்டை பிடித்தார் என அவரது கட்டளைகள் எப்படி இருந்ததென்று கட்டளை மையத்தில் இருந்த அனைவருக்கும் தெரியும். இறுதிவரையும் உறுதி தளராமல் பதற்றமில்லாமல் கட்டளைகள் பிறப்பித்தபடி அணிகளை (படகுகளை) பிரியவிடாமல் எல்லோரையும் ஒன்றாக்கியபடி ஒரு மூர்க்கத்தனமாக போராடி லெப். கேணல் சேரமான், மேஜர் ஜீவகன், மேஜர் ஆழியன், மேஜர் கருவேலன், மேஜர் ஆர்வலன், மேஜர் மஞ்சரி, கப்டன் சிவகுமரன் / சந்திரன், கப்டன் உலகநம்பி, கப்டன் மாலினி, கப்டன் மைதிலி / சுரேகா, லெப்டினன்ட் சோலையரசன், லெப்டினன்ட் அறிஞன், 2ம் லெப்டினன்ட் வண்ணன் / ஆனந்தன், 2ம் லெப்டினன்ட் அன்புக்கிளி, வீரவேங்கை செம்பியவண்ணன் ஆகிய வேங்கைகள் வீரச்சாவடைந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கவசஅணி வீரன் லெப்.கேணல் சிந்து.!

11.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற மோதலில் சிங்கள பயங்கரவாத அரசின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப் கேணல் இம்ரான்- பாண்டியன் படையணியைச் சேர்ந்த லெப் கேணல் சிந்து அவர்களின்...

கடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி, கடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனா, கடற்கரும்புலி லெப். கேணல் அன்பு, கடற்கரும்புலி மேஜர் மலர்நிலவன் வீரவணக்க நாள் இன்றாகும். 11.05.2006 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில்...

கரும்புலி மேஜர் மறைச்செல்வன்.!

நெஞ்சுக்குள் நெருப்பெரித்தவன் கரும்புலி மேஜர் மறைச்செல்வன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 10.05.2000 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் நடைபெற்ற...

தமிழீழத்தின் வீர ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்…

“வசந்தன் மாஸ்ரர்” என்ற அர்ப்பணிப்பு மிக்க உன்னதமான போராளியை 1993 தமிழீழ படைத்துறைப்பள்ளியில் பார்த்தேன் உயரமான, கறுத்த, மிடுக்கான உருவம், மாஸ்ரரை பார்த்தால் அல்லது அவர் வந்திருக்கிறார் என்றால் எமக்கு முன் படைத்துறைப்பள்ளியில்...

Recent Comments