இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

லெப்.கேணல் சேனாதிராசா

மட்டக்களப்பு மருத்துவமனையில் 13.07.2004 அன்று வீரச்சாவினை அணைத்துக் கொண்ட மட்டு. நகர அரசியற்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் சேனாதிராஜாவின் 16 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். மட்டக்களப்பு நகரில் அரசியற் செயற்பாட்டில் ஈடுபட்டுவந்த லெப்.கேணல் சேனாதிராஜா 05.07.2004 அன்று அரசடிச் சந்திப் பகுதியில் வைத்து சிறிலங்கா படை ஒட்டுக்குழுவின் துப்பாக்கிச் சூட்டில் விழுப்புண்ணடைந்து மட்டக்களப்பு மருத்துவமனையில் பண்டுவம் (சிகிச்சை) பெற்றுவரும் வேளை 13.07.2004 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
 
அரசியற்துறையின் முக்கிய போராளியான லெப்.கேணல் சேனாதிராஜா, மட்டக்களப்பு மண்ணில் துரோகச் செயற்பாடு முறியடிக்கப்பட்ட பின்னர் மீளவும் மட்டக்களப்பு நகர அரசியற் பொறுப்பாளராக கடமையேற்று விடுதலைப் போராட்டத்தை மீளக்கட்டியமைக்கும் பணியினை முழுமூச்சாக மேற் கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கவசஅணி வீரன் லெப்.கேணல் சிந்து.!

11.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற மோதலில் சிங்கள பயங்கரவாத அரசின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப் கேணல் இம்ரான்- பாண்டியன் படையணியைச் சேர்ந்த லெப் கேணல் சிந்து அவர்களின்...

கடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி, கடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனா, கடற்கரும்புலி லெப். கேணல் அன்பு, கடற்கரும்புலி மேஜர் மலர்நிலவன் வீரவணக்க நாள் இன்றாகும். 11.05.2006 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில்...

கரும்புலி மேஜர் மறைச்செல்வன்.!

நெஞ்சுக்குள் நெருப்பெரித்தவன் கரும்புலி மேஜர் மறைச்செல்வன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 10.05.2000 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் நடைபெற்ற...

தமிழீழத்தின் வீர ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்…

“வசந்தன் மாஸ்ரர்” என்ற அர்ப்பணிப்பு மிக்க உன்னதமான போராளியை 1993 தமிழீழ படைத்துறைப்பள்ளியில் பார்த்தேன் உயரமான, கறுத்த, மிடுக்கான உருவம், மாஸ்ரரை பார்த்தால் அல்லது அவர் வந்திருக்கிறார் என்றால் எமக்கு முன் படைத்துறைப்பள்ளியில்...

Recent Comments