இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் லெப். கேணல் சூட்டி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

லெப். கேணல் சூட்டி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

லெப். கேணல் சூட்டி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
யாழ். மாவட்டம் மண்டைதீவு படைத்தளம் மீது 28.06.1995 அன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப். கேணல் சூட்டி, மேஜர் தமிழ்மாறன் / கஜேந்திரன், கப்டன் மாறன், கப்டன் எழிற்செல்வன் / ஜவான், லெப். அகிலன், லெப். உதயா, 2ம் லெப். இசையழகன், வீரவேங்கை பாமினி ஆகிய மாவீரர்களின் 22 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தமிழீழத் தேசியத் தலைவரின் நேரடி நெறிப்படுத்தலில் கடற்புலிகளின் தாக்குதல் அணிகள் துணையுடன் மண்டைதீவில் தரையிறங்கிய விடுதலைப் புலிகளின் படையணிகள் அங்கிருந்த சிறிலங்கா படைத்தளத்தைத் குறுகிய நேரத்தில் தாக்கியழித்து சிறிலங்கா படையினருக்கு பேரிழப்பை ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தாய்மண்ணின் விடியலின் கனவுகளுடன் கல்லறையில் உறங்கும் மாவீரச் செல்வங்கள்….!

 

லெப்.கேணல் சூட்டி (தம்பிமுத்து கோவிந்தராஜன் – அம்பாறை)
மேஜர் தமிழ்மாறன் (கஜேந்திரன்) (அரசரட்ணம் பாலகிருஸ்ணன் – தோப்பூர், திருகோணமலை)
கப்டன் மாறன் (குணநாயகம் குலேந்திரன் – அல்வாய், யாழ்ப்பாணம்)
கப்டன் எழிற்செல்வன் (ஜவான்) (செல்லப்பு தயாபரன் – புத்தூர், யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் அகிலன் (அருச்சுனன் சிவரதன் – பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் உதயா (கந்தையா சித்திரகுமாரி – கண்டி, சிறிலங்கா)
2ம் லெப்டினன்ட் இசையழகன் (கிறிஸ்ரி) (கந்தையா கணேசமுர்த்தி – வாழைச்சேனை, மட்டக்களப்பு)
வீரவேங்கை பாமினி (சின்னவன் நகுலேஸ்வரி – புத்தூர், யாழ்ப்பாணம்)

 

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக்
காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

லெப். கேணல் பொற்கோ குறித்து பொட்டம்மான் கூறுகையில் ….

தளபதி லெப். கேணல் பொற்கோ பற்றி அம்மான் சொன்னது……….. லெப். கேணல் பொற்கோ சாதாரண போராளிகளை விட பல்வேறு விடயங்களில் மாறுபட்டவராக இருந்தார்” என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் தெரிவித்துள்ளார். லெப்....

லெப்.கேணல் லக்ஸ்மன் .!

நிலையான நினைவாகிச் சென்றோன் நினைவோடு தமிழீழம் வெல்வோம்.!     ‘தமிழீழம்’   இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல.   ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ஒரே கடல், ஒரு தமிழீழம்; தமிழீழம் தனியென்றே...

லெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

மட்டக்களப்பு மாவட்டம் பூமாஞ்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது 28.12.1994 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப். கேணல் லக்ஸ்மன் உட்பட பதினெட்டு மாவீரர்களின்...

மேஜர் செங்கோல்

பெயருக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்களில் செங்கோலும் இணைந்து கொண்டான். நட்பிலும் இவன் செங்கோல் தவறியதில்லை. கடமையில், கட்டுப்பாட்டில், மனித நேயத்தில், தமிழர் பண்பாட்டில் நடுநிலை தவறாது ‘செங்கோல்’ என்ற...

Recent Comments